கழுகு பார்வை.. சென்னையில் வீடு வீடாக ரெய்டு விடப்போகும் அதிகாரிகள்.. ரூ.2 லட்சம் வரை பைன்.. கவனம்!
சென்னை: சென்னை மாநகராட்சி எல்லைக்குட்பட்ட பகுதிகளில், மழைநீர் வடிகால்கள் மற்றும் சாலைகளில் சட்டவிரோதமாக கழிவுநீரை வெளியேற்றுபவர்களுக்கு கடுமையான அபராதம் விதிக்கப்படும் என்று சென்னை மாநகராட்சி அறிவித்துள்ளது. குடியிருப்புவாசிகள் ₹10,000 முதல் ₹2 லட்சம் வரையிலும், வணிக நிறுவனங்கள் ₹25,000 முதல் ₹5 லட்சம் வரையிலும் அபராதம் செலுத்த நேரிடும்.
கழிவுநீர் வெளியேற்றம்: அபராதம் விதிக்கும் மாநகராட்சி
மேயர் ஆர். பிரியா இந்த புதிய தீர்மானத்தை அங்கீகரித்துள்ளார். இதன் முக்கிய நோக்கம் என்னவென்றால், பருவமழையின்போது ஏற்படும் அடைப்புகள் மற்றும் வெள்ளப்பெருக்கை தடுப்பதாகும். இந்த நடவடிக்கையின் மூலம், பொதுமக்களுக்கு அறிவிப்பு வெளியிடப்பட்டு, முறையான ஆய்வுகள் நடத்தப்பட்டு, சரியான கழிவுநீர் இணைப்புகளைப் பெறத் தவறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை மாநகராட்சி, நகரின் உள்கட்டமைப்பை மேம்படுத்தவும், சுற்றுச்சூழல் சுகாதாரத்தை பாதுகாக்கவும் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. குறிப்பாக, மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குறைக்கும் வகையில், கழிவுநீர் மேலாண்மையில் கவனம் செலுத்தி வருகிறது. இந்த புதிய அபராத விதிப்பு, கழிவுநீர் சட்டவிரோதமாக வெளியேற்றப்படுவதை தடுப்பதோடு, பொதுமக்களின் ஒத்துழைப்பையும் ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
மாநகராட்சியின் இந்த அறிவிப்பு, அனைத்து தரப்பு மக்களுக்கும் தெளிவான எச்சரிக்கையாகும். இனிவரும் காலங்களில், கழிவுநீர் வெளியேற்றத்தில் கவனமாக இருக்க வேண்டும். இல்லையெனில், கடுமையான அபராதத்தை சந்திக்க நேரிடும். மேலும், இது தொடர்பான புகார்களை மாநகராட்சிக்கு தெரிவிக்கலாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சென்னை மாநகராட்சியின் இந்த நடவடிக்கை, நகரின் தூய்மையை பாதுகாப்பதற்கும், மழைக்காலங்களில் ஏற்படும் பாதிப்புகளை குறைப்பதற்கும் ஒரு முக்கியமான முன்னெடுப்பாக பார்க்கப்படுகிறது.
சென்னை மாநகராட்சி அபராதம்
சென்னையில் பல்வேறு விதிகளை மீறும் குடியிருப்பாளர்களுக்கு அந்த இடத்திலேயே அபராதம் விதிக்கப்படும் ஸ்பாட் பைன் முறையை கொண்டு வந்து உள்ளனர். பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) ஊழியர்கள் சாலையில் குப்பைகளை கண்மூடித்தனமாக கொட்டுவது, கழிவுகளை தரம் பிரிக்காதது, சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கால்நடைகளை சாலையில் விடுவது ஆகியவற்றிற்கு ஸ்பாட் பைன்.போடப்படும்
மாநகராட்சி நிர்வாகிகள் இதற்காக பாயின்ட் ஆஃப் சேல் (பிஓஎஸ்) கருவிகளைப் பயன்படுத்தி அபராதத் தொகையை வசூலிப்பார்கள். இந்த சாதனங்களைப் பயன்படுத்தி சொத்து வரி கூட வசூலிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டு உள்ளது.
