சென்னை முழுக்க களமிறக்கப்பட்ட அதிகாரிகள்.. இரவு முழுக்க தெரு தெருவாக ரெய்டு.. என்ன நடக்குது?
சென்னை: சென்னையில் நடைபாதைகளை மையமாகக் கொண்டு, தீவிர தூய்மை பணிகளை இன்று முதல் மாநகராட்சி மேற்கொண்டு வருகிறது.
நடைபாதைகளை மையமாகக் கொண்டு, தீவிர தூய்மை பணிகளை இன்று முதல் மாநகராட்சி மேற்கொள்கிறது. பாதசாரிகளுக்கு தடையாக இருக்கும் குப்பை, கட்டிடக் கழிவு, நீண்ட நாட்களாக ஒரே இடத்தில் நிறுத்தி வைக்கப்பட்டுள்ள கைவிடப்பட்ட வாகனங்கள் ஆகியவற்றை அகற்றி, நடைபாதைகள் சுத்தமாக்கப்பட்டு வருகின்றன.

அதாவது இன்று இரவு முதல் சென்னையின் அனைத்து பக்கங்களிலும் இந்த மாற்றங்களை செய்ய உள்ளனர். சென்னையில் கைவிடப்பட்ட வாகனங்களை நீக்க முடிவு செய்துள்ளனர். சென்னை சாலையில் உள்ள பழைய வாகனங்களை நீக்கும் பணிகள் தீவிரமாக நடந்து வருகின்றது. சாலை நெரிசலைக் குறைக்கவும், பாதசாரிகளின் பாதுகாப்பை மேம்படுத்தவும் 15 நாட்களுக்கும் மேலாக கைவிடப்பட்ட வாகனங்களை கிரேட்டர் சென்னை மாநகராட்சி (ஜிசிசி) பறிமுதல் செய்யும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
15 நாட்களாக ஒரு வாகனம் பயன்படுத்தப்படாமல் கைவிடப்பட்டு இருந்தால்.. 15ம் நாள் அந்த வாகனம் தொடர்பாக உரிமையாளர்களுக்கு அறிவிக்கப்பட்டு, உரிமை கோரப்படாத வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டு ஏலம் விடப்படும்.
கடந்த வருடம் ஜூலை முதல், சென்னை மாநகராட்சி 1,774 வாகனங்களை பறிமுதல் செய்துள்ளது, 729 மீட்கப்பட்டது. மீதமுள்ள 1,045 ஏலத்திற்குத் தயாராகி உள்ளது. இதை ஏலம் விடும் நிகழ்வு வெள்ளத் தடுப்பு முயற்சிகளால் தாமதம் ஆனது. மெட்டல் ஸ்க்ராப் டிரேட் கார்ப்பரேஷனின் மூலம் மின்-ஏல தளம் வழியாக ஏலம் நடத்தப்படும், செய்தித்தாள்கள் மற்றும் GCC இன் சமூக ஊடகங்களில் ஏலம் தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகி எச்சரிக்கை விடுக்கப்படும்.
ஸ்பாட் பைன்: இது போக சென்னை மாநகராட்சி நிர்வாகம் GCC ஸ்பாட் ஃபைன் வசூலிப்பதற்காக IOB இலிருந்து 468 PoS சாதனங்களைப் பெற்றுள்ளது. இதில் 70 ஏற்கனவே செயல்படுத்தப்பட்டு உள்ளது. செயல்படுத்தப்பட்ட சில நாட்களில் 289 பரிவர்த்தனைகள். 5 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டதாக சென்னை மாநகராட்சி தெரிவித்துள்ளது. அபராதம் செய்யும் முறை வரும் நாட்களில் தீவிரப்படுத்தப்படும் என்றும் அறிவிக்கப்பட்டு உள்ளது.
சென்னையில் பல்வேறு விதிகளை மீறும் குடியிருப்பாளர்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும் ஸ்பாட் பைன் முறையை கொண்டு வந்து உள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) ஊழியர்கள் சாலையில் குப்பைகளை கண்மூடித்தனமாக கொட்டுவது, கழிவுகளை தரம் பிரிக்காதது, சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கால்நடைகளை சாலையில் விடுவது ஆகியவற்றிற்கு ஸ்பாட் பைன் போடப்படும்.
மாநகராட்சி நிர்வாகிகள் இதற்காக பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) கருவிகளைப் பயன்படுத்தி அபராதத் தொகையை வசூலிப்பார்கள். இந்த சாதனங்களைப் பயன்படுத்தி சொத்து வரி கூட வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக சுமார் 500 பிஓஎஸ் கருவிகள் வாங்கப்பட்டு மாநகராட்சி பணியாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது, சாலை விதிகளை மீறும் போது போக்குவரத்து காவலர்கள் விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிப்பது போல் பல்வேறு குடிமை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எப்படி அமல்படுத்தப்படும்: பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) ஊழியர்கள் சாலையில் குப்பைகளை கண்மூடித்தனமாக கொட்டுவது, கழிவுகளை தரம் பிரிக்காதது, சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கால்நடைகளை சாலையில் விடுவது ஆகியவற்றிற்கு ஸ்பாட் பைன் போடப்படும்
இதற்காக UPI, டெபிட்/கிரெடிட் கார்டுகள், டிமாண்ட் டிராஃப்ட்கள் அல்லது காசோலைகள் மூலம் பணம் செலுத்தலாம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து GCC சாதனங்களை வாடகைக்கு எடுத்துள்ளது. இதனால் பைன் நேரடியாக மாநகராட்சிக்கு செல்லும். அதிகாரிகள் பணம் சுருட்ட வாய்ப்பு இல்லை. மாநகராட்சி வருவாயும் உயரும்.
மாநகராட்சி பாதுகாப்பு மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள், மண்டல அதிகாரிகள், நிர்வாக மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் GCC இல் உள்ள வார்டு உதவி பொறியாளர்கள் இந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவார்கள். இது சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் விதிகளை மீறுபவர்களைப் பிடிக்கப் பயன்படுத்தப்படும். இதற்காக 15 பறக்கும் படை வாகனங்கள் களமிறக்கப்படும். இந்த சாதனங்கள் இப்போது களமிறக்கப்பட்டு வருகிறது.












Click it and Unblock the Notifications