Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

வெறும் 7 ரூபாய் தான்.. பறிபோன அரசு பணி! 8 ஆண்டுக்கு பின் மீண்டும் கண்டக்டர் வேலை! ஹைகோர்ட் அதிரடி

Subscribe to Oneindia Tamil

சென்னை: தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றியவர் தனது பையில் ரூ.7 கூடுதலாக வைத்திருந்த குற்றச்சாட்டில் அதிரடியாக பணி நீக்கம் செய்யப்பட்டார். இதனை எதிர்த்து அவர் தொடர்ந்த வழக்கில் சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவிட்டுள்ளார். இதன்மூலம் அவர் 8 ஆண்டு போராட்டத்துக்கு பின் அவருக்கு மீண்டும் கண்டக்டர் பணி கிடைக்க உள்ளது.

தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகத்தில் கண்டக்டராக பணியாற்றி வந்தவர் அய்யனார். இவர் கடலூர் - பண்ருட்டி இடையே இயங்கும் T17A எனும் பஸ்சில் பணியாற்றி வந்தார்.

Govt bus Conductor sacked for having extra Rs.7 in his bag after 8 years Chennai High Court ordered to reinstate

கடந்த 2015ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 23ம் தேதி அந்த பஸ்சில் அய்யனார் பணியில் இருந்தார். அப்போது பஸ் கடலூரில் இருந்து பண்ருட்டி நோக்கி சென்று கொண்டிருந்தது. பஸ்சில் மொத்தம் 24 பயணிகள் பயணித்தனர்.

இந்த வேளையில் திடீரென்று டிக்கெட் பரிசோதகர் பஸ்சில் ஏறினார். அவர் பயணிகள் அனைவரும் டிக்கெட் எடுத்து இருக்கிறார்களா? என்பதை சோதனையிட்டார். அப்போது பஸ்சில் 23 பயணிகள் தங்களின் டிக்கெட்டுகளை பரிசோதகரிடம் காண்பித்தனர். ஒரு பெண் மட்டும் டிக்கெட் இன்றி இருந்தார்.

இதையடுத்து அவரிடம் பரிசோதகர் டிக்கெட் காட்டும்படி கூறினர். இந்த வேளையில் அந்த பெண், ‛‛நான் ரூ.5 கொடுத்து டிக்கெட் கேட்டேன். கண்டக்டர் இன்னும் டிக்கெட் கொடுக்கவில்லை'' என தெரிவித்தார். இதையடுத்து கண்டக்டர் அய்யனாரிடம் பரிசோதகர்கள் விசாரித்தனர். அவர், அந்த பெண்ணிடம் டிக்கெட் வழங்கிவிட்டதாக கூறினார். ஆனால் அந்த பெண் தொடர்ந்து டிக்கெட் தரவில்லை என உறுதியாக கூறினார்.

இதையடுத்து அய்யனாரின் பணப்பை சோதனையிடப்பட்டது. இந்த வேளையில் அதில் ரூ.7 அதிகமாக இருந்தது தெரியவந்தது. மேலும் அவர் இதற்கு முன்பும் இதுபோன்ற புகார்களில் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இதனால் விளக்கம் கேட்டு கண்டக்டர் அய்யனாருக்கு நோட்டீஸ் அனுப்பி வைக்கப்பட்டது. மேலும் துறை ரீதியான விசாரணையும் மேற்கொள்ளப்பட்டது.

இந்த விசாரணையின் முடிவில் கண்டக்டர் அய்யனார் பணி நீக்கம் செய்யப்பட்டார். இந்த பணி நீக்க உத்தரவு என்பது 2015 டிசம்பர் மாதம் 10ம் தேதி பிறப்பிக்கப்பட்டது. இதனால் அய்யனார் மிகுந்த மனவருத்தம் அடைந்தார். இதனால் அவர் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு ஒன்றை தாக்கல் செய்தார்.

இதுதொடர்பாக அவர் தாக்கல் செய்த மனுவில், ‛‛அரசு போக்குவரத்து கழகம் என் மீதான குற்றச்சாட்டு பற்றி சரியாக விசாரிக்கவில்லை. என் தரப்பு நியாயங்களை கேட்கவில்லை. மேலும் என் மீது குற்றம்சாட்டிய பெண்ணிடமும் விசாரிக்கவில்லை. ஆனாலும் பணி நீக்கம் செய்துள்ளனர். இதனால் பணி நீக்க உத்தரவை ரத்து செய்ய வேண்டும்'' என கூறியிருந்தார்.

இந்த மனு மீதான விசாரணை நடந்து வந்தது. இந்நிலையில் தான் 8 ஆண்டுகளுக்கு பிறகு தற்போது சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாக உத்தரவு ஒன்றை பிறப்பித்துள்ளது. அதன்படி அய்யனாரின் பணி நீக்கம் செய்து பிறப்பித்த அரசு போக்குவரத்து கழகத்தின் உத்தரவை நீதிமன்றம் ரத்து செய்தது.

மேலும் 6 வாரத்துக்குள் பிடித்தம் செய்யப்பட்ட தொகையுடன் அய்யனாரை மீண்டும் பணியில் சேர்க்க வேண்டும் என அதிரடியாக உத்தரவிட்டுள்ளது. இதன்மூலம் இழந்த அரசு பணியை அய்யனார் 8 ஆண்டு சட்ட போராட்டத்துக்கு பிறகு மீண்டும் பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+