இதற்காக சுமார் 500 பிஓஎஸ் கருவிகள் வாங்கப்பட்டு மாநகராட்சி பணியாளர்களுக்கு விநியோகம் செய்யப்பட்டுள்ளது, சாலை விதிகளை மீறும் போது போக்குவரத்து காவலர்கள் விதிமுறைகளை மீறியவர்களுக்கு அபராதம் விதிக்கப்படுவது போல் பல்வேறு குடிமை விதிகளை மீறுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
எப்படி அமல்படுத்தப்படும்: பெருநகர சென்னை மாநகராட்சி (ஜிசிசி) ஊழியர்கள் சாலையில் குப்பைகளை கண்மூடித்தனமாக கொட்டுவது, கழிவுகளை தரம் பிரிக்காதது, சட்டவிரோத கழிவுநீர் வெளியேற்றம் மற்றும் கால்நடைகளை சாலையில் விடுவது ஆகியவற்றிற்கு ஸ்பாட் பைன்.போடப்படும்
இதற்காக UPI, டெபிட்/கிரெடிட் கார்டுகள், டிமாண்ட் டிராஃப்ட்கள் அல்லது காசோலைகள் மூலம் பணம் செலுத்தலாம். இந்தியன் ஓவர்சீஸ் வங்கியில் இருந்து GCC சாதனங்களை வாடகைக்கு எடுத்துள்ளது. இதனால் பைன் நேரடியாக மாநகராட்சிக்கு செல்லும். அதிகாரிகள் பணம் சுருட்ட வாய்ப்பு இல்லை. மாநகராட்சி வருவாயும் உயரும்.
மாநகராட்சி பாதுகாப்பு மற்றும் துப்புரவு ஆய்வாளர்கள், மண்டல அதிகாரிகள், நிர்வாக மற்றும் உதவி செயற்பொறியாளர்கள் மற்றும் GCC இல் உள்ள வார்டு உதவி பொறியாளர்கள் இந்த இயந்திரங்களைப் பயன்படுத்துவார்கள். இது சென்னையில் உள்ள 15 மண்டலங்களில் விதிகளை மீறுபவர்களைப் பிடிக்கப் பயன்படுத்தப்படும். இதற்காக 15 பறக்கும் படை வாகனங்கள் களமிறக்கப்படும். இந்த சாதனங்கள் இப்போது களமிறக்கப்பட்டு வருகிறது.
-
வங்கி கணக்கில் வரும் ரூ.3000.. விஜய் அனுப்பும் ஜூன் மாத தொகை.. 3 திட்டங்களில் கிடைக்கும் பணம் -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
கப்பு முக்கியம் பிகிலு.. விடாபிடியாய் நிற்கும் விஜய்.. ஓசூர்-க்கு ஜாக்பாட்! -
தாய் பத்திரம் தொலைஞ்சிருச்சா? ஆன்லைனில் ஈஸியாக ஒரிஜினலை மீட்க 6 ஆவணங்கள் என்ன? சிம்பிள் ஸ்டெப்ஸ் -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
எல்பிஜி சிலிண்டர் பயன்படுத்துபவர்களுக்கு..நாளை முதல் புதிய கட்டுப்பாடுகள்! PNGக்கு மாற்றம் கட்டாயம்? -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அரசியலுக்கு முழுக்கு.. திமுக பொதுச்செயலாளர் பதவியில் இருந்து விலகும் துரைமுருகன் -
பிறந்தநாளன்று புதிய கட்சி அறிவிப்பு? பாஜக மேலிடத்திடம் டைம் கேட்ட அண்ணாமலை.. ரகசிய மூவ்! -
8-வது ஊதியக் குழு அப்டேட்! சாதாரண ஊழியருக்கு 1.5 லட்சம்.. மத்திய அரசு ஊழியர்களுக்கு குஷி -
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
பனையூர் பாபுவுக்கு ஸ்கெட்ச்! அடுத்து ஆளூர் ஷாநவாஸை நோக்கி குரைக்கிறார்கள்! சிந்தனைச் செல்வன்












Click it and Unblock the Notifications