"நம்பர் 1" லீடர் திருமாவளவன்.. இந்தியாவிலேயே டாப் தலைவர்.. ஏன் தெரியுமா.. சிக்ஸர் அடித்த பா. ரஞ்சித்

: திருமாவளவன் சனாதனத்தை எதிர்க்கக்கூடிய தலைவராக உள்ளதாக ரஞ்சித் கூறுகிறார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "தமிழ் சூழலில் மிகவும் ஆச்சரியம் அளிக்கக்கூடிய தலைவராக திருமாவளவன் இருக்கிறார், தலித் அமைப்புகள் இந்தியா முழுவதும் இருக்கிறது.. மதவாதத்தை சனாதனத்தை எதிர்க்கக்கூடிய தலைவராக தொடர்ந்து திருமாவளவன் கர்ஜித்து கொண்டிருக்கிறார்" என்று டைரக்டர் ரஞ்சித் புகழாரம் சூட்டிஉள்ளார்.

தமிழ் சினிமாவை பொறுத்தவரை, ஒவ்வொரு காலகட்டத்திலும், சமூகத்தை ஏதாவது ஒருவகையில் பாதித்த, உண்மை சம்பவங்களை படம் எடுப்பது வழக்கம்.

இப்படி உண்மை சம்பவங்களை மையப்படுத்தி எடுக்கப்படும் படங்கள் பெரும்பாலும், சாதீய பாகுபாடுகளை அடிப்படையாக கொண்டதாகவே இருக்கக்கூடும்..

உண்மை சம்பவத்தை ஒட்டியே படம் எடுப்பதால், அதில் கற்பனைகளுக்கும், இட்டுகட்டுவதற்கும் வாய்ப்பில்லை..

 சாதி + பிரிவு

சாதி + பிரிவு

அதேசயம், சம்பவம் நடந்த கிராமங்களில் உள்ள சாதீய பிரிவினைகளை அப்பட்டமாக காட்ட வேண்டிய நிலைமையும் ஏற்படும்.. இப்படி எத்தனையோ வடிவங்களில் எத்தனையோ படங்கள் வெளிவந்தாலும், இதே ரூட்டை கையில் எடுத்தவர்தான் பா.ரஞ்சித்.. ஆனால், அனைத்து சாதியையும் படம்பிடித்து காட்டும்போது, தாழ்த்தப்படும் மக்களின் வாழ்க்கையை மட்டும் யாருமே இங்கு சொல்வதில்லையே ஏன்? என்று கேட்டு, அதை வைத்தே படங்களை எடுத்து வருகிறார்.

 நட்சத்திரம் நகர்கிறது

நட்சத்திரம் நகர்கிறது

தன்னுடைய படங்கள் மூலம், சாதீய இருட்டில் கிடக்கும் கிராமங்களில், வெளிச்சம் போட்டும் காட்டி வருபவர் ரஞ்சித்... அந்தவகையில், இளைஞர்களை இவரது படங்கள் சிந்திக்க வைத்து வருகின்றன.. சிந்தனையை கிளப்பிவிட்டாலும், அத்துடன் சர்ச்சைகளையும் கிளப்பிவிட்டுவிடுவார் ரஞ்சித்.. இப்போது 'நட்சத்திரம் நகர்கிறது' என்ற படத்தை எடுத்துள்ளார்.. தன்பால்ஈர்ப்பாளர்களுக்கு இடையேயான காதல், திருநங்கைக்கும் ஆணுக்குமான காதல் என்று பல விஷயங்களை இந்த படத்தில் ரஞ்சித் தொட்டு சென்றுள்ளார்.

