அரசு - இலவசம்! பைசா செலவில்லாமல் தையல் மிஷின்! தினமும் ₹500 சம்பளம்! PM விஸ்வகர்மா சீக்ரெட் தெரியுமா

Subscribe to Oneindia Tamil

சென்னை: மத்திய அரசின் "பி.எம் விஸ்வகர்மா" ( PM Vishwakarma Program) திட்டம் இப்போது சாமானிய மக்கள், குறிப்பாகப் பெண்கள் மற்றும் பாரம்பரியக் கைவினைஞர்கள் மத்தியில் கவனத்தை பெற்றுள்ளது. தையல் கலை தெரிந்த பெண்கள் மற்றும் 18 வகையான பாரம்பரியத் தொழில்களில் ஈடுபடுபவர்களை ஊக்குவிக்கவே இந்தத் திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. உபகரண உதவியுடன் மட்டும் இல்லாமல், பயிற்சி மற்றும் நிதி உதவியும் இதில் வழங்கப்படுவதால் இது பலரின் கவனத்தை ஈர்த்து வருகிறது.. அதனால்தான் பெண்களின் கவனத்தை இது பெற்று வருகிறது.

"பி.எம் விஸ்வகர்மா" திட்டத்தின் கீழ் விண்ணப்பிக்கும் பெண்களுக்குத் தையல் இயந்திரம் வாங்க ₹15,000 மதிப்பிலான மின்-வவுச்சர்கள் (e-vouchers) அல்லது நேரடி நிதி உதவி வழங்கப்படுகிறது.

PM Vishwakarma Scheme 2026 Government Free Sewing Machine Scheme Free Schemes for Women Central Government Welfare Schemes 2026

அதேபோல் தச்சர், பொற்கொல்லர், குயவர், காலணி தைப்பவர் உள்ளிட்ட 18 தொழில் பிரிவினருக்கும் அவர்களின் தொழில் சார்ந்த கருவிகளை வாங்க ₹15,000 மானியம் வழங்கப்படுகிறது. இந்தத் தொகையைத் திருப்பிச் செலுத்த வேண்டிய அவசியம் இல்லை.


பயிற்சி - கால அவகாசம்

திட்டத்தில் சேருவோருக்கு முதலில் 5 முதல் 7 நாட்கள் வரை அடிப்படைப் பயிற்சி வழங்கப்படுகிறது. தேவைக்கேற்ப 15 நாட்கள் வரை மேம்பட்ட பயிற்சியும் அளிக்கப்படும்.

இந்தப் பயிற்சி காலத்தில் பயனாளிகளுக்கு தினசரி ₹500 ஊக்கத்தொகை வழங்கப்படுகிறது. தொழில் திறன்களை கற்றுக்கொள்ளும் போதே வருமானமும் கிடைப்பதால் இது பலருக்கும் உதவியாக உள்ளது. பயிற்சி முடிந்ததும் அரசு அங்கீகாரம் பெற்ற 'விஸ்வகர்மா சான்றிதழ்' மற்றும் அடையாள அட்டை வழங்கப்படும்.

பயிற்சி முடித்து தொழிலை விரிவுபடுத்த விரும்புவோருக்கு சொத்து பிணையம் இல்லாமல் குறைந்த வட்டியில் கடன் வழங்கப்படுகிறது. முதற்கட்டமாக ₹1 லட்சம் வரை கடன் கிடைக்கும். அதைச் சரியாகத் திருப்பிச் செலுத்துபவர்களுக்கு இரண்டாம் கட்டமாக ₹2 லட்சம் வரை கடன் வழங்கப்படும். இந்த கடனுக்கான வட்டி விகிதம் 5 சதவீதம் மட்டுமே. மற்ற வங்கி கடன்களுடன் ஒப்பிடும்போது இது குறைவான வட்டி என்பதால் சுயதொழில் செய்பவர்களுக்கு உதவியாக உள்ளது.

யாரெல்லாம் விண்ணப்பிக்கலாம்?

18 வயது பூர்த்தியடைந்த சுயதொழில் செய்ய விருப்பமுள்ளவர்கள் விண்ணப்பிக்கலாம். குடும்பத்தில் ஒருவர் மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயன்பெற முடியும். ஆனால் அரசுப் பணியில் இருப்பவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் விண்ணப்பிக்க முடியாது. கடந்த 5 ஆண்டுகளில் PMEGP, PM SVANidhi, Mudra போன்ற திட்டங்களில் கடன் பெற்றவர்கள் சில நிபந்தனைகளுக்கு உட்பட்டவர்கள்.

எப்படி விண்ணப்பிப்பது?

இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க ஆதார் அட்டை, ரேஷன் அட்டை, வங்கி கணக்கு புத்தகம் மற்றும் மொபைல் எண் போன்றவற்றுடன் பொதுச்சேவை மையங்களை அணுகலாம். ஆன்லைன் மூலம் பதிவு செய்யப்பட்டு, கிராம பஞ்சாயத்து அல்லது பேரூராட்சி அளவில் ஒப்புதல் கிடைத்த பிறகு சலுகைகள் வழங்கப்படும். தமிழகத்தின் பல மாவட்டங்களில் இத்திட்டம் குறித்து விழிப்புணர்வு அதிகரித்து வருவதால், தகுதியுள்ளவர்கள் விரைவில் விண்ணப்பிப்பது நல்லது...!!

இந்தத் திட்டத்திற்கு விண்ணப்பிக்க எவ்விதக் கட்டணமும் கிடையாது. பொதுச் சேவை மையங்களில் (CSC) இதற்கான பதிவுகளைத் தகுதியுள்ளவர்கள் எளிதாகச் செய்துகொள்ளலாம். கூடுதல் தகவல்களுக்கு அதிகாரப்பூர்வ வெப்சைட்டில் pmvishwakarma.gov.in பக்கத்தை பார்க்கலாம்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+