கிராம நத்தம் புறம்போக்கு நிலங்கள்.. 4000 பயனாளிகளுக்கு பட்டா எப்போது? திருவள்ளூருக்கு குட் நியூஸ்?
சென்னை: அரசு புறம்போக்கு நிலத்தில் வசிப்பவர்களுக்கு பட்டா வழங்கக் கோரி திருவள்ளூர் மக்கள் தொடர்ந்து போராடி வருகின்றனர், மாவட்ட ஆட்சியர் அலுவலகம், தாசில்தார் அலுவலகங்களில் மனு அளிப்பது, போராட்டங்கள் நடத்துவது போன்ற முறைகளை மக்கள் அவ்வப்போது பின்பற்றி வருகின்றனர். கிராம நத்த நிலங்களை கணினியில் பதிவேற்றம் செய்து ஆன்லைன் மூலம் பட்டா வழங்கும் திட்டம் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்ட போதிலும், "4000 பட்டா" கோரிக்கை தீர்க்கப்படாமலேயே உள்ளது.
நத்தம் புறம்போக்கு நிலம் என்பது, கிராமங்களில் குடியிருப்புக்காக பயன்படுத்தப்பட்டு வரும் அரசாங்கத்துக்கு சொந்தமான நிலமாகும்.. அரசு பதிவுகளில் இந்த வகை நிலங்கள் "புறம்போக்கு" என்றே வகைப்படுத்தப்பட்டிருக்கும். விவசாயம் அல்லாமல், மக்கள் வீடு கட்டி வாழ்வதற்காகவே இந்த நிலங்கள் பயன்படுத்தப்படுகின்றன.

புறம்போக்கு நிலம்
ஒருகாலத்தில் பட்டா இல்லாத ஏராளமானோர், அரசு அனுமதி அல்லது பழக்க வழக்கத்தின் அடிப்படையில் இதுபோன்ற நிலங்களில் குடியேறினார்கள். இங்கு பல வருட காலமாகவே இவர்கள் வசித்து வசித்தாலும், நில உரிமை ஆவணம் இல்லாததால், கட்டிட அனுமதி, வங்கி கடன், அரசு திட்டங்கள் போன்றவற்றில் சிக்கல்கள் ஏற்பட்டன.
சாலை, குளம், மேய்ச்சல் நிலம் போன்ற பிற புறம்போக்கு நிலங்களிலிருந்து, குடியிருப்பு பயன்பாடு என்பதால் இவை வேறுபடுகின்றன. எனவேதான், மக்களின் நீண்டகால வசிப்பை கருத்தில் கொண்டு, அரசு குறிப்பிட்ட நிபந்தனைகளின் அடிப்படையில் இந்த நிலங்களை பட்டா நிலங்களாக மாற்றுகிறது. குறிப்பிட்ட சில ஆவணங்கள் இருந்தாலே, இங்கு வசிப்பவர்கள் எளிதாக பட்டா பெறலாம்.
8 மாவட்டங்களுக்கு குட் நியூஸ்
கடந்த வாரம்கூட தமிழகத்தில் நத்தம் புறம்போக்கு நிலங்களில் வசிக்கும் மக்களுக்கு நன்மை தரும் வகையில், அரசு ஒரு முக்கிய முடிவை எடுத்தது.
கடலூர், தேனி, தென்காசி, நாமக்கல், பெரம்பலூர் மற்றும் திருச்சி ஆகிய 6 மாவட்டங்களில் உள்ள 8 கிராமங்களில், நத்தம் புறம்போக்கு நிலங்களை பட்டா நிலங்களாக மாற்றி, நிலவரி திட்டத்தை நடைமுறைப்படுத்த அரசு உத்தரவிட்டது.
ஆனால், திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டா கோரிக்கை தீர்க்கப்படாமலேயே உள்ளது.. சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில், அரசு நிலங்களில் 10 ஆண்டுகளுக்கும் மேல் வசிப்பவர்களுக்கு 6 மாதங்களில் பட்டா வழங்க தமிழக அரசு வழிகாட்டு நெறிமுறைகள் கடந்த பல மாதங்களுக்கு முன்பே வெளியிடப்பட்டது..
ஆட்சேபனையற்ற புறம்போக்கு நிலம்
இதன்மூலம் 86 ஆயிரம் பேர் பயன்பெறுவார்கள் என்றும் நம்பப்பட்டது.. அதாவது சென்னையை சுற்றியுள்ள 4 மாவட்டங்களில் பெல்ட் ஏரியா எனப்படும் 32 கி.மீ., பகுதிகளில் அரசு புறம்போக்கு நிலத்தில் நீண்ட காலமாக குடியிருப்பவர்கள் மற்றும் இதர மாவட்டங்களில் ஆட்சேபகரமற்ற பகுதிகளில் குடியிருப்பவர்களுக்கு பட்டா வழங்க தமிழக அரசு முடிவு செய்தது.
