"இதான் திமுக".. ஈவிகேஎஸூக்கு செம "சர்ப்ரைஸ்".. லட்டு போல பதவி கிடைக்க போகுதே.. "கிழக்கில்" உதயசூரியன்
ஈவிகேஎஸ் இளங்கோவன் வெற்றி பெற்றுவிட்டால் அவருக்கு முக்கிய பதவி கிடைக்க வாய்ப்புள்ளதாம்
சென்னை: இன்றைய தினம் ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல் வாக்கு முடிவுகள் எண்ணப்பட்ட நிலையில், காங்கிரஸ் வேட்பாளர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் வெற்றி உறுதியாகி உள்ளது.. இந்நிலையில், அவருக்கு ஒரு சர்ப்ரைஸ் காத்திருப்பதாக சொல்லப்பட்டு வருகிறது.. என்னவாம்?
ஈரோடு கிழக்கு தொகுதிக்கான இடைத்தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டுவிட்டதுமே, அனைத்து கட்சிகளுமே பரபரப்பாகின.. வேறு எந்த தேர்தலுக்கும் இவ்வளவு டென்ஷன் வந்ததில்லை.
ஆளுக்கு ஒருபக்கம் ஆலோசனையில் ஈடுபட்டன.. கடந்த சட்டமன்ற தேர்தலில் ஈரோடு கிழக்கு தொகுதியில் அதிமுக கூட்டணியில் தமாகா சார்பில் போட்டியிட்ட நிலையில், இந்த முறையும் கூட்டணிக்கே தொகுதியை ஒதுக்க அதிமுக யோசித்து வந்ததாக தெரிந்தது.

உதயசூரியன்
சின்னம் பிரச்சனையும் அதிமுகவுக்கு இருந்தால், புது சின்னத்தில் போட்டியிட்டு ரிஸ்க் எடுக்காமல், அதேசமயம், திமுக கூட்டணியிடமும் தோல்வியடையாமல், சாதுர்யமாக கூட்டணிக்கே தொகுதியை ஒதுக்க அதிமுக முடிவெடுக்கும் என்றும் சொல்லப்பட்டது.. ஆனால், கடைசி நேரத்தில் எடப்பாடி பழனிசாமி எடுத்த சாதுர்யம் காரணமாக, நேரடியாகவே களத்தில் இறங்கி போட்டியிட போவதாக அறிவித்தார்.. இதனால் பாஜக, ஓபிஎஸ், அமமுக என எல்லாருமே அதிர்ந்தே போனார்கள்.. அதேபோல திமுக தரப்பிலும் இந்த தொகுதியை காங்கிரஸ் கேட்டு வந்தது..

அறிவாலயம் ரூட்
ஆனால், திமுகவோ, நாம்தான் நேரடியாக போட்டியிட வேண்டும், கூட்டணிக்கு விட்டுத்தரக்கூடாது என்று அறிவாலயம் வரை கோரிக்கைகள் பறந்தனவாம். தொகுதியை காங்கிரஸ் விட்டுக்கொடுத்தால், வரும் எம்பி தேர்தலில் ஈரோடு தொகுதியில் இளங்கோவனுக்கு போட்டியிடவும் திமுக தரப்பில் சீட் தந்துவிடலாம் என்றும் எடுத்து சொல்லப்பட்டுள்ளது. எனினும், முதல்வர் ஸ்டாலின் எதையுமே காதில் வாங்கவில்லையாம்.. ஒரு விஷயத்தில் மட்டும் கறாராக இருந்தாராம்.. தொகுதியை கூட்டணிக்கே விட்டுத்தருவது, இன்னும் சொல்லப்போனால் இளங்கோவன் குடும்பத்துக்கே இந்த தொகுதியை ஒதுக்க முடிவு செய்திருந்தாராம் முதல்வர் ஸ்டாலின்..

ஈரமனசு ஸ்டாலின்
காரணம், "காங்கிரசின் மூத்த தலைவர் ஈவிகேஎஸ் இளங்கோவனின் மகன் ஜெயித்த தொகுதி. அதனால் அவரின் மனநிலையை குறிப்பாக அவரது விருப்பத்தை அறிந்து கொள்வது முக்கியம். இளங்கோவனின் குடும்பத்தினர் ஒருவருக்கு காங்கிரஸ் தலைமை வாய்ப்பளிக்கும் பட்சத்தில், காங்கிரசுக்கே மீண்டும் இந்த தொகுதியை ஒதுக்கலாம். செல்வாக்கில்லாத காங்கிரஸ்காரர் ஒருவருக்கு வாய்ப்பளிப்பதாக இருந்தால் திமுகவே போட்டியிடலாம். ஏனெனில், வேறு யாருக்காவது தொகுதியை ஒதுக்கி அவர் தோற்றுப்போனால் அது காங்கிரசை மட்டுமல்ல திமுகவையும் திமுக ஆட்சியையும் அரசியல் ரீதியாக பாதிக்கும். அதனால் காங்கிரசின் முடிவு என்னவாக இருக்கிறது என தெரிந்து முடிவு செய்துகொள்ளலாம்" என்று முதல்வர் ஸ்டாலின் மூத்த நிர்வாகிகளிடம் சொன்னாராம்.

