101-வது வயதை தொட்ட மீனாட்சி பாட்டி... திருவொற்றியூரில் பிறந்த நாள் விழா கோலாகலம்!
சென்னை : சென்னை திருவொற்றியூரில், ஆயிரம் பிறைக்கு மேல் கண்டவரும், ஐந்து தலைமுறைகளை பார்த்தவருமான மீனாட்சி பாட்டி, தனது 101-வது பிறந்த நாளை, உறவினர்களுடன் உற்சாகமாகக் கொண்டாடி மகிழ்ந்தார்.
Recommended Video
திருவெற்றியூர் தட்சிணாமூர்த்தி கோவில் அருகே, மறைந்த சிவராம சாஸ்திரி என்பவரின் மனைவி மீனாட்சி என்ற பட்டம்மாள். அனைவராலும் மீனாட்சி பாட்டி என்று அழைக்கப்படும் இவருக்கு 100 வயது முடிந்து, இன்று 101-வது வயதில் அடியெடுத்து வைக்கிறார். மீனாட்சி பாட்டிக்கு, 3 ஆண்களும் 2 பெண்களும் உள்ளனர். இந்த குடும்பத்தில் ஏழு பேரன்களும் ஐந்து பேத்திகளும் உள்ளனர். அந்த பேரன் பேத்தி மூலம் நான்கு கொள்ளு பேரன்களும் ஏழு கொள்ளு பேத்திகளும் உள்ளனர்.

இதில் கொள்ளு பேரன் மூலம் ஒரு ஆண் குழந்தை உள்ளது. இந்த குழந்தை, மீனாட்சிப் பாட்டிக்கு எள்ளு பேரன் என்று அழைக்கப்படுகிறார். மீனாட்சி பாட்டி ஐந்து தலைமுறைகள் கண்டவர். ஆயிரம் பிறை கண்ட மீனாட்சி பாட்டியின் பிறந்த நாளை, உற்சாகமாகவும், விமர்சையாகவும் கொண்டாட அவரது குடும்பத்தினர் முடிவு செய்தனர்.
இதனையடுத்து, சங்கரா காலனியில் உள்ள திருமண மண்டபத்தில், இதற்காக வேத விற்பனர்கள் சிறப்பு பூஜை செய்து, மீனாட்சி பாட்டியை புனித நீராட்டி, புத்தாடை அணிய வைத்து மேடையில் அமர வைத்தனர். கணபதி ஹோமம் நவக்கிரக ஹோமம் நட்சத்திர கோமம் ஆயுசு ஹோமங்களை 11 சாஸ்திரிகள் 11 நடத்தினர். குடும்பத்தினர் சீர்வரிசை பணமாலை அணிவித்து, 100 வயதை கடந்த மீனாட்சி பாட்டியிடம் அவரது குடும்பத்தினர் மட்டுமல்ல, ஏராளமானோர் ஆசீர்வாதம் பெற்றனர்.

மீனாட்சி பாட்டி தனது எள்ளு பேரனை தூக்கி கொஞ்சிய காட்சி அனைவரையும் நெகிழ வைத்தது. 100 வயதை கடந்த பிறகும் மீனாட்சி பாட்டி அவரது சொந்த வேலைகளை அவரே செய்து கொள்கிறார். அப்பகுதியில் உள்ள உடல்நலம் பாதிக்கப்பட்டவர்கள், தீராத நோய்நொடியில் உள்ளவர்களை, மீனாட்சி பாட்டி ஆசீர்வாதம் வழங்குவது, திருநீறு பூசுவது, சுளுக்கு எடுப்பது உட்பட பல உதவிகளை செய்து அனைவரிடமும் அன்பும், கருணையுமாக இருந்து வருகிறார்.
-
கேஸ் மானியம் ₹300 வந்தாச்சா? வங்கிக்கு போகவே வேண்டாம்… வீட்டிலேயே 2 நிமிஷத்தில் தெரிஞ்சுக்கலாம் -
தங்கத்தில் இனி 1 மில்லி கிராம் கூட ஏமாற்ற முடியாது! 7 மாவட்டத்துக்கு ஹேப்பி! அரசின் பாதுகாப்பு கவசம் -
வங்கி கணக்கில்.. அரசு அனுப்பிய ரூ.2000! உங்களுக்கு வந்துடுச்சா.. மொபைலிலேயே செக் செய்வது எப்படி? -
56 out of 234: விசிகவுக்கு "6+2!" திமுக கூட்டணியில் எந்தெந்த கட்சிகளுக்கு எத்தனை தொகுதிகள்? -
வைகோவால் 25 சீட் போச்சு.. அன்புமணியால் திமுகவுக்கு 50 சீட் காலி.. 2016இல் விஜயகாந்த் விழுந்த கதை! -
தேமுதிக 10 தொகுதிகளில் போட்டி.. 21 ஆண்டு வரலாற்றில் மிகக் குறைவான சீட்களில் நிற்பது இந்த முறைதான்! -
ஆதார் கார்டு வைத்திருப்போருக்கு குட் நியூஸ்.. பிஎம் ஸ்வநிதி திட்டத்தில் ₹50,000 கடன் கிடைக்குமா? -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
டிரம்ப் வயிற்றில் பாலை வார்த்த ஈரான்.. அமெரிக்காவுக்கு முதல் முறையாக பச்சைக்கொடி -
தங்க வேட்டை.. உலக நாடுகளின் 'பக்கா' பிளான்.. மத்திய வங்கிகள் முண்டியடிப்பதன் பின்னணி என்ன? -
அமெரிக்காவை வீழ்த்தும் ஈரான்.. ஆட்டம் காணும் மிதக்கும் அரண்மனை.. ஒரே இரவில் பஸ்பம் ஆன $13000000000!












Click it and Unblock the Notifications