"நான்சென்ஸ்".. அவரை டிஸ்டர்ப் பண்ணாதீங்க.. உருகிய நேரு.. பேச்சாலேயே மயக்கிய அறிஞர் அண்ணா.. சகாப்தம்
பேரறிஞர் அண்ணாவின் பிறந்தநாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது
சென்னை: திமுக என்ற கட்சியை உருவாக்கி அது, இன்று 70 வருடங்களை கடந்தும், தமிழ்நாட்டின் பிரதான கட்சிகளில் ஒன்றாக இருக்க காரணகர்த்தாவாக இருக்கும் மூலவேர் அண்ணாதுரை.. அவரது பிறந்தநாள் இன்று..!
சி.என்.எ. என்ற 3 எழுத்தால் தமிழ்நாட்டு அரசியலை புரட்டி போட்ட அண்ணாதுரையின் பிறந்த நாள் இன்று கொண்டாடப்படுகிறது.. இன்றைய தினம் முப்பெரும்விழாவாக திராவிட கட்சியினர் கொண்டாடி வருகிறார்கள்.
எளிமையான தோற்றம்.. எதிராளியையும் வசப்படுத்தும் புலமை.. குரலாலும், எழுத்தாலும் தமிழகத்தை ஆண்ட இந்த அறிஞர் அண்ணாதுரை யார்? .

யார் இந்த அண்ணாதுரை?
இந்தி எதிர்ப்பு போராட்டத்தின் மூலம் மாணவர்களை ஒன்றுதிரட்டி, இந்தி மொழியை தமிழ்நாட்டில் இருந்து விரட்டியடித்த போராளி அண்ணாதுரை. இவரை போல ஒரு பேச்சாளரை இந்த தமிழகம் கண்டதில்லை.. தமிழும் ஆங்கிலமும் அண்ணாவிடம் மண்டியிடும்.. அந்த அளவுக்கு சொற்களில் விளையாடுவார்.. இப்படித்தான், 1963-ம் அண்டு, நாடாளுமன்றத்தில் "சென்னை மாகாணம்" என்பதை "தமிழ்நாடு" என்று பெயர் மாற்றம் செய்யக் கோரும் தீர்மானம் ஒன்றை எம்பியாக இருந்த அண்ணா கொண்டுவந்தார்... ஆனால், அதற்கு காங்கிரஸ் கட்சியினர் எதிர்ப்பு தெரிவித்தனர். எம்என் லிங்கம் என்ற எம்.பி எழுந்து நின்று, "தமிழ்நாடு என்று பெயர் மாறினால், நீங்கள் அப்படி என்ன லாபம் அடைந்து விடப்போகிறீர்கள்?" என்று கேட்டார்.

லிங்கம்
அதற்கு அண்ணா, "மாநிலங்களவைக்கு ராஜ்யசபா என்றும், மக்களவைக்கு லோக்சபா என்றும், ஜனாதிபதிக்கு ராஷ்ட்ரபதி என்றும் பெயர் மாற்றம் செய்திருக்கிறீர்களே.. இதனால் நீங்க கண்ட என்ன லாபம் என்ன?" என்று திருப்பி கேட்டார்.. இதற்கு லிங்கத்திடமிருந்து ஒரு பதிலும் வரவில்லை.. அந்த அளவுக்கு எதிர்வாதம் வைப்பதில் சிறந்தவர் அண்ணாதுரை.. இவரது பேச்சாற்றலை கண்டு, பிரதமர் நேருவே வியந்து நின்ற தருணங்கள் உண்டு..

கன்னிப்பேச்சு
இந்தியை எதிர்க்கிறார் என்பதாலும், திராவிட நாடு கோரிக்கை போன்றவற்றால் அண்ணாவின் மீது கோபத்தில் இருந்தார் நேரு... இங்கு வரும்போது, கருப்பு கொடி காட்டியதால், "நான்சென்ஸ்" என்று திமுக தலைவர்களை திட்டிவிட்டும் சென்றவர்.. ஆனாலும் அண்ணாவின் கன்னிப்பேச்சை ஆங்கிலத்தில் கேட்டு ஆச்சரியப்பட்டு போனாராம். நேரம் கடந்துவிட்டது என்று அவைத் தலைவர் சுட்டிக்காட்டியபோது, குறுக்கிட்ட நேரு "அவரை தொந்தரவு செய்யாதீர்கள், பேசவிடுங்கள்" என்று சொல்லி ரசித்து கேட்டாராம்.. இப்படி, மாநிலங்களவை என்றில்லை, முதல்வராக இருந்தபோதே, எதிர்க்கட்சியினரும் அவரது பேச்சை ரசித்து கேட்பார்கள்..