அவார்டு தந்த திமுக
அதுமட்டுமல்ல, திமுகவுடன் நல்ல புரிதலில் இளங்கோவன் உள்ள நிலையில், தமிழக அரசின் சார்பில் காமராஜர் விருதும், இளங்கோவனுக்கே வழங்கப்பட்டிருந்தது.. இப்படிப்பட்ட சமயத்தில்தான், ஈவிகேஎஸ் இளங்கோவன் வேட்பாளராக அறிவிக்கப்பட்டார்.. அடுத்த நிமிஷமே திமுக தரப்பில் மொத்த பேரும் காங்கிரஸை வெற்றி பெற வைக்கும் முயற்சியில் இறங்கிவிட்டனர்.. இளங்கோவன் சென்னையில் இருந்தாலும், வேட்பாளரே இல்லாத நிலையில், திமுக நிர்வாகிகளும், அமைச்சர்களும் தங்கள் பிரச்சாரத்தை தொடங்கிவிட்டனர்.. இந்த சூழலில்தான் இன்னொரு தகவலும் நமக்கு பிரத்யேகமாக கிடைத்தது.

பிக் போஸ்டிங்
ஒருவேளை, இளங்கோவன் இந்த தேர்தலில் நேரடியாக போட்டியிட்டு வெற்றி பெற்றால், சீனியர் என்ற முறையில், சட்டசபை காங்கிரஸ் தலைவர் பதவி அவருக்கு வழங்கப்படலாம் என்று சொல்லப்பட்டது.. காரணம், ஈவிகேஎஸ் இளங்கோவனை பொறுத்தவரை, காங்கிரஸ் கட்சியின் மாநில தலைவராக இருந்தவர். மாநில கட்சியின் நுணுக்கங்களை அறிந்தவர். அத்துடன், திமுக தரப்புடன் நல்லுறவை தொடர்ந்து பேணி வருபவர். கடந்தமுறை, தேனி தொகுதியில் இவர் போட்டியிட்டபோது, மிகப்பெரிய எதிர்பார்ப்பை உருவாக்கியிருந்தார்.. எப்படியும் வெற்றி பெற்றுவிடுவார் என்று எதிர்பார்த்த நிலையில், நூலிழையில் தன் வாய்ப்பை தவறவிட்டார்..

நயினார் நறுக்
எனவே, வரும் இடைத்தேர்தலிலும், இளங்கோவனுக்கான வெற்றி வாய்ப்பு நிச்சயம் என்றும், அப்படி வெற்றி பெற்றால், கட்சியின் சீனியர் என்ற அடிப்படையில் காங்கிரஸ் கட்சியின் சட்டமன்ற தலைவராக பதவி உயர்வு பெறுவார் என்றும் ஈரோடு காங்கிரஸார் அடித்து சொன்னார்கள்.. இன்றைய வாக்குகள் எண்ணப்பட்டுள்ளன.. வழக்கமாக இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சியே வெற்றி பெறுவது எழுதப்படாத விதி என்றாலும், இதுவரை வெளியான கருத்துக்கணிப்புகளிலும் இளங்கோவனுக்கே வெற்றி வாய்ப்பு என்பது வெளியானது.. அவ்வளவு ஏன்? பாஜகவின் நயினார் நாகேந்திரனே, திமுக கூட்டணிதான் வெற்றி பெறும் என்றும் ஆரூடம் கூறியிருந்தார்..

உரம் + பலம்
இதோ.. இன்றைய தினம் ஓட்டுக்கள் எண்ணப்பட்டுள்ளன.. வாக்கு வித்தியாசமே 60 ஆயிரத்தை தாண்டி சென்று கொண்டிருக்கிறது.. காங்கிரஸ் வேட்பாளர் இளங்கோவனின் வெற்றி உறுதியாகி உள்ளது.. எம்எல்ஏவாக வெற்றியை பெறுகிறார்.. அந்தவகையில், சட்டமன்ற தலைவர் பதவியும் அவருக்கு உறுதியாகி உள்ளதாக தெரிகிறது. சட்டமன்ற தலைவராக ஈவிகேஎஸ், உயரும்பட்சத்தில், தன்னுடைய கருத்துக்களை துல்லியமாகவும், துணிச்சலாகவும் ஆணித்தரமாகவும் சட்டசபையில் முன்வைத்து பேசும்போது, இவை அனைத்துமே அக்கட்சிக்கு பலமாகவும், உரமாகவும் திகழும் என்றும் கதர்கள் தரப்பிரலும் நம்பப்பட்டு வருகிறது.. இதனால் காங்கிரஸ் கூடாரமே ஹேப்பியில் உள்ளது..!!
-
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல் -
மாடுகளை பலியிட தடை.. நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவு! விஜய்க்கு சிபிஎம் வைத்த முக்கிய கோரிக்கை! -
ஆரம்பமே அடி சறுக்கல்.. சிங்கப்பெண் அதிரடிப்படை திட்டத்தின் தொடக்க விழா ரத்து!












Click it and Unblock the Notifications