+1 மாணவர்களுக்கு குட் நியூஸ்! இந்த கேள்வி நம்பரை போட்டிருந்தாலே கருணை மதிப்பெண்!
சென்னை: 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் (Computer Science) தேர்வில் 24வது கேள்வியை எழுதியிருந்தாலே 2 மதிப்பெண்கள் வழங்கப்படும் என தேர்வுத்துறை அறிவித்துள்ளது. கேள்வி தவறாக கேட்கப்பட்டதால் கருணை மதிப்பெண் வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
தமிழ்நாட்டில் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு கடந்த மார்ச் 3 ஆம் தேதி தொடங்கி மார்ச் 25 ஆம் தேதி வரை நடைபெற்றது. இந்த தேர்வினை 7,518 பள்ளிகளில் இருந்து 3 லட்சத்து 78 ஆயிரத்து 545 மாணவர்கள், 4 லட்சத்து 24 ஆயிரத்து 23 மாணவிகள், 18, 344 தனித்தேர்வர்கள், 145 சிறைவாசிகள் என 8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுதினர்.

அதேபோல் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 5 ஆம் தேதி தொடங்கி மார்ச் 27 ஆம் தேதி முடிவடைந்தது. இந்த தேர்வினை 7,557 பள்ளிகளில் படித்த 3 லட்சத்து 89 ஆயிரத்து 423 மாணவர்களும், 4 லட்சத்து 28 ஆயிரத்து 946 மாணவிகளும், 4755 தனித் தேர்வுகளும், 137 சிறைவாசிகள் என 8 லட்சத்து 23 ஆயிரத்து 261 பேர் 3316 தேர்வு மையங்களில் எழுதினர்.
இந்நிலையில் 11 மற்றும் 12 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு விடைத்தாள்கள் திருத்தும் பணி ஏப்ரல் 4 ஆம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது. தமிழ்நாடு முழுவதும் 83 மையங்களில் விடைத்தாள் திருத்தும் பணிகள் நடைபெறுகின்றன. சுமார் 46,000 முதுநிலைப் பட்டதாரி ஆசிரியர்கள் இப்பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்நிலையில் 11 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கருணை மதிப்பெண் வழங்குவது தொடர்பாக தேர்வுத்துறை முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதாவது, 11 ஆம் வகுப்பு கணினி அறிவியல் தேர்வில் 24 கேள்வி தவறாக கேட்கப்பட்டதால் எந்த பதிலை எழுதி இருந்தாலும் 2 மதிப்பெண் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
2 மார்க் கருணை மதிப்பெண்ணாக வழங்கப்படும் என்ற அறிவிப்பு மாணவர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. வரும் மே 19 ஆம் தேதி 11 ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாக உள்ளன.
முன்னதாக, 10 ஆம் வகுப்பு சமூக அறிவியல் தேர்வில் ஒரு மதிப்பெண் பிரிவில் நான்காவது கேள்விக்கு பதில் அளித்து இருந்தாலே ஒரு மதிப்பெண் கருணை மதிப்பெண் வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.
சமூக அறிவியல் பாடத் தேர்வில், ஒரு மதிப்பெண்ணுக்கான பொருத்தமான விடை தேர்வு செய்யும் வினாக்களில், நான்காம் வினாவுக்கு, தவறான விடை இடம் பெற்றிருந்தது. 4-வது கேள்வியில் 'கூற்று: ஜோதிபா பூலே ஆதரவற்றவர்களுக்கான விடுதிகளையும், விதவைகளுக்கான காப்பகங்களையும் திறந்தார். காரணம்: ஜோதிபா பூலே குழந்தை திருமணத்தை எதிர்த்தார். விதவைகள் மறுமணத்தை ஆதரித்தார்' என்று குறிப்பிடப்பட்டிருந்தது. இந்த கேள்வியில் 2 வாக்கியங்களுமே முரணாக இருப்பதாகவும், அதற்கு கருணை மதிப்பெண் வழங்க வேண்டும் என்றும் கோரிக்கை எழுந்தது.
விடை திருத்தும் பணி மேற்கொண்டுள்ள ஆசிரியர்கள், தேர்வுத்துறை கவனத்திற்கு எடுத்துச் சென்றனர். இதையடுத்து, அதனை பரிசீலித்து, அந்த வினாவுக்கு விடையளிக்க முயற்சித்த அனைவருக்கும், கருணை மதிப்பெண்ணாக ஒரு மதிப்பெண் வழங்க தேர்வுத்துறை அனுமதி அளித்தது.
-
முதல் நாளே அமெரிக்காவுக்கு வெற்றி.. ஹார்முஸ் வழியாக 34 கப்பல்கள் சென்றன - டிரம்ப் பதிவு -
கைப்புள்ள, நாய் சேகர்னு எனக்கும் பட்ட பெயர் வைக்க தெரியும்! பிடிஆருக்கு சுந்தர் சி பதிலடி -
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
10 கோடி வீட்டை 100 கோடிக்கு விற்ற நடிகை மீனா.. சென்னையில் நில மதிப்பு ராக்கெட் போல் உயர்ந்த இடங்கள் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
வார்த்தையை விட்ட எடப்பாடி பழனிசாமி.. வரிந்து கட்டிய பிரேமலதா.. செல்போனில் காரசார உரையாடல் -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
மகளிருக்கு டபுள் ஜாக்பாட்.. மகளிர் உரிமை தொகை + ரூ.8000.. மொத்தம் ரூ.10,000! திமுக மெகா ப்ளான்! -
Tamil New Year Wishes in Tamil: சித்திரை திருநாளில் தமிழ் புத்தாண்டு வாழ்த்துக்கள் பகிர அழகிய படங்கள் -
ஜனநாயகன் லீக்.. இயக்குநர் அமீர் கருத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு.. ஆர்கே செல்வமணி விளக்கம்












Click it and Unblock the Notifications