நவீன முன்னேற்றம்
இந்த தமிழகத்துக்கு அறிஞர் அண்ணா செய்த நலன்கள் ஏராளம்.. கொண்டு வந்த திட்டங்கள் ஏராளம்.. இவைகளின் மூலம் பலனடைந்தவர்கள் ஏராளம்.. ஒருசிலவற்றை சொல்ல வேண்டுமானால், 1949ம் ஆண்டு திராவிட முன்னேற்றக் கழகத்தை உருவாக்கி வளர்த்தவர் அண்ணா.. தமிழகத்தின் நவீன முன்னேற்றத்திற்காகவும், சமூகநீதியை உறுதிப்படுத்துவதற்காகவும் அரசியல் அதிகாரம் தேவை என்பதை விளக்கி, அதற்கான திட்டங்களை வகுத்து, தமிழ்நாட்டின் சமூகநீதிப் பாதையை உருவாக்குவதில் அண்ணா பெரும் பங்காற்றியவர். திமுக, அதிமுக உள்ளிட்ட பல்வேறு திராவிட கட்சிகளின் உருவாக்கத்திற்கு அண்ணாவின் பங்கு அளப்பரியது..

படி அரிசி
மெட்ராஸ் மாநிலத்தை தமிழ்நாடு என பெயர் மாற்றும் சட்டத்தை நிறைவேற்றியவர்.. கடுமையான நிதி நெருக்கடிக்கு இடையிலும், தன்னுடைய தேர்தல் வாக்குறுதியான ஒரு ரூபாய்க்கு ஒரு படி அரிசி திட்டத்தை சென்னை மற்றும் கோயம்புத்தூர் மாநகராட்சிகளில் கொண்டு வந்தவர்.. புன்செய் நிலங்களில் மீதான நிலவரியை ரத்து செய்தவர்.. ஏழைகளுக்கு இலவச பள்ளிக் கல்வித் திட்டத்தை கொண்டு வந்தவர். ஜமீன்தாரி முறை ஒழிப்பு திட்டத்தின் மூலம் நிலங்களை இழந்த விவசாயிகளுக்கு இலவச பட்டாக்களை வழங்கப்பட்டது.. பேருந்துகள் அரசுடைமையாக்கப்பட்டது என அண்ணாவின் சாதனைகளை அடுக்கி கொண்டே போகலாம்...

பொக்கிஷம்
பெரியாரின் கொள்கைகளுக்கு அவர் சட்ட வடிவம் கொடுத்ததை மறுக்க முடியாது.. உலகத் தமிழ் மாநாட்டுக்கு ஏற்பாடு செய்ததில் அண்ணாவின் பங்கை மறக்க முடியாது.. தமிழகத்தில் இருமொழிக் கொள்கையை அறிமுகப்படுத்தியதையும் மறக்க முடியாது.. மொத்தத்தில் பேரறிஞர் அண்ணா தமிழகத்தின் பொக்கிஷம்.. அரை நூற்றாண்டுகளுக்கு முன்பு, இப்படியெல்லாம் அறிஞர் அண்ணா படைத்த மகத்தான இந்த சாதனை, இந்திய துணைக்கண்டத்திற்கே இன்றுவரை அரசியல் வழிகாட்டியாக இருக்கிறது.. இனியும் இருக்கும்..!
-
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்! -
மருமகள் உள்ளே, சீனியர் வெளியே? 55 கால சாம்ராஜ்ஜியத்திற்கு செக்! காட்பாடி திருப்பத்தின் பின்னணி என்ன -
இரட்டை இலையை விட்டுவிட்டு.. தாமரைக்கு தாவும் கூட்டணி கட்சிகள்! எங்கேயோ இடிக்குதே! -
ஈரானை சுத்துப்போடும் ‘பாராசூட் அட்டாக்’ டீம்.. டிரம்ப் பெரிய பிளான்.. போர் இப்போதைக்கு முடியாது? -
10 சவரன் கையில், 8 சவரன் பில்லில்! பழைய நகையை மாற்றினால் நடக்கும் ரகசியம்.. ஏமாறாமல் இருக்க இதோ வழி












Click it and Unblock the Notifications