"இதான் திமுக".. ஈவிகேஎஸ் இளங்கோவன் ஈரோடு கிழக்கில் போட்டி?.. லட்டுபோல வரப்போகும் "அந்த" பதவி.. செம்ம
ஈரோடு கிழக்கு தொகுதியில் ஈவிகேஎஸ் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல்கள் கூறுகின்றன
சென்னை: ஈரோடு கிழக்கு தொகுதியில் யார் போட்டியிட போகிறார்கள்? வேட்பாளர்கள் யார் யார் என்ற எதிர்பார்ப்பு தமிழக அரசியல் களத்தில் நிலவி வருகிறது. அந்தவகையில், திமுக கூட்டணி சார்பில், காங்கிரஸ் கட்சியின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட போவதாக தகவல் வெளியாகி உள்ளது. இது கதர் கட்சிக்கு மிகுந்த மகிழ்ச்சியை ஏற்படுத்தி வருகிறது.
சமீபத்தில் மாரடைப்பால் காலமாகியிருக்கிறார் திருமகன். இதனையடுத்து, இந்த தொகுதி காலியாக இருக்கிறதாக தலைமை தேர்தல் ஆணையத்துக்கு முறைப்படி தமிழக தேர்தல் அதிகாரி சாஹு தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் வரும் பிப்ரவரி மாதம் 27ம் தேதி நடைபெறும் என இந்திய தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.

நெருங்கும் டைம்
தேர்தலுக்கான வேட்பு மனுத்தாக்கல் ஜனவரி 31ம் தேதி முதல் தொடங்கும் என்றும், வேட்பு மனு தாக்கல் செய்ய கடைசி நாள் பிப்ரவரி 7ம் தேதி என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. வேட்புமனு பரிசீலனை பிப்ரவரி 8ம் தேதியும், வேட்புமனு திரும்ப பெறும் நாள் பிப்ரவரி 10 என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. ஈரோடு கிழக்கு தொகுதி இடைத்தேர்தலுக்கான வாக்கு எண்ணிக்கை மார்ச் 2ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.. இந்த இடைத்தேர்தலில் போட்டியிடப் போவது யார் என்ற எதிர்பார்ப்புகள் எகிறி வந்தநிலையில், தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதால், அதற்கான பரபரப்புகள் மேலும் கூடிவருகின்றன.

வாசன்
கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் போட்டியிட்ட யுவராஜா தோல்வியடைந்தார்.. அதனால், இந்த முறையும் வாசன் மூலம் இந்த தொகுதியை பெற யுவராஜா முனைப்பு காட்டி வருவதாக தெரிகிறது.. சின்னம் பெறுவதில் சிக்கல் இருந்தால் இந்த முறையும், தமாகாவுக்கே, சமயோஜிதமாக அதிமுக அந்த தொகுதியை விட்டுக்கொடுக்க முன்வரலாம் என்கிறார்கள் அரசியல் நோக்கர்கள்.. அதேபோல, திமுக தரப்பில் யார் போட்டியிட போகிறார்கள் என்ற ஆர்வம் கடந்த ஒரு வாரமே எழுந்து வந்தது.

அறிவாலயம்
வழக்கமாக, தமிழக கூட்டணி அரசியலில் இடைத் தேர்தல்களில் போட்டியிடும் வாய்ப்பு, முந்தைய தேர்தலில் எந்த கட்சி போட்டியிட்டதோ அந்த கட்சிக்கே சீட் ஒதுக்குவது என்பது நாகரீகமாக இருந்து வருகிறது. குறிப்பாக இந்த கொள்கையை திமுக பின்பற்றி வருகிறது. ஆனால், ஆட்சிக்கட்டிலில் அமர்ந்து ஒன்றரை வருடங்கள் கழித்து, சந்திக்க போகும் முதல் இடைத்தேர்தல் என்பதால், இந்த முறை இந்த தொகுதியில் திமுக போட்டியிட வேண்டும் என அறிவாலயத்திற்கு ஈரோடு திமுகவினர் அழுத்தம் தந்து வருவதாகவும் சொல்லப்பட்டது.. இப்படிப்பட்ட சூழலில், ஒரு முக்கிய தகவல் நமக்கு பிரத்யேகமாக கிடைத்தது.

அபிப்பிராயம்
முதல்வர் ஸ்டாலின், வேட்பாளர் தேர்வு குறித்த தன்னுடைய அபிப்பிராயத்தை அவர்களிடம் வெளிப்படுத்தினாராம்.. அப்போது, "காங்கிரசின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஜெயித்த தொகுதி. அதனால் அவரின் மனநிலையை குறிப்பாக அவரது விருப்பத்தை அறிந்து கொள்வது முக்கியம். இளங்கோவனின் குடும்பத்தினர் ஒருவருக்கு காங்கிரஸ் தலைமை வாய்ப்பளிக்கும் பட்சத்தில், காங்கிரசுக்கே மீண்டும் இந்த தொகுதியை ஒதுக்கலாம். செல்வாக்கில்லாத காங்கிரஸ்காரர் ஒருவருக்கு வாய்ப்பளிப்பதாக இருந்தால் திமுகவே போட்டியிடலாம்.

