தொகுதி நம்பர்ஸை பார்க்காதீங்க.. பாஜகவுக்கு ஆதரவு தாங்க.. விஜயகாந்திடம் வலியுறுத்திய கோயல்!
சென்னை: தொகுதி எண்ணிக்கையை குறித்து கவலைப்படாதீர்கள் என்றும் மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என்றும் தேமுதிக பொதுச் செயலாளர் விஜயகாந்திடம் தமிழக மேலிட பொறுப்பாளர் பியூஷ் கோயல் வலியுறுத்தியதாக கூறப்படுகிறது.
அதிமுகவுடன் ரகசிய கூட்டணி பேச்சுவார்த்தையை பாஜக, பாமக உள்ளிட்ட கட்சிகள் நடத்தி வந்ததாக கூறப்பட்டது. கடந்த 14-ஆம் தேதி சென்னை வந்த தமிழக பாஜக பொறுப்பாளர் பியூஷ் கோயல் தொழிலதிபர் வீட்டில் அதிமுக நிர்வாகிகளை சந்தித்து முதல் கட்ட பேச்சுவார்த்தை முடித்தார்.

பாஜக கூட்டணி
இந்த நிலையில் தேமுதிகவும் கூட்டணி பேச்சுவார்த்தை நடத்தி வந்ததாக கூறப்பட்டது. இக்கட்சி அதிமுகவுடன் கூட்டணி வைப்பதாக ஒரு பேச்சு எழுந்தது. இந்த நிலையில் இன்று அதிமுகவுடன் பாமக, பாஜக கூட்டணி என முடிவு செய்யப்பட்டது.

பேச்சுவார்த்தை
அதன்படி தேமுதிக கூட்டணியும் இன்று முடிவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. இதையடுத்து தேமுதிக தலைவர் விஜயகாந்தை பாஜகவின் பியூஷ் கோயல் சந்தித்தார். அப்போது தொகுதி கூட்டணி பேச்சுவார்த்தை பேசப்பட்டது.

இழுபறி
ஆனால் தேமுதிக கேட்கும் தொகுதிக்கு அதிமுக கூட்டணி உடன்படவில்லை என கூறப்படுகிறது. இதனால் விஜயகாந்தின் கூட்டணி இழுபறியில் இருந்தது.

விஜயகாந்த்
அப்போது தொகுதிகளின் எண்ணிக்கை குறித்து கவலைப்படாமல் 40 தொகுதிகளிலும் வெற்றி பெற்று மத்தியில் பாஜக ஆட்சி அமைப்பதற்கு ஒத்துழைப்பு வழங்க வேண்டும் என விஜயகாந்திடம் கோயல் கேட்டு கொண்டதாக தெரிகிறது. ஆனால் இதற்கு விஜயகாந்த் உடன்படவில்லையாம்.
-
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது? -
இடைத்தேர்தலில் பொது வேட்பாளர்களை நிறுத்தி வெற்றி பெறச் செய்வோம்.. விஜய்க்கு அன்புமணி எச்சரிக்கை -
தமிழ்த்தாய் வாழ்த்து விவகாரத்தை கையில் எடுத்த விஜய்.. உள்துறை அமைச்சகத்திடம் சொல்லுங்க.. விஜய் வைத்த கோரிக்கை! -
எடப்பாடி வீட்டிற்கு வந்த எஸ்பி வேலுமணி.. சிவி சண்முகம் மட்டும் மிஸ்ஸிங்.. தனித்துவிடப்படுகிறாரா?












Click it and Unblock the Notifications