சபாஷ்! அருமையான திட்டம்.. ரொம்ப நன்றி சார்: முதல்வர் ஸ்டாலினை நெகிழ்ந்துபோய் பாராட்டிய விஜய் ஆண்டனி!
சென்னை: இன்று முதல் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து அரசுப் பள்ளிகளிலும் 1-5ஆம் வகுப்பு வரை படிக்கும் மாணவ மாணவிகளுக்கு காலை சிற்றுண்டி வழங்கப்படுகிறது. இந்த மகத்தான திட்டத்தைச் செயல்படுத்திய முதல்வர் ஸ்டாலினுக்கு நடிகரும், இசையமைப்பாளருமான விஜய் ஆண்டனி நெகிழ்ச்சியுடன் நன்றி தெரிவித்துள்ளார்.
தமிழ்நாட்டில் உள்ள அரசுப் பள்ளிகளில் படிக்கும் ஏழை எளிய மாணவர்களின் கல்வியை ஊக்குவிக்கவும், ஊட்டச்சத்து குறைபாட்டை போக்கவும், கற்றல் இடைநிற்றலை தவிர்க்கவும் அரசுப் பள்ளிகளில் காலை சிற்றுண்டி திட்டம் அமல்படுத்தப்படும் என்று சட்டப்பேரவையில் 110-வது விதியின்கீழ் முதல்வர் ஸ்டாலின் கடந்த ஆண்டு மே 7ஆம் தேதி அறிவித்தார்.

அந்த வகையில் முதல் கட்டமாக, சில மாநகராட்சிகள், நகராட்சிகளில் உள்ள அரசுப் பள்ளிகளில் 1 முதல் 5ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவ, மாணவிகளுக்கு அனைத்து பள்ளி வேலை நாட்களிலும் காலையில் சத்தான சிற்றுண்டி வழங்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு, கடந்த 2022 செப்டம்பர் 15ஆம் தேதி அண்ணா பிறந்தநாளில், மதுரை மாநகராட்சி தொடக்கப் பள்ளியில் காலை உணவு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைத்தார்.
கடந்த மார்ச் 1ஆம் தேதி இத்திட்டம் விரிவாக்கம் செய்யப்பட்டது. இதையடுத்து, 417 மாநகராட்சி பள்ளிகளில் 43,681 பேர், 163 நகராட்சி பள்ளிகளில் 17,427 பேர், 728 வட்டாரம் மற்றும் கிராம ஊராட்சி பள்ளிகளில் 42,826 பேர், 237 தொலைதூர, மலைப்பிரதேச பள்ளிகளில் 10,161 பேர் என மொத்தம் 1,545 பள்ளிகளில் 1.14 லட்சம் மாணவ, மாணவிகள் பயன்பெற்று வருகின்றனர்.
இந்நிலையில், மாநிலம் முழுவதும் உள்ள 31,008 அரசுப் பள்ளிகளுக்கு இத்திட்டம் இன்று முதல் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. இன்று முதல்வர் ஸ்டாலின் காலை உணவு திட்டத்தை விரிவாக்கம் செய்யும் வகையில் திருக்குவளையில் உள்ள அரசு தொடக்க பள்ளியில் குழந்தைகளுக்கு காலைச் சிற்றுண்டி வழங்கினார். அதேபோல, தமிழ்நாடு முழுவதும் அனைத்து இடங்களிலும் இன்று முதல் காலை உணவு வழங்கப்படுகிறது. இதன் மூலம் நாள்தோறும் 16 லட்சம் மாணவர்கள் பள்ளியிலேயே காலை உணவு சாப்பிட்டு பயன் பெறுவார்கள். இதற்காக ரூ.404 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த திட்டத்தின்கீழ், காலையில் உப்புமா, ரவா கிச்சடி, ரவா கேசரி, பொங்கல், காய்கறி சாம்பார் உள்ளிட்ட பல்வேறு வகை உணவுகள் மாணவ-மாணவிகளுக்கு வழங்கப்பட்டு வருகிறது. காலை உணவு திட்டத்தின் கீழ் திங்கட்கிழமை காய்கறி சாம்பாருடன் உப்புமா வகைகள் வழங்கப்படும். செவ்வாய்க்கிழமை கிச்சடி வகைகள் வழங்கப்படும். இப்படி 5 வேளை நாட்களிலும் என்னென்ன உணவு, எவ்வளவு அளவு வழங்க வேண்டும், பழைய எண்ணெய்யை பயன்படுத்தக்கூடாது என்பது முதற்கொண்டு அரசால் நெறிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளன.
