டிஎன்பிஎஸ்சி குரூப் 1 முதல்நிலை தேர்வு.. 3.5 லட்சம் பேர் பங்கேற்பு..என்னென்ன கட்டுப்பாடுகள்

Subscribe to Oneindia Tamil

சென்னை: டிஎன்பிஎஸ்சி நடத்தும் குரூப் 1 முதல்நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது. 92 இடங்களுக்கு மூன்றரை லட்சம் பேர் எழுதுகின்றனர். தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது.

தமிழ்நாடு அரசுப்பணியாளர் தேர்வாணையம் ஆண்டுதோறும் குரூப் 1, குரூப் 2, 2ஏ, குரூப் 4 உள்ளிட்ட பதவிகளுக்கான தேர்வுகளை நடத்துகிறது.

இந்த நிலையில் டிஎன்பிஎஸ்சி நடத்தும் உயர் பதவி தேர்வுகளான குரூப் 1 பதவியில் காலியாக உள்ள துணை ஆட்சியர் 18 இடங்கள், துணை காவல் கண்காணிப்பாளர்(டிஎஸ்பி)-26, வணிகவரித்துறை உதவி ஆணையர்-25, கூட்டுறவு துறை துணை பதிவாளர்- 13, ஊரக வளர்ச்சித்துறை உதவி இயக்குனர்- 7, மாவட்ட தீயணைப்பு துறை அதிகாரி 3 பதவிகள் என 92 இடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பை கடந்த ஜூலை 21ம் தேதி வெளியிட்டது.

 குரூப் 1 முதல்நிலை தேர்வு

குரூப் 1 முதல்நிலை தேர்வு

அறிவிப்பு வெளியானது முதல் தேர்வுக்கு டிஎன்பிஎஸ்சியின் www.tnpsc.gov.in என்ற இணையதளம் வாயிலாக விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து ஏராளமான பட்டதாரிகள் போட்டி போட்டு கொண்டு தேர்வுக்கு விண்ணப்பித்தனர். மொத்தத்தில் குரூப் 1 முதல்நிலைத் தேர்வுக்கு 3 லட்சத்து 16 ஆயிரத்து 678 பேர் விண்ணப்பித்தனர்.

38 மையங்கள்

38 மையங்கள்

முதல்நிலை தேர்வு அக்டோபர் 30ம் தேதி நடைபெறுவதாக இருந்தது. ஆனால், சில காரணங்களுக்காக தேர்வு தள்ளிவைக்கப்பட்டது. இந்த நிலையில் தள்ளிவைக்கப்பட்ட முதல்நிலை தேர்வு இன்று நடைபெறுகிறது. இதற்காக மாநிலம் முழுவதும் 38 மாவட்டங்களில் தேர்வு மையங்கள் அமைக்கப்பட்டுள்ளது.

தேர்வு மையங்கள்

தேர்வு மையங்கள்

தேர்வு மையங்களுக்கு செல்போன், கால்குலேட்டர், வாட்ச் உள்ளிட்ட மின்னணு சாதனங்கள் கொண்டு செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளது. மோதிரம் அணிந்து செல்லவும் தடை விதிக்கப்பட்டுள்ளது. தேர்வு நடைபெறும் அனைத்து இடங்களிலும் தேர்வு எழுதுபவர்கள் வசதிக்காக சிறப்பு பேருந்து வசதிகளுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

200 வினாக்கள்

200 வினாக்கள்

vஇன்று காலையில் 9:30 மணி அளவில் குரூப் 1 தேர்வு தொடங்கியது. பிற்பகல் 12:30 மணி வரையிலும் இந்த தேர்வு நடைபெறுகிறது. பொதுப்பாடத்தின் பிரிவில் 175 வினாக்களும், திறனறிவு பிரிவில் 25 வினாக்களும் 200 வினாக்களுக்கு தேர்வு நடத்தப்படுகிறது. இந்தத் தேர்வினை எதிர்கொள்ளும் தேர்வர்கள் பின்பற்ற வேண்டிய நடைமுறைகள் குறித்து அது தொடர்பான விவரங்களை ஹால் டிக்கெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+