சுத்தியலால் ஒரே அடி! சென்னையில் பாட்டியை கொலை செய்த பேரன்! இதுக்காகவா? காரணத்தால் அதிர்ந்த சென்னை!
சென்னை: சென்னை கொருக்குப்பேட்டையில், ஒரு லட்சம் பணத்திற்காக பாட்டியை, சுத்தி மற்றும் பிளேடால் தாக்கி கொடூரமாக கொலை செய்த பேரனை, போலீசார் கைது செய்துள்ளனர். இந்த சம்பவம், அப்பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
சென்னை கொருக்குப்பேட்டையைச் சேர்ந்த விசாலாட்சி என்பவர், கருமாரியம்மன் நகரில் வசித்து வருகிறார். வீட்டு வேலை செய்து பிழைப்பு நடத்தி வரும் இவருக்கு, அமுதா என்ற மகள் உள்ளார்.
அமுதா, செங்குன்றத்தை அடுத்த காந்தி நகரில் வசித்து வருகிறார். இவருக்கு சதீஷ் என்ற மகன் உள்ளார்.

சென்னையில் அதிர்ச்சி
விசாலாட்சி, தனது மகள் அமுதாவுக்கு, செங்குன்றத்தில் வீடு கட்டுவதற்காக கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு, 4 லட்சம் ரூபாய் பணம் விசாலாட்சி கொடுத்துள்ளார். இதில் 3 லட்சத்தை, விசாலாட்சியிடம் மகள் அமுதா திருப்பிக் கொடுத்து விட்டதாக கூறப்படுகிறது. மீதமுள்ள ஒரு லட்சம் ரூபாயை திரும்ப வழங்காமல் அமுதா காலம் கடத்தி வந்ததாக தெரிகிறது.

ஒரு லட்சம் பணம்
இந்நிலையில், நேற்று தாய் வீட்டுக்கு, தனது மகன் சதீஷ்டன் அமுதா வந்துள்ளார். அப்போது, விசாலாட்சி, தனது மகளிடம் மீதி தரவேண்டிய ஒரு லட்சம் ரூபாய் பணத்தை திருப்பி கொடுக்குமாறு கேட்டுள்ளார். இதனால், தாய்க்கும், மகளுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது. ஒருகட்டத்தில் வாய்த்தகராறு முற்றியதால், தாயுடன் வந்த சதீஷ், ஆத்திரத்தில் வீட்டில் இருந்த சுத்தியலால் 'பாட்டி விசாலாட்சியை தாக்கி, பிளேடால் கிழித்தும் பலமாக தாக்கியுள்ளார்.

கொலை
இதனால் படுகாயமடைந்த விசாலாட்சி, ரத்த வெள்ளத்தில் வலி தாங்க முடியால் கூச்சலிட்டுள்ளார். பாட்டியின் அலறல் சத்தம் கேட்டு, அக்கம் பக்கத்தினர் விரைந்து வந்த அவரை மீட்டு, உடனடியாக மருத்துமனைக்கு அழைத்துச் சென்றுள்ளனர். எனினும், வழியிலேயே விசாலாட்சி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு வந்த ஆர்.கே. நகர் போலீசார், உயிரிழந்த விசாலாட்சியின் உடலை மீட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

பெரும் பரபரப்பு
பின்னர், இந்த கொலை சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்து, பாட்டியை கொலை செய்த பேரன் சதீஷை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரு லட்சம் பணத்திற்காக, பாட்டியை பேரன் கொலை செய்த சம்பவம், சென்னை கொருக்குப்பேட்டை பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
-
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம் -
எடப்பாடி அனுப்பிய மெசேஜ்.. சி.வி. சண்முகம் வீட்டில் உறுதிபடுத்திய கே.சி வீரமணி.. இணைகிறது அதிமுக -
நாளுக்கு நாள் மோசமாகும் இந்தியா.. குட்டி குட்டி நாடெல்லாம் நம்மை முந்திக்கொண்டு செல்கிறது! -
விஜய் நியமித்த 2 நாளில்.. IPS அருணை கோர்ட்டிலேயே காத்திருக்க சொன்ன நீதிபதி சுவாமிநாதன்.. ஏன்? -
420 யூனிட் ஓடியிருக்கிறது.. ஆனால் 200 யூனிட் கழிக்காமல் 100 யூனிட் கழித்தது ஏன்? விளக்கம் -
'நீங்க உம் மட்டும் கொட்டுங்க தெய்வமே.. மற்றதை நான் பார்த்துக்கிறேன்' தெறிக்கும் ஆதவ் அர்ஜுனா மீம்ஸ்! -
அவரை முதல்ல தூக்கணும்.. பிளான் போட்டு வேலை பார்த்த மூவர் அணி.. விஜய்க்கு எகிறிய பிரஷர்.. என்னாச்சு? -
கடைகளை மூடிய பணியாளர்கள்.. ஸ்தம்பித்த டாஸ்மாக்.. இரவோடு இரவாக அமைச்சர் விக்னேஷ் வெளியிட்ட அறிவிப்பு -
கோவை மக்களே 5 ஆண்டுகளுக்கு பின் வந்த குட்நியூஸ்.. விஜய் கொடுத்த கிரீன் சிக்னல் - டூயல் கான்செப்ட் பஸ் ஸ்டாண்ட்! -
அப்பறம் வச்சிக்கிறேன்.. கடுப்பான விஜய்.. கோபத்தின் உச்சிக்கே போயிட்டாராமே.. அப்படி என்ன நடந்தது?












Click it and Unblock the Notifications