சான்சஸ்
ஏனெனில், வேறு யாருக்காவது தொகுதியை ஒதுக்கி அவர் தோற்றுப்போனால் அது காங்கிரசை மட்டுமல்ல திமுகவையும் திமுக ஆட்சியையும் அரசியல் ரீதியாக பாதிக்கும். அதனால் காங்கிரசின் முடிவு என்னவாக இருக்கிறது என தெரிந்து முடிவு செய்துகொள்ளலாம் என்று சொன்னாராம் முதல்வர் ஸ்டாலின். இந்நிலையில், இன்றைய தினம் இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், காங்கிரஸ் கட்சி சார்பில் திருமகன் ஈவெராவின் தந்தை, ஈவிகேஎஸ் இளங்கோவன் போட்டியிட வாய்ப்புள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது..

நுணுக்கங்கள்
வழக்கமாக, இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சி வெற்றி பெறுவது இயல்பு. எனினும், அதை தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி கொள்ளாமல், சொந்த கட்சியிலே அழுத்தங்கள் தரப்பட்டபோதிலும்கூட, அதை பரிசீலிக்காமல், காங்கிரசுக்கு தொகுதியை திமுக மேலிடம் விட்டுக்கொடுத்துள்ளதாகவும் தெரிகிறது.. ஈவிகேஎஸ் இளங்கோவனை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர். மாநில கட்சியின் நுணுக்கங்களை அறிந்தவர். அத்துடன், திமுக தரப்புடன் நல்லுறவை தொடர்ந்து பேணி வருபவர்.

தில்லுமுல்லு
கடந்தமுறை, தேனி தொகுதியில் இவர் போட்டியிட்டபோது, மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தார்.. எப்படியும் வெற்றி பெற்றுவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், நூலிழையில் தன் வாய்ப்பை தவறவிட்டார்.. தேர்தல் ஆணையம் தில்லுமுல்லு செய்திருப்பதாகவும், அதற்கான ஆதாரங்கள் தம்மிடம் இருப்பதாகவும், விரைவில் வழக்கு தொடர இருப்பதாகவும் ஈவிகேஎஸ் அப்போது தன்னுடைய செய்தியாளர்களிடம் ஆதங்கத்தை கொட்டியிருந்தார் என்றாலும், தொகுதியில் தனக்கான மதிப்பையும், செல்வாக்கையும், இன்னமும் தக்கவைத்தபடியே உள்ளார் ஈவிகேஎஸ் இளங்கோவன்.

ஷார்ப் கருத்து
அதேபோல, வரும் இடைத்தேர்தலிலும், இளங்கோவனுக்கான வெற்றி வாய்ப்பு நிச்சயம் என்று அடித்து சொல்கிறார்கள் ஈரோடு காங்கிரஸார்.. இந்த தொகுதியில் இளங்கோவன் வெற்றி பெற்றால், கட்சியின் சீனியர் என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவராகவும் அவர் தேர்ந்தெடுக்கப்படுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.. மிகச்சிறந்த பேச்சாளரான இளங்கோவன், அக்கட்சியின் சட்டமன்ற தலைவாகும்பட்சத்தில், தன்னுடைய கருத்துக்களை துல்லியமாகவும், துணிச்சலாகவும் ஆணித்தரமாகவும் சட்டசபையில் முன்வைத்து பேசும்போது, இவை அனைத்துமே அக்கட்சிக்கு பலமாகவும், உரமாகவும் திகழும் என்றும் நம்பப்படுகிறது..!!
-
ஹார்முஸில் இறங்கும் இந்திய கடற்படை.. நடுக்கடலில் சிக்கியுள்ள இந்திய கப்பல்களை மீட்க அதிரடி ஆபரேஷன் -
நாய்க்கு கூட நன்றி இருக்கும்.. எடப்பாடி பழனிசாமி குறித்து சசிகலா விமர்சனம் -
கடைசி சான்ஸ்.. மிஸ் பண்ணிடாதீங்க.. பிறப்புச் சான்றிதழில் வருது மேஜர் முடிவு.. ஆவணங்களை ரெடி பண்ணுங்க -
அஜிதா ஆடிய மைண்ட் கேம்.. தவெக-வை தவிக்கவிட்டு திமுக பக்கம் தாவ இதுதான் காரணமா? தூத்துக்குடி மாஸ் -
பேசி முடித்ததுமே சரிந்த பாமக நிறுவனர் ராமதாஸ்.. கேள்விப்பட்டதும் உடனே போன் போட்ட முதல்வர் ஸ்டாலின்! -
”5 கேப்டன் இருந்தும் என் பக்கத்துல இருக்கான் மச்சா” மும்பை அணியை செய்யும் சிஎஸ்கே! தெறிக்கும் மீம்ஸ் -
LIK vs TN 2026 box office: மூன்று நாள் முடிவில் பிரதீப் ரங்கநாதன் Vs நட்டி யாருக்கு வெற்றி? வசூல் நிலவரம் -
யாருங்க இந்த ஐடியாலாம் தருவது? தவெக விஜய் கொடுத்த வாக்குறுதியில்.. இருக்கும் பெரிய ஓட்டை! -
'ஜனநாயகன்' பட லீக்கில் என்ன நடந்தது.. தமிழக காவல்துறை முழு விளக்கம் -
சாத்தூரில் நயினார் வாங்கிய காத்து.. பாஜக தேசிய தலைவரையே கூட்டி வந்தும் கூட்டம் இல்லை -
ஆட்டம் ஆரம்பம்.. முதல் அடி தங்கம், வெள்ளி விலை.. இந்தியாவில் விடியும் முன்பே ஷாக்! -
ஹார்முஸில் வழிந்தோடும் ‘ரத்தம்’? பீதியில் உலக நாடுகள்.. கண்ணி வெடிகள் வேற குவிந்து கிடக்குதே












Click it and Unblock the Notifications