அதன்படி, சென்னையில் மட்டும் ஆட்சேபனையற்ற புறம்போக்கு பகுதிகளில் 29,187 பேரும், இதர மாவட்டங்களில் 57,084 பேர் என மொத்தம் 86 ஆயிரம் பேருக்கு 6 மாதங்களில் பட்டா வழங்க வேண்டும் என்று கடந்த பிப்ரவரி மாதம் 10ம் தேதி நடந்த அமைச்சரவை கூட்டத்தில் முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவிட்டு இருந்தார்.
கிராம நத்தம் பட்டா
இதையடுத்து, ஆட்சேபனை இல்லாத புறம்போக்கில் வசிக்கும் குடும்பங்களுக்கு 'ஆன்லைன்' பட்டா வழங்கும் பணி துவங்கி தொடர்ந்து பட்டா வழங்கப்பட்டு வருகிறது என்றாலும், கிராம நத்தத்தில் வீடுகள் கட்டியவர்களுக்கு இதுவரை பட்டா வழங்கப்படவில்லை.
இதனால், வீடுகளுக்கு பட்டா பெற முடியாததால், வீட்டு நிலத்தை பெயர் மாற்றம் மற்றும் பரிமாற்றமும் செய்ய முடியவில்லை. எனவே, கிராம நத்தத்தில் வசிப்பவர்களுக்கு விரைந்து பட்டா வழங்க வேண்டும் என பயனாளிகள் தொடர்ந்து கோரிக்கை வைத்தபடி உள்ளனர்..
எடப்பாடி பழனிசாமி
இந்நிலையில், திருவள்ளூர் மாவட்டத்தில் பட்டா வழங்காத விஷயத்தை எதிர்க்கட்சிகள் கையில் எடுத்துள்ளன.. குறிப்பாக அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமி நேற்றைய தினம் திருவள்ளூரில் இதுகுறித்து பேசியிருக்கிறார்.. தாங்கள் ஆட்சிக்கு வந்தால் நத்தம் புறம்போக்கு பகுதியில் வசிக்கும் 4000 குடும்பங்களுக்கு பட்டா வழங்கப்படும் என்று நம்பிக்கை தெரிவித்துள்ளார்..
தேர்தல் நெருங்கி வரும் சூழலில், திருவள்ளூர் மாவட்ட வாக்குகளை அள்ளும் நோக்கில், வழங்கப்படாமல் உள்ள பட்டாக்களை திமுக அரசு வழங்குமா என்ற எதிர்பார்ப்பும் எழுந்துள்ளது..!!
-
சிறகடிக்க ஆசை: போலீஸ் சொன்ன விஷயம்! சந்தோஷத்தில் முத்து! அண்ணாமலை வீட்டில் கொண்டாட்டம்! விஜயா முடிவு -
லால்குடியில் களமிறங்கிய ஆதவ் அர்ஜுனா மாமியார்.. அதிமுகவில் இணைந்த 1 மாதத்தில் சீட் கொடுத்த எடப்பாடி -
ஓசூரில் சத்தமின்றி புரட்சி.. ரெடியாகும் தமிழ்நாட்டின் 6-வது பிரம்மாண்ட 'டைடல் பார்க்'.. தரமான வேகம் -
தமிழ் புத்தாண்டில் ஜாக்பாட் அடிக்கப்போகும் 3 லக்கி ராசிகள்.. லிஸ்ட்ல உங்க ராசி இருக்கா பாருங்க -
காங்கிரஸில் இணைந்தார் ஜி.கே.எம். தமிழ்க்குமரன்! பென்னாகரம் தொகுதியை குறி வைக்கும் ஜி.கே.மணி மகன்! -
திமுகவின் இளம் வேட்பாளர்.. அவினாசி தொகுதியில் 26 வயது மருத்துவருக்கு வாய்ப்பு கொடுத்த ஸ்டாலின்! -
உங்கள் வீட்டு பீரோவில் 62 சவரன் தங்கம் இருக்கா? நகைக்கு இந்த ஒரு கணக்கு இல்லனா ஐடி நோட்டீஸ் வரலாம் -
நகைக்கடன் வாங்கினீங்களா? ஏப்ரல் 1க்கு பின் தங்கம் வைத்து loan எடுக்க முடியாதா? புது ரூல்ஸ் அதிர்ச்சி -
பிடிஆர் பழனிவேல் தியாகராஜனின் தொகுதி! திமுகவின் கோட்டை மதுரை மத்தியில் சுந்தர்.சி போட்டி! யார் இவர்? -
ரசிகர்கள் எதிர்பார்த்த வீடியோவை வெளியிட்ட திரிஷா.. ஒரு வழியாக எல்லோரும் கேட்டது நடந்துடுச்சு.. குவியும் பாராட்டு -
தமிழ்நாட்டில் விஏஓவாக 2016ல் வேலைக்கு சேர்ந்தவர் 2026ல் என்ன சம்பளம் வாங்குவார் தெரியுமா? -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் தள்ளுபடி உற்சாகம்.. LIC பாலிசிதாரர்களுக்கு காத்திருக்கும் அந்த ஒரு ரகசியம்












Click it and Unblock the Notifications