"சிக்ஸர்" அடித்த இம்ரான்கான்.. "எனக்கு ஒரு ஆசை".. மறுபடியும் நம்ம இந்தியாவா.. சட்டென கவனித்த நாடுகள்
இந்தியாவின் வெளியுறவு கொள்கையை இம்ரான்கான் மீண்டும் புகழ்ந்து பேசியுள்ளார்
சென்னை: இந்தியாவை மறுபடியும் மறுபடியும் பாராட்டி பாகிஸ்தானின் இம்ரான்கான் பேசியது, உலக அரசியலின் கவனத்தை ஈர்த்து வருகிறது.
ஆட்சியில் இருந்தபோதும் சரி, இல்லாதபோதும் சரி, இந்தியாவை புகழ்வதை விடாமல் செய்து கொண்டிருக்கிறார் பாகிஸ்தான் நாட்டின் இம்ரான்கான்.
கடுமையான பொருளாதார நெருக்கடியை பாகிஸ்தான் சந்தித்தது.. என்னென்னவோ திட்டங்களை, அறிவிப்புகளை இம்ரான் கான் மேற்கொண்டும், நிலைமையை சீரமைக்க முடியவில்லை..

ட்விஸ்ட்
சரியாக அரசாங்கத்தை வழிநடத்தவில்லை என்பதால், இம்ரான்கான் ராஜினாமா செய்ய வேண்டும் என்று அந்த நாட்டு மக்களும், எதிர்க்கட்சிகளும் தொடர்ந்து குற்றஞ்சாட்டி வந்த நிலையில், நாடாளுமன்றத்தில் எதிர்க்கட்சிகள் சார்பில் நம்பிக்கையில்லாத் தீர்மானம் கொண்டுவரப்பட்டது. அந்த நம்பிக்கையில்லாத் தீர்மானம் வெற்றியும் பெற்றது.. இம்ரான் கான் அரசும் கவிழ்ந்தது.. பாகிஸ்தான் பிரதமர் பதவியிலிருந்தும் நீக்கப்பட்டார். இப்படிப்பட்ட சூழலில், சில மாதங்களுக்கு முன்பு இம்ரான் கான் ஒரு பேட்டி தந்திருந்தார்..

சூப்பர் இந்தியா
அதில், இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை சுதந்திரமானது, அது மக்களின் நலனுக்கானது என்று வெளிப்படையாகவே கூறியிருந்தார்.. இதற்கு பிறகு, ரஷ்யா - உக்ரைன் போர் உச்சத்தில் இருந்தசமயம், மறுபடியும் ஒரு பேட்டி தந்திருந்தார்.. அதிலும் இந்தியாவை புகழ்ந்து பேசினார்.. "ரஷ்யா, உக்ரைன் மீது போர் தொடுத்துவரும் நிலையில், ரஷ்யாவுக்கு எதிராக ஐநா சபை கொண்டுவந்த தீர்மானங்கள் மீது இந்தியா வாக்கெடுப்பை புறக்கணித்தது. மேலும், அமெரிக்கா பொருளாதாரத் தடை விதித்துள்ள ரஷ்யாவிடமிருந்து கச்சா எண்ணெயை வாங்கி வருகிறது.

ஒரே போடு
ஆனால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் இந்தியாவுக்கு எதிர்ப்பு தெரிவிப்பதில்லை. இதற்குக் காரணம் இந்தியாவின் வெளியுறவுக் கொள்கை அந்த நாட்டு மக்களின் நலன் மற்றும் முன்னேற்றத்துக்கானது. ஆனால் பாகிஸ்தானின் வெளியுறவுக் கொள்கை மற்றவர்களின் முன்னேற்றத்துக்கானது" என்று ஒரே போடாக போட்டார். இம்ரான்கானின் இந்த பேச்சை உலக நாடுகள் உற்று கவனிக்கவே செய்தன.. ஆனாலும், தன் நிலைப்பாட்டில் இன்றுவரை உறுதியாக இருக்கிறார் இம்ரான்கான்.

ஓபன் அட்டாக்
தற்போது, லாகூரில் உள்ள லிபர்ட்டி சவுக்கிலிருந்து இஸ்லாமாபாத்திற்கு மிகபெரும் பேரணியை தொடங்கி, நவம்பர் 4ம் தேதி இஸ்லாமாபாத்திற்கு வர திட்டமிட்டுள்ளார்... இந்த பேரணிக்கு நாட்டின் உண்மையான சுதந்திரத்திற்கான போராட்டம் என்றும் பெயரை வைத்துள்ளார். இந்த உண்மையான சுதந்திரம் எது என்பது குறித்து இம்ரான்கான், பொதுவெளியில் பேசி வருகிறார்.. இதற்காக இந்தியாவின் பெயரையும் அடிக்கடி பயன்படுத்தி, பாராட்டி வருகிறார்.. நேற்றுகூட இப்படித்தான் நடந்துள்ளது..