மாணவர்கள் பசியின்றி படிப்பில் கவனம் செலுத்திடும் வகையில் கொண்டு வரப்பட்டுள்ள இந்த திட்டம் நாட்டுக்கே முன்னோடி திட்டமாக அமைந்துள்ளது. பள்ளி மாணவர்களுக்கான இந்த காலை உணவுத் திட்டத்திற்கு பல்வேறு தரப்பினரும் பாராட்டு தெரிவித்து வருகின்றனர். அந்த வகையில் இசையமைப்பாளரும், நடிகருமான விஜய் ஆண்டனியும் பாராட்டு தெரிவித்துள்ளார்.
Our govt school students will now get a good, nutritious breakfast in their campus. I am very happy that Tamil Nadu is focussing on schemes like this. Our young students can happily come to schools and study without hunger. Great scheme👍😊thank you @mkstalin sir! pic.twitter.com/iw4QjaZjEC
— vijayantony (@vijayantony) August 25, 2023
விஜய் ஆண்டனி வெளியிட்டுள்ள ட்விட்டர் (X) பதிவில், "எங்கள் அரசுப் பள்ளி மாணவர்கள் இப்போது தங்கள் வளாகத்தில் நல்ல, சத்தான காலை உணவைப் பெறுவார்கள். தமிழகம் இதுபோன்ற திட்டங்களில் கவனம் செலுத்தி வருவதால் மிகவும் மகிழ்ச்சி அடைகிறேன். எங்கள் மாணவர்கள் மகிழ்ச்சியுடன் பள்ளிகளுக்கு வந்து பசியின்றி படிக்கலாம். அருமையான திட்டம். முதல்வர் மு.க. ஸ்டாலினுக்கு நன்றி" எனத் தெரிவித்துள்ளார்.
-
கேஸ் சிலிண்டர் விலை மாறுது! ஏப்.1 முதல் புதிய விலை! இல்லத்தரசிகள் மாத பட்ஜெட்டில் என்ன தாக்கம்? -
தங்கம்.. 'தரை' தட்டியது ஏன்? கூடை கூடையாக மார்க்கெட்டில் விற்ற அரபு நாடுகள்.. ஒரு ராட்சனின் வீழ்ச்சி -
இமாச்சல் போல.. தமிழகத்தில் அரசு ஊழியர்களின் மாத சம்பளத்தை 30% குறைக்க வேண்டியது வரும்.. அன்புமணி -
டெல்லி தந்த கிரீன் சிக்னல்.. 4 வழியாக மாறும் தமிழ்நாட்டின் மூன்று முக்கிய சாலைகள்.. மெகா பிளான்! -
அதிமுக கூட்டணியில் பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு! -
PHH, AAY ரேஷன் கார்டுதாரர்களுக்கு முக்கிய அறிவிப்பு! கார்டு காலி ஆயிடும்..ரேகை வைக்கலைனா ப்ளாக் தான் -
நாகர்கோவில் எம்எல்ஏ காந்திக்கு கல்தா.. பாஜக தலைமை முடிவால் கலக்கம் -
பெட்ரோல் இல்லை.. ஆசிய நாடுகளுக்கு ‘நோ’ சொன்ன அராம்கோ? உலக அரசியலே தடம் புரள போகுது? -
பாரதத்தின் நிரந்தர பிரதமர்.. வட இந்தியாவில் திமுக சிலிண்டர் விளம்பரம் ஹிட்.. தர்ம சங்கடத்தில் பாஜக -
தங்கக் காசு மூலம் டிரம்ப் வேலையை காட்டிட்டாரு! அமெரிக்காவில் தங்க நாணயம் தந்த அதிர்ச்சி -
10 பைசா கூட வராது.. தங்கத்தை மொத்தமாக விற்கும் முதலீட்டாளர்கள்.. நெருங்கி வரும் பேரழிவு? -
தேமுதிகவுக்கு எத்தனை தொகுதிகள்? எங்கெங்கு போட்டியிடுகிறார்கள்? உத்தேச பட்டியல் இதுதானா?












Click it and Unblock the Notifications