"ராஜதந்திரம்".. ஒருவரும் ஏமாற்ற முடியாது.. ஸ்டாலினை "தம்பி"ன்னு கூப்பிட்டால்.. உருகியது யார் பாருங்க

முதல்வர் ஸ்டாலினை புகழ்ந்து துரைமுருகன் பேசிய பேச்சு இணையத்தில் ஷேர் ஆகி வருகிறது

Subscribe to Oneindia Tamil

சென்னை: முதல்வர் ஸ்டாலினின் செயல்பாடுகள் குறித்து திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசிய வீடியோ பேச்சு, கட்சியினரிடம் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது. அத்துடன் முதல்வரை ராஜதந்திரி என்று குறிப்பிட்டு பேசியதை திமுகவினர் ஷேர் செய்து வருகிறார்கள்.

திமுகவின் பொதுச் செயலாளராக துரைமுருகன் 2வது முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.. இந்நிலையில் கட்சி நிகழ்ச்சி ஒன்றில் பேசிய திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் பேசிய பேச்சு இணையத்தில் வைரலாகி கொண்டிருக்கிறது.

அந்த பேச்சின் சுருக்கம்தான் இது: ''எனக்கு வெற்றியை தந்ததால் எனக்கு ஏற்பட்ட புகழ் இவை அத்தனையும் சேர்ந்துதான் இன்றைக்கு நான் பொதுச் செயலாளராக உருவாகியிருக்கிறேன். இது மிகப்பெரிய பதவி.

 1,2,3 & 4

1,2,3 & 4

ஒன்றரை கோடி, இரண்டரை கோடி உறுப்பினர்களைக் கொண்ட ஒரு கழகத்தில் 3 பெரும் பதவிகள் உண்டு. ஒன்று தலைவர், பொதுச்செயலாளர், பொருளாளர். பொருளாளராகவும் நான் இருந்திருக்கிறேன் பொதுச் செயலாளராகவும் இன்றைக்கு நான் உயர்ந்திருக்கிறேன். என் வாழ்நாள் முழுவதும் திமுக திமுக என்று இருக்கிற காரணத்தினால் என்னை போல் யார் உழைத்தாலும் அவர்களுக்கு கழகம் உரிய அங்கீகாரத்தை வழங்கும். அதனால், எனக்கு தரப்பட்ட இந்த வாய்ப்பை நீங்கள் ஒவ்வொருவரும் பெற்றதாக கருத வேண்டும்.

 கருணாநிதி

கருணாநிதி

திமுக தோன்றியது 1949. அப்பொழுது பேரறிஞர் அண்ணா திமுகவில் பொதுச்செயலாளர். அவரையடுத்து நாவலர் பொதுச் செயலாளர். அதைத்தான் அண்ணா சொன்னார் "தம்பி வா... தலைமை தாங்க வா... உன் ஆணைக்கு கட்டுப்பட்டு இருப்போம்" என்று அண்ணா நாவலரை பொதுச்செயலாளராக நியமித்து வரவேற்றார்கள். அதற்குப் பிறகு நம்முடைய பேராசிரியர் பொதுச் செயலாளராக இருந்தார். அந்த மூன்று பேருக்கு பிறகு நாலாவதாக நான்தான் அந்த ஸ்தானத்தில் உட்கார்ந்து இருக்கிறேன். இது எவ்வளவு பெரிய பொறுப்பு. சாதாரணமானது அல்ல.

கலைஞர்

கலைஞர்

எனவே இந்த இயக்கத்தில் யார் உண்மையாக பாடுபட்டாலும் பாடுபட்டதற்கேற்ப ஒரு பதவி வழங்கப்படும் என்பதை நமக்கு எல்லோருக்கும் தெரிவித்திருக்கிறார்கள். கலைஞர் காலத்துக்கு பிறகு, ஸ்டாலினின் செயல்பாடுகளை பார்த்து நானே வியந்து போயிருக்கிறேன்.. 53 வருட காலம் தலைவருடனேயே அவரது மடியில் வளர்ந்தேன்.. எனக்கு அவரை பற்றி நன்றாகவே தெரியும்.. அதேபோல தம்பி ஸ்டாலினை பற்றியும் நன்றாக தெரியும்.. கலைஞருக்கும் ஸ்டாலினுக்கும் என்ன வித்தியாசம் என்றால், தலைவர் எதுவானாலும் உடனே பளீர்ன்னு கேட்டு விடுவார்.. ஆனால் ஸ்டாலின் வாயே திறக்க மாட்டார்.. நாம ஏதாவது சொன்னால்கூட காதில் கேட்காத மாதிரி இருப்பார்..

 சென்சார் போர்டு

சென்சார் போர்டு

"தம்பி"..ன்னு கூப்பிட்டால், அப்பதான் போன் எடுத்து காதில் வைத்து நம்மள கண்டுக்காமல் பேசுவார்.. இது ஒரு ராஜதந்திரம்.. ஆனால், நாம் சொன்னதை காதில் வாங்கி கொண்டு, அதைபற்றி சிந்தித்து, நடைமுறைப்படுத்துவதிலே முதல் ஆள் தளபதி ஆவார்.. அதனால்தான் சொல்கிறேன்.. உன்னை எவனும் ஏமாற்ற முடியாது.. 65-களில் என்னை மேடையேற்றி, தணிக்கை குழு, மாணவர் அணி செயலாளர், பாராளுமன்ற போர்டு, பொதுச்செயலாளர், தலைமைச்செயலாளர், துணை பொதுச்செயலாளர் என எல்லா பதவிகள் வரைக்கும் என்னை கொண்டு அமர வைத்து அழகுபார்த்தார் கலைஞர்.. அவரது மகனோ என்னை பொதுச்செயலாளர் பதவி வரைக்கும் கொண்டு வந்துவிட்டார்..

 கோபுரம் + செங்கல்

கோபுரம் + செங்கல்

எனக்கு இப்பவும் பயம் உண்டு.. காரணம், இது பேரறிஞர் உட்கார்ந்த இடம், ஆயிரம் இருந்தாலும் நாவலர் உட்கார்ந்த இடம், பேராசிரியர் உட்கார்ந்த இடம், இன்று இந்த துரைமுருகன் இன்று உட்கார்ந்திருக்கானே என்ற பயம் உண்டு.. ஆனாலும், அண்ணா பாணியில் சொல்ல வேண்டுமானால், அவர்கள் எல்லாம் கட்டி முடித்த கோபுரம், நான் கொட்டிக்கிடக்கிற செங்கல். அந்த செங்கல்லுக்கு கூட மு.க.ஸ்டாலின் இவ்வளவு பெரிய வாய்ப்பை வழங்கி இருக்கிறார். அந்த கோபுரமாக மாறுவதற்கு நான் நிச்சயமாக, முயற்சி எடுத்து கொண்டிருக்கிறேன் என்ற உறுதிமொழியை உங்களுக்கு தருகிறேன்" என்றார் துரைமுருகன்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+