பள்ளிகளுக்கு பறந்த "மேஜர்" உத்தரவு.. தமிழக அரசு அதிரடி.. போதை விழிப்புணர்வு வாரம்.. ஸ்டாலின் அதிரடி
முதல்வர் ஸ்டாலின் இன்று போதைஒழிப்பு விழிப்புணர்வு பிரச்சாரத்தை துவங்கி வைக்கிறார்
சென்னை: போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரசார நிகழ்ச்சி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் தொடங்கி உள்ளது. இதையடுத்து, தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசு பள்ளிகள் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகள், சுயநிதி பள்ளிகளில் போதை பொருள் விழிப்புணர்வு உறுதி மொழி எடுக்க வேண்டும் என்று கல்வித்துறை உத்தரவு பிறப்பித்திருந்த நிலையில், இன்று காலை மாணவ-மாணவிகள் அந்தந்த பள்ளிகளில், தங்கள் உறுதிமொழியை எடுத்து வருகின்றனர்.
Recommended Video
தமிழகத்துக்குள் போதைப் பொருட்களை நுழையாமல் தடுத்து நிறுத்துவது உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை தீவிரப்படுத்தும் பொருட்டு, மாவட்ட ஆட்சியர்கள் மற்றும் மாவட்ட காவல் கண்காணிப்பாளர்கள் ஆலோசனை கூட்டத்தை, முதல்வர் ஸ்டாலின் நேற்று நடத்தினார்.
தமிழகத்தில் குட்கா, பான்மசாலா உள்ளிட்ட போதைப்பொருட்கள் விற்பனை மற்றும் பதுக்கல்கள் உள்ளிட்டவற்றை முற்றிலும் தமிழகத்துக்குள் நுழையாமல் தடுப்பது, கடத்தலில் ஈடுபடுபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுப்பது குறித்தும் நேற்றைய கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது..

சமாதானம்
அந்த கூட்டத்தில் முதல்வர் பேசும்போது, "போதை பொருள் நடமாட்டத்தில் குஜராத், மகாராஷ்டிராவை விட தமிழ்நாடு குறைவுதான் என்று நான் சமாதானம் அடைய தயாராக இல்லை.. என்னை ‘சாஃப்ட் முதல்வர்' என்று யாரும் கருதிவிட வேண்டாம். நேர்மையானவர்களுக்குத்தான் நான் சாஃப்ட், தவறு செய்வோருக்கு நான் சர்வாதிகாரியாக மாறுவேன். தமிழகத்துக்குள் போதைப்பொருள் நுழைவதை நாம் முழு ஆற்றலையும் பயன்படுத்தி தடுத்தாக வேண்டும். போதைப்பொருள் தான் சாதி, மதம் மோதல்களுக்கு தூண்டுதலாக அமைந்து விடுகிறது.. போதைப் பொருள் பயன்பாடு என்பது தனிமனித பிரச்சனை அல்ல. சமூக பிரச்சினை..

முடக்குங்கள்
போதைப்பழக்கம் என்பது சமூக தீமை அதை ஒழிக்க பாடுபட வேண்டும். மேலும், போதைப்பொருள் விற்பதை வியாபாரிகள் நிறுத்த வேண்டும். அவ்வாறு நிறுத்தாத பட்சத்தில், போதை பொருள் விற்பவர்களை காவல்துறையினர் கைது செய்து அவர்கள் சொத்துக்களை முடக்க வேண்டும்.. எல்லாவற்றிலும் வளரும் தமிழ்நாடு, போதை போன்ற எதிர்மறையான விஷயங்களில் வளர்ந்துவிடக் கூடாது. வளர விட்டுவிடவும் கூடாது. இந்த உறுதியை மாவட்ட ஆட்சியர்கள், காவல்துறை கண்காணிப்பாளர்கள் எடுத்துக் கொள்ள வேண்டும். உங்களை நம்பி ஒவ்வொரு மாவட்டத்தையும் ஒப்படைத்துள்ளேன்.." என்று கேட்டுக் கொண்டார் முதல்வர் ஸ்டாலின்.

