பெரும்பாக்கம் ஏரியில் பிரபல கட்டுமான நிறுவனத்தின் சாலையா.. பசுமைத் தீர்ப்பாயம் அதிரடி உத்தரவு
சென்னை: சென்னை புறநகரில் உள்ள பெரும்பாக்கம் ஏரி ஒரு காலத்தில் 450 ஏக்கராக இருந்த நிலையில், 2015-ல் ஏரியின் மொத்த பரப்பு 258 ஏக்கராக சுருங்கியது. பெரும்பாக்கம் சதுப்புநிலத்தில் தனியார் கட்டுமான நிறுவனம் சாலை அமைப்பது தொடர்பாக அனைத்து அரசு ஆவணங்களையும் தாக்கல் செய்ய வேண்டும் என செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு தென்மண்டல தேசிய பசுமைத் தீர்ப்பாயம் உத்தரவிட்டுள்ளது.
சென்னை புறநகரில் உள்ள பெரும்பாக்கம் ஏரியை சுற்றுச்சூழல் பூங்காவாக மாற்றும் பணிகள் நடந்து வந்தது. ஆனால் ஆக்கிரமிப்பாலும், குப்பைகள் கொட்டப்படுவதாலும் ஏரி வீணாகி வருகிறது. பெரும்பாக்கம் ஏரியின் பரப்பு 1960-ம் ஆண்டு 450 ஏக்கராக இருந்த நிலையில், வேங்கைவாசல், பெரும்பாக்கம், சித்தாலப்பாக்கம் என 3 பகுதிகளிலும் ஆக்கிரமிப்புகள் ஏற்பட்டது. இதன் காரணமாக, 2015-ல் பெரும்பாக்கம் ஏரியின் மொத்த பரப்பு 258 ஏக்கராக சுருங்கிவிட்டது.

கடந்த 2020-ம் ஆண்டு தென்மண்டல பசுமை தீர்ப்பாயம், இந்த ஆக்கிரமிப்புகளை அகற்றி ஏரியை பழைய பரப்பளவுக்கு கொண்டு வருவதற்கு குழுவை அமைத்து நடவடிக்கை எடுக்க உத்தரவிட்டிருந்தது. இந்நிலையில் பெரும்பாக்கம் சதுப்புநில பகுதியில் தனியார் கட்டுமான நிறுவனம் சாலை அமைத்து வருவதாக நாளிதழ் ஒன்றில் வெளியான செய்தியின் அடிப்படையில், தென்மண்டல தேசிய பசுமை தீர்ப்பாயம், தாமாக முன் வந்து இந்த வழக்கை விசாரணைக்கு எடுத்தது.
இந்த வழக்கு, தீர்ப்பாய நீதித்துறை உறுப்பினர் நீதிபதி புஷ்பா சத்ய நாராயணா, நிபுணத்துவ உறுப்பினர் சத்யகோபால் ஆகியோர் அடங்கிய அமர்வில் நேற்று விசாரணை நடந்தது. அப்போது, பெரும்பாக்கம் சதுப்பு நில பகுதிக்குள் சாலை அமைக்கப்பட்டதாக சொல்லப்படும் இடம் 'காசா கிராண்ட்' நிறுவனத்திற்கு சொந்தமான பட்டா நிலம் என்றும், இந்த நிலத்தில் குடியிருப்பு கட்டுவதற்கு முறையே அனுமதி பெறப்பட்டதாகவும் காசா கிராண்ட் நிறுவனத்தின் சார்பில் வாதிடப்பட்டது.

தொடர்ந்து பள்ளிக்கரணை சதுப்பு நிலம் ராம்சார் குறியீடு பெறப்பட்ட சதுப்பு நிலப் பகுதி என்றும் அதனை ஒட்டியுள்ள இந்த நிலத்திற்கு பட்டா கொடுத்திருக்க வாய்ப்பில்லை என்றும், புஞ்சை நிலமாக நீர்முழ்கி பட்டா மட்டுமே கொடுத்திருக்க வாய்ப்புள்ளது என்றும் தமிழக அரசு தரப்பில் வாதிடப்பட்டது.
பின்னர் இருதரப்பு வாதங்களையும் கேட்ட தென்மண்டல தீர்ப்பாயம், இந்த நிலத்திற்கு நீர்முழ்கி பட்டா கொடுக்கப்பட்டது என்றால், அந்த பகுதியில் கட்டுமானம் மேற்கொள்வது சட்டப்படி தவறு. இந்த நிலம் என்ன வகையான நிலம் என்பது குறித்த அனைத்து அரசு ஆவணங்களையும் தாக்கல் செய்ய செங்கல்பட்டு மாவட்ட நிர்வாகத்துக்கு உத்தரவிட்டு, விசாரணையை செப்டம்பர் 17ஆம் தேதிக்கு தள்ளி வைத்திருக்கிறது.
-
டாஸ்மாக்கில் ரூ.3,600 கோடி ஊழல்.. லிஸ்ட் எடுத்த தவெக.. அமைச்சர் விக்னேஷ் திடுக் தகவல் -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தலை எதிர்கொள்ள திமுகவின் இரட்டை வியூகம்.. இள ரத்தத்திற்கு முக்கியத்துவம்! -
96,000 வாக்குகள் வித்தியாசத்தில்.. தவெக வேட்பாளரை ஜெயிக்க வைத்த தொகுதிக்கு இந்த நிலைமையா? -
இந்தியாவை தாக்கும் பெரிய ஆபத்து.. விஷயம் கேட்டு எலான் மஸ்க் கூட அதிர்ந்து போனார்! பேரழிவு கன்பார்ம்? -
அதிகாலையே கணக்கில் வரவு வைக்கப்பட்ட ரூ.3000.. வந்தது மே மாதம் பேமெண்ட்.. அரசின் அசத்தல் மூவ்! -
சொத்துகளை மறைக்கும் சென்னை மேயர் பிரியா.. துணை மேயர் உள்பட 75% கவுன்சிலர்கள் 4 ஆண்டுகளாக ‘டிமிக்கி' -
அதிமுக + திமுகவிற்கு ஷாக்.. 4 மாஜி அமைச்சர்கள் - 8 எம்எல்ஏக்கள் உள்பட 60 பேர் தவெகவில் ஐக்கியம் -
அடித்து ஆடும் விஜய்.. வருகிறது ராமநாதபுரம் புதிய விமான நிலையம்.. பொருளாதார புரட்சிக்கு அடித்தளம்! -
ரஷ்யா வச்ச ஆப்பு.. தள்ளுபடிலாம் தர முடியாது.. பிரீமியம் கட்டணம்! கச்சா எண்ணெய்க்கு 425% கூடுதல் தொகை -
ரூ.15 லட்சம் கோடி பஸ்பம் ஆகும்? சரிகிறது இந்தியாவின் தங்க’ சாம்ராஜ்யம்.. நாட்டையே உலுக்கும் சம்பவம் -
"அண்ணாமலை வந்ததால் பாஜக ஒன்னும் பலமாகவில்லை".. ஒரு இதழை கூட அசைக்க முடியாது.. தமிழிசை ‘அட்டாக்' -
நாங்க தோத்துட்டோம்.. ஆனா சாகலை! விஜய்க்கு ஏதாவது ஆச்சுனா கம்பெனி பொறுப்பில்லை! மாஜி கொடுத்த வார்னிங்












Click it and Unblock the Notifications