 மிஸ்டர் ரஞ்சித்

மிஸ்டர் ரஞ்சித்

பெண்ணும் பெண்ணும், ஆணும் ஆணும் காதல் பன்னக் கூடாதா? தாலி கட்டுனா மட்டும் தான் காதல் தொடரும்னா? அவ்வளவு தானா அதன் மதிப்பு? காதல்ல எங்க வயசு வந்துச்சு? இப்படி பல டயலாக்குகள் மக்களை திரும்பி பார்க்க வைத்துள்ளன.. இந்த படத்தின் டிரெயிலர் வந்த நாள் முதலே, இது தொடர்பான விவாதங்களும், சலசலப்புகளும் இணையத்தில் வெடிக்க துவங்கியதையும் மறுக்க முடியாது. சினிமாவை தாண்டி, அரசியல் விவகாரங்களையும் ரஞ்சித் உற்று கவனித்து வருகிறார்.. குறிப்பாக, விசிக தலைவர் திருமாவளவனுக்கு தன்னுடைய முழு ஆதரவை தெரிவித்தும், கருத்துக்களை பதிவிட்டும் வருவதை இந்த தமிழகமே அறியும்.

 திருமாவளவன்

திருமாவளவன்

இந்நிலையில், ஒரு யூடியூப் சேனலுக்கு ரஞ்சித் பேட்டி தந்துள்ளார்.. அதில் அரசியல் என்ட்ரி குறித்து சில வார்த்தைகளை தெரிவித்துள்ளார்.. "அரசியல்வாதியாக நான் ஆவேனா என தெரியாது.. இப்போதைக்கு கலை இலக்கியங்களில், கலாச்சார ரீதியாக வேலை செய்வதுதான் என்னுடைய எண்ணம்.. அதுதான் என்னுடைய இலக்கு. ஆனால் பின்னால் என்ன நடக்கும் என்று எனக்கு தெரியவில்லை.. ஆனால் அரசியலுக்கு வருவதற்கு, அரசியல்வாதியாக மாறுவதற்கு எனக்கு எந்த பிரச்சினையும் இல்லை..

 என்ஜாய்

என்ஜாய்

அதை மிகவும் சந்தோஷமாகத்தான் என்ஜாய் செய்வேன். ஆனால் எனக்கு இப்போதைக்கு அது தேவையில்லை.. எதிர் காலத்தில் அரசியல்வாதியாக இருந்தாலும் இருக்கலாம் அது இப்போது எனக்கு தெரியவில்லை.. அதற்கு நான் யோசிக்க வேண்டும், சினிமா எடுக்க வேண்டும் என்று நான் தான் யோசித்தேன்.. அம்பேத்கரைப் பற்றி பேச வேண்டும் என்று நான் தான் யோசித்தேன், நான் சினிமாவுக்குள் வரும்போது கூட அம்பேத்கரை பற்றி பேசாதே என்று சொன்னார்கள்..

 திருமாவளவன்

திருமாவளவன்

ஆனால் நான் அம்பேத்கரை பேசித்தான் படம் எடுப்பேன் என்று வந்தேன்.. எனக்கு தோன்றினால் அதைப்பற்றி நான் யோசிப்பேன்.. தமிழ் சூழலில் மிகவும் ஆச்சரியம் அளிக்கக்கூடிய தலைவராக திருமாவளவன் இருக்கிறார், தலித் அமைப்புகள் இந்தியா முழுவதும் இருக்கிறது.. பகுஜன் சமாஜ் கட்சி இந்தியா முழுவதும் இருக்கிறது.. இந்திய குடியரசு கட்சியிலேயே பல அமைப்புகள் இருக்கின்றன.. ராம்தாஸ் அத்வாலே இருக்கிறார்.. இப்படி பல கட்சிகள் இருந்தாலும் விசிக ரொம்ப ரொம்ப முக்கியமான கட்சி.. இத்தனை வருடங்கள் கழித்தும், சனாதன எதிர்ப்பை விசிக முன்னிறுத்தி வருகிறது.. மதவாதத்தை சனாதனத்தை எதிர்க்கக்கூடிய தலைவராக தொடர்ந்து திருமாவளவன் கர்ஜித்து கொண்டிருக்கிறார்" என்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+