ஜூன் 14ம் தேதி தான் கடைசி... தமிழ்நாட்டில் இயங்கும் ஆம்னி பஸ்கள்.. அரசு கடும் எச்சரிக்கை
சென்னை: தமிழ்நாடு பதிவெண் இல்லாமல், தமிழ்நாட்டின் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் வரும் ஜூன் 14ம் தேதி முதல் மாநிலத்தில் இயங்க அனுமதி இல்லை என அரசுப் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
கோவை, திருநெல்வேலி, மதுரை, கன்னியாகுமரி உள்பட தமிழ்நாட்டில் எல்லா நகரங்களில் இருந்தும் சென்னைக்கு தினசரி ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன. ஆயிரக்கணக்கான பேருந்துகள் தினசரி சென்னைக்கு வந்து செல்கின்றன. சென்னைக்கு மட்டுமல்லாமல், கோவையில் இருந்து தென்மாவட்டங்களுக்கும் ஆம்னி பேருந்துகள் இயக்கப்படுகின்றன.

பொதுவாக ஆம்னி பேருந்துகளில் சென்னையில் இருந்து வெள்ளி, சனி, ஞாயிறு போன்ற நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதேபோல் மற்ற ஊர்களில் இருந்து சென்னைக்கு சனி, ஞாயிறு, திங்கள் ஆகிய 3 நாட்களில் கூட்டம் அதிகமாக இருக்கும். அதேநேரம் முகூர்த்த நாட்கள், விடுமுறை தினங்கள், பண்டிகை காலங்களில் ஆம்னி பேருந்துகளில் பயணிப்போர் எண்ணிக்கை மிக அதிகமாக இருக்கும்.
குறிப்பாக தீபாவளி, பொங்கல், தமிழ் புத்தாண்டு, ஆயுத பூஜை, கிறிஸ்துமஸ், ரம்ஜான், புத்தாண்டு போன்ற பண்டிகை காலங்களில் சொந்த ஊருக்கு செல்லும் பயணிகள் தனியார் ஆம்னி பேருந்துகளையே அதிகம் விரும்புகிறார்கள். ரயில், மற்றும் பேருந்துகளில் இடம் கிடைக்காது என்பதால் ஆம்னி பேருந்தகளை அதிகம் விரும்புகிறார்கள். நேரடி ரயில் வசதி இல்லாத ஊர்களில் ஆம்னி பேருந்துகள் தான் தற்போது மக்களுக்கு வரப்பிரசாதமாக இருக்கிறது.
இந்நிலையில் தமிழ்நாட்டை பொறுத்தவரை தமிழ்நாட்டிற்குள் மட்டும் ஓடும் ஆம்னி பேருந்துகள் அதிக அளவில் உள்ளது. அதேநேரம் வெளிமாநிலங்கள் செல்லும் பேருந்துகளும் கணிசமாக உள்ளன.. தமிழ்நாட்டிற்குள் மட்டும் ஓடும் ஆம்னி பேருந்துகள் போக்குவரத்து விதிகளின் படி, தமிழ்நாடு வாகன பதிவு எண்ணாக இருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் ஓடும் கணிசமான ஆம்னி பேருந்துகள் தமிழக பதிவெண்ணுடன் இல்லை.. கர்நாடகா, புதுச்சேரி, அஸ்ஸாம் உள்பட வேறுமாநிலங்களில் பதிவு செய்து ஓடுகிறது.
இப்படி வெளிமாநில பதிவெண் கொண்ட 652 ஆம்னி பேருந்துகளால் ஆண்டொன்றுக்கு தமிழக அரசுக்கு ரூ.28.16 கோடி இழப்பு ஏற்படுகிறது என்றும் வெளிமாநில பதிவு எண் கொண்ட பேருந்துகளை தமிழக பதிவு எண்ணாக மாற்ற வேண்டும் என்று அரசு வலியுறுத்தி வந்தது.
இதற்கான அவகாசத்தை ஆம்னி பேருந்து சங்கத்தினர் நீட்டிப்பு செய்ய வலியுறுத்தியதால், அவ்வப்போது அவகாசத்தை அரசு நீட்டித்து வந்தது. இந்நிலையில் தமிழ்நாடு பதிவெண் இல்லாமல், தமிழ்நாட்டின் அனுமதிச் சீட்டு பெறாமல் உள்ள ஆம்னி பேருந்துகள் வரும் ஜூன் 14ம் தேதி முதல் மாநிலத்தில் இயங்க அனுமதி இல்லை என அரசுப் போக்குவரத்து துறை அறிவித்துள்ளது.
-
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ்












Click it and Unblock the Notifications