அஸ்திரங்கள்
இந்த பேரணியின்போது ஆதரவாளர்களிடம் பேசிய இம்ரான் கான், "உக்ரைன் போருக்கு இடையில், மேற்கத்திய அழுத்தங்களையும் மீறி, அதன் தேசிய நலன்களுக்கு ஏற்ப, சுதந்திர வெளியுறவுக் கொள்கை மற்றும் ரஷ்யாவிலிருந்து இந்தியா கச்சா எண்ணெயை வாங்கியுள்ளது.. எனக்கு எத்தனையோ விஷயங்கள் தெரியும். ஆனால் நான் என்னுடைய சொந்த நாட்டிற்கு தீங்கு விளைவிக்க விரும்பவில்லை.. அதனால்தான் அமைதியாக இருக்கிறேன்.. முன்னேற்றத்திற்காக ஆக்கபூர்வமான விமர்சனங்களை செய்கிறேன். எனக்கு ஒரு ஆசை.. சுதந்திரமான பாகிஸ்தானை பார்க்க விரும்புகிறேன்..

கழுகுப்பார்வை
அதற்கு சக்தி வாய்ந்த ராணுவம் தேவை.. நாங்கள் பாதுகாப்பு நிறுவனங்களை விமர்சிக்கும்போது, அது ஆக்கப்பூர்வமாகவும் நாட்டின் முன்னேற்றத்திற்காகவும் இருக்கிறது. ஆனால் பாதுகாப்பு நிறுவனங்கள் பலவீனமடைவதை நான் விரும்பவில்லை... எனக்கு சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் வேண்டும்... இனி, யார் நாட்டை வழிநடத்துவது என்பதை மக்கள்தான் தீர்மானிக்க வேண்டும் என்றார். இம்ரான்கானின் இந்த் பேச்சு, உலக அரசியலில் மீண்டும் உற்றுநோக்கப்பட்டு வருகின்றன.
-
ஏடிஎமில் கேட்டது ரூ.10,000.. கிடைச்சது ரூ.3 லட்சம்! ஆனாலும் வாடிக்கையாளர் பயங்கர சோகம்! ஏன் தெரியுமா -
இந்தியாவில் இறங்கிய 7 வெளிநாட்டவர்.. கைமாறிய ஆயுதங்கள்.. சத்தமே இல்லாமல் தட்டி தூக்கிய என்ஏஐ! -
ரஷ்யாவின் அதிரடி முடிவு.. திகைப்பில் நின்ற சீனா! கத்தார் போருக்கு நடுவே இந்தியாவுக்குக் கிடைத்த மிகப்பெரிய வெற்றி -
இந்தியாவின் நிலைமை மோசமாக போகுது! டிரம்ப் பார்த்த வேலையால் வந்த வினை! இப்படியா சிக்கல் வரனும்! -
இந்திய கப்பல்களில் வந்த 92,700 மெட்ரிக் டன் எல்பிஜி! ஆனால் இது பத்தாது! ப.சிதம்பரம் சொன்ன பாயிண்ட் -
ஈரானுக்கு அள்ளிக்கொடுக்கும் இந்தியா.. போருக்கு நடுவே மருத்துவ உதவிகள்.. நீங்களும் நன்கொடை கொடுக்கலாம் -
இந்தியா உட்பட.. உலகம் முழுவதும் x தளம் முடங்கியது! கோடிக்கணக்கான பயனர்கள் தவிப்பு! -
"முடியல.. கஷ்டமா இருக்கு.." பீகாரின் நிலைமை பார்த்து கண்ணீர் விட்டு கதறிய வெளிநாட்டு பெண் -
"இந்தியர்களே வெளியேறுங்கள்!" இலவச விமான டிக்கெட் + ரூ.2.40 லட்சம் தரோம்! டிரம்ப்பின் சர்ச்சை திட்டம் -
"சுங்க கட்டணம் 2 மடங்கு செலுத்தணும்.." அமலுக்கு வரும் புதிய பாஸ்டேக் ரூல்ஸ்.. ரொம்ப முக்கியம்! -
"இந்தியாவுக்கே ஆபத்து.." தீவிரவாத கும்பலுடன் இருந்த அமெரிக்கரை சைலண்டாக தூக்கிய என்ஐஏ.. யார் இவர்? -
"ஐ லவ் யூ" சொல்வது பாலியல் தொல்லை தான்.. போக்சோ வழக்கில் உயர்நீதிமன்றம் மிக முக்கிய கருத்து












Click it and Unblock the Notifications