பறந்த ஆர்டர்
இந்நிலையில். இன்று ஆகஸ்ட் 12 முதல் 19ம் தேதி வரை போதைக்கு எதிரான விழிப்புணர்வு வாரமாக கடைபிடிக்கப்படுகிறது... இதையடுத்து, காலை 10.30 மணிக்கு அனைத்து பள்ளிகளிலும் போதைக்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழி ஏற்க வேண்டும் என்று பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டிருந்தது.. இதுகுறித்து ஒரு சுற்றறிக்கையையும் விடுத்திருந்தது.

குறும்படம்
அதில், போதைப் பொருள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த 12-ந்தேதி முதல் 19-ந்தேதி வரை விழிப்புணர்வு வாரத்தை தொடர்ந்து செயல்படுத்தவும் அரசு திட்டமிட்டுள்ளதால், பள்ளி தலைமை ஆசிரியர்கள் இதுபற்றி மாணவ-மாணவிகளுக்கு அறிவுறுத்த வேண்டும் என்று அரசின் சுற்றறிக்கையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. அத்துடன் கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் போதை பொருள் எதிர்ப்பு விழிப்புணர்வு குறும்படத்தை மாணவர்களுக்கு காட்ட அறிவுறுத்தப்பட்டிருந்தது.

உறுதிமொழி
அதன்படியே, பள்ளி மாணவ - மாணவிகள் போதைக்கு எதிராக மாணவர்கள் உறுதிமொழிகளை ஏற்றுக் கொண்டுள்ளனர். இதனிடையே, போதை பொருளுக்கு எதிரான விழிப்புணர்வு பிரச்சார நிகழ்ச்சி, முதல்வர் ஸ்டாலின் தலைமையில் இன்று சென்னையில் துவங்கி நடந்து வருகிறது.. இந்த நிகழ்வில், பள்ளிக்கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, தலைமை செயலாளர் இறையன்பு உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்று உரையாற்றி வருகின்றனர்.
-
திமுக தொண்டர்களுக்கு டபுள் ட்ரீட்.. கருணாநிதியின் 103வது பிறந்தநாள் விழாவில் ஸ்டாலின் மெகா விழா -
அப்பன் மகனுக்கு சம உரிமை கொடுக்க இது என்ன குடும்ப சொத்தா? கே.என்.நேரு குறித்து திருச்சி சூர்யா -
முடிவுக்கு வந்த 9 மாத காத்திருப்பு.. தமிழக புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் இன்று பொறுப்பேற்பு! -
ஸ்டாலின் மீதிருந்த கோபம்.. தவெகவிற்கு தாவுகிறார் திமுகவின் இளம் நம்பிக்கை? பெரிய டீமும் போகுது -
கூட்டுறவு வங்கி நகைக்கடன் வாங்கியோருக்கு குட் நியூஸ்! பணம் கட்டலயா? ஏலத்திலிருந்து நகை மீட்க ஈஸி வழி -
மாமூல் தொல்லையில் இருந்து முதல்வர் விஜய் எங்களை காப்பாற்றிவிட்டார்.. டாஸ்மாக் பணியாளர் சங்கம் -
ரூட்டை மாற்றிய இந்திய ஐடி நிறுவனங்கள்.. இனியும் சும்மா இருந்தா வேலைக்கு ஆகாது! -
"முதலமைச்சருக்கு நன்றி.. ஆனால்! எதிரியின் எதிரி நண்பனா? விஜய் ரசிகர்கள் குறித்து பேசிய அஜித் சகோதரர் -
வீரமணி ஒரே போடு.. திருச்சியில் முதலமைச்சர் விஜய் பேசிய அந்த பேச்சால் மொத்த பேருக்கும் முகச்சுளிப்பு? -
இன்பதுரை வெற்றி செல்லாது என்ற தீர்ப்பால் அடுத்து என்ன நடக்கும்? முன்னாள் சபாநாயகர் அப்பாவு விளக்கம் -
விஜய்யின் ஆலோசகர் + 2 அமைச்சர்களால் நேர்ந்த அவமானம்.. சட்டசபை செயலாளர் சீனிவாசன் பதவி விலகியது ஏன்? -
கோவையில் அருவியாக மாறிய மேம்பாலம் .. மேட்டுப்பாளையம் ஊட்டி செல்லும் வழியில் மாறிய காட்சி












Click it and Unblock the Notifications