களமிறக்கப்பட்ட ஜிபிஎஸ்.. சென்னைக்கு வருகிறது "புல்லட் ரயில்" சேவை.. வந்தே பாரத் எல்லாம் ஓரம்போ!
சென்னை: சென்னையில் விரைவில் புல்லட் ரயில் சேவை தொடங்க உள்ளது. இதற்கான ஆரம்பகட்ட பணிகள் தொடங்கி உள்ளன.
இந்தியாவில் வந்தே பாரத் ரயில்களுக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ள நிலையில் விரைவில் புல்லட் ரயில் சேவைகளை தொடங்கவும் மத்திய அரசு ஆலோசனை செய்து வருகிறதாம். புல்லட் ரயில் இந்தியாவில் தொடங்கப்படும் என்பது 2014 தேர்தலுக்கு முன் பாஜக கொடுத்த வாக்குறுதி. ஆனால் இந்த வாக்குறுதி அதன்பின் வெறும் கனவாகவே இருந்தது.

இந்த திட்டம் இதுவரை நாடு முழுக்க செயல்படுத்தப்படவில்லை. தற்போது புல்லட் ரயில் மும்பை - அகமதாபாத் இடையே கட்டப்பட உள்ளது . இதற்கான முதல் கட்ட பணிகள் மட்டுமே தொடங்கி உள்ளன. ஜப்பான் அரசுடன் இணைந்து முதல் கட்ட பணிகள் நடக்கின்றன. இந்த நிலையில் தேசிய ரெயில் பிளான் சார்பாக எதிர்காலத்தில் 7 ரூட்களில் புல்லட் ரயில்கள் கொண்டு வரப்பட உள்ளன,
அதன்படி டெல்லி - வாரணாசி
டெல்லி - அகமதாபாத்
மும்பை நாக்பூர்
மும்பை - ஹைதராபாத்
சென்னை - பெங்களூர் - மைசூர்
டெல்லி - அமிர்தசரஸ்
வாரணாசி - ஹவுரா
ஆகிய ரூட்டில் இந்த புல்லட் ரயில்கள் கொண்டு வரப்பட உள்ளன., சென்னை - பெங்களூர் - மைசூர் சேவை தமிழ்நாட்டின் முதல் புல்லட் சேவையாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான ஜிபிஎஸ் ஆய்வுகள் தற்போது நடக்க உள்ளன.
ஜிபிஎஸ் ஆய்வு: ஜிபிஎஸ் ஆய்வு என்றால் சென்னை பெங்களூர் இடையே புல்லட் ரூட் அமைப்பதற்கான ஆய்வு ஆகும். எந்த ரூட்டில் அமைக்கலாம். எந் பாதை புல்லட் ரயில் தண்டவாளம் அமைக்க சரியாக இருக்கும். புல்லட் ரூட் அமையும் போது எங்கு அமைந்தால் சிக்கல் ஏற்படாது என்பதை கண்டுபிடிப்பதற்காக இந்த ஜிபிஎஸ் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு உள்ளது . அடுத்து இதற்கான சர்வே பணிகள் நடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ரயில் வேகம்: கடந்த சில மாதங்களாகவே ரயில் வேகத்தை அதிகரிப்பதற்காக, ஐஐடி-மும்பையுடன் இணைந்து நேர அட்டவணையை மாற்றுவது உட்பட பல்வேறு நடவடிக்கைகளை இந்திய ரயில்வே எடுத்துள்ளது. பயணிகள் ரயில்கள் எக்ஸ்பிரஸ் சேவைகளாக மாற்றப்படுகின்றன, மேலும் பயண நேரத்தை விரைவுபடுத்த எக்ஸ்பிரஸ் சேவைகள் சூப்பர்ஃபாஸ்ட் சேவைகளாக மேம்படுத்தப்படுகின்றன.
அதிக வேக ஆற்றலை வழங்கும் வந்தே பாரத் ரயில்களின் அறிமுகம் ரயில்வே திரையில் புதிய புரட்சியாக பார்க்கப்படுகிறது. பயணிகள் சேவைகளை மேம்படுத்துவதற்கும், துரிதப்படுத்துவதற்கும் வந்தே பாரத் முக்கிய பங்களித்துள்ளது. ஜூலை 21, 2023 நிலவரப்படி, இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் 50 வந்தே பாரத் ரயில்கள் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.
ஜூலை 21, 2023 நிலவரப்படி, இந்திய ரயில்வே நெட்வொர்க்கில் 50 வந்தே பாரத் ரயில்கள் வெற்றிகரமாக அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன. இந்தியாவில் வந்தே பாரத் ரயில் அதிக கவனத்திற்கு உள்ளாகி வருகிறது. இந்த ரயிலை பயன்படுத்தும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது.
சமீபத்தில் சென்னையில் இருந்து கோயம்புத்தூருக்கு வந்தே பாரத் ரயிலை பிரதமர் மோடி திறந்து வைத்தார். சென்னை முதல் பெங்களூர் வரை ஏற்கனவே வந்தே பாரத் சேவை உள்ளது. முதல்முறையாக தமிழ்நாடு உள்ளேயே வந்தே பாரத் ரயில் சென்னை - கோவை இடையே திறக்கப்பட்டு உள்ளது. இதன் மூலம் 6 மணி நேரத்தில் கோவை செல்ல முடியும். இந்த ரயில் மக்கள் இடையே பெரிய அளவில் வரவேற்பை பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.












Click it and Unblock the Notifications