ரேஷன் கடைகளுக்கு பறந்த உத்தரவு.. 150 கார்டுகளுக்கு தனி கடையா?.. தமிழக அரசின் அடுத்த அதிரடி

ரேஷன் கடைகளுக்கு புதிய உத்தரவை கூட்டுறவு துறை அமைச்சர் பிறப்பித்துள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: ரேஷன் கடைகளுக்கு அதிரடி உத்தரவு ஒன்றை கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியசாமி பிறப்பித்துள்ளதுடன், கிராமப்புற மக்கள் பயன்பெறும் வகையில் புதிய திட்டத்தை அரசு கையில் எடுத்துள்ளதாகவும் கூறியுள்ளார்.

தமிழகத்தில் நியாயவிலைக் கடைகள் மூலம், அனைத்து அட்டைதாரர்களுக்கு குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்புகள் உள்ளிட் பொருட்கள் போன்றவை வழங்கப்பட்டு வருகின்றன..

இதனால் கோடிக்கணக்கான மக்கள் நேரடியாக பல பலன்களை பெற்று வருகின்றனர். அரசு விநியோகிக்கும் இந்த பொருட்களினால், அவர்களின் வாழ்வாதாரமும் தொடர்ந்து காக்கப்பட்டு வருகின்றன..

 திடீர் ஆய்வுகள்

திடீர் ஆய்வுகள்

அத்துடன் பண்டிகைக் காலங்களில் அரசின் சலுகைகள், நிவாரணப் பொருட்கள் போன்ற அனைத்துமே, ரேஷன் கடைகள் வாயிலாகவே வழங்கப்பட்டு வருகின்றன. மேலும், நியாய விலைக்கடைகள் சரியாக இயங்கி வருகின்றனவா என்ற நேரடி ஆய்வையும் அதிகாரிகள் மூலம் அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது.. எல்லாவற்றிற்கும் மேலாக, ரேஷன் கடைகள் குறித்த புது புது அறிவிப்புகள் அடிக்கடி வெளியாகி கொண்டே இருக்கின்றன..

 சிதறிய பொருட்கள்

சிதறிய பொருட்கள்

எனினும், குடும்ப அட்டைதாரர்களுக்கு அளிக்கப்படும் பொருட்கள் தரம் குறைந்து காணப்படுவதாக ஆங்காங்கே புகார்கள் எழுந்தன. இந்த புகார்களுக்கும் ஒரு முடிவை கட்டியது தமிழக அரசு.. அதன்படி, பொருட்கள் தரமில்லாமல் இருக்கும் பட்சத்தில் அதை திரும்பி அனுப்பலாம் என்று அறிவித்திருந்தது... பிறகு இன்னொரு சிறப்பு அறிவிப்பையும் வெளியிட்டது.. அதன்படி, ரேஷன் கடைகளில் தரையில் சிதறிய பொருட்களை, மறுபடியும் வினியோகம் செய்யக் கூடாது என்று ரேஷன் ஊழியர்களுக்கு கூட்டுறவுத் துறை உத்தரவிட்டது.

 ரேஷன் கடைகள்

ரேஷன் கடைகள்

இந்நிலையில் மேலும் 2 புதிய அறிவிப்புகளை அமைச்சர் ஐ.பெரியசாமி அறிவித்துள்ளார்.. மதுரை விமான நிலையத்தில் செய்தியாளர்களிடம் பேசிய பெரியசாமி சொன்னதாவது: "ரேஷன் கடைகளில் மக்களுக்கு நல்ல அரிசி வழங்க வேண்டும் என்பதில் அரசு உறுதியாக உள்ளது.. அங்கு தரமான அரிசி வழங்கப்படுகிறது.. பகுதி நேர கடைகள் ஏராளமாக அமைக்கப்பட்டு எம்எல்ஏ நிதி மூலம் கட்டடங்கள் கட்டப்படுகிறது. ரேஷன் கடைகளில் அனைத்து பொருட்களும் கிடைப்பதற்கு தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது. கூட்டுறவு துறையில் பல புதிய மாற்றங்கள் இனி அடுத்தடுத்து வரவுள்ளது.

 பார்ட் டைம்

பார்ட் டைம்

ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கிராமங்களில் 150 கார்டுகளுக்கு தனியாக பகுதிநேர கடை அமைக்க தமிழக அரசு திட்டமிட்டு வருகிறது. கடந்த 10 ஆண்டு இருந்த போதை பொருள் விற்பனை புழக்கத்தை ஒரே ஆண்டில் திமுக அரசு தடுத்து நிறுத்தியுள்ளது... போதை பொருள் விற்பனை செய்தவர்களின் கோடிக்கணக்கான சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளன. இதுவரை 1500 வழக்குகள் போடப்பட்டுள்ளது. போதை தடுப்பதற்கு பள்ளி, கல்லூரிகளில் உறுதிமொழி ஏற்க உள்ளோம்" என்றார்.

 150 கார்டுகள்

150 கார்டுகள்

ரேஷன் அரிசி கடத்துபவர்கள் மீது தகுந்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று ஏற்கனவே சட்டசபையில் அறிவித்திருந்த நிலையில், அதற்கான அதிரடிகளைதான், கூட்டுறவுத்துறை கையில் எடுத்துள்ளது.. அத்துடன் கிராமங்களில் 150 கார்டுகளுக்கு தனியாக பகுதிநேர கடை அமைக்க நேர்ந்தால், இது நிச்சயம் கிராமப்புற ஏழை எளிய மக்களுக்கு பேருதவியாக இருக்கும் என்றும் நம்பப்படுகிறது.. இதைதவிர இன்னும் 4 நாட்களில், கூட்டுறவுத் துறையில் புது அறிவிப்புகள் வெளியாக இருப்பதாகவும் கூறப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+