ஜியு போப், கால்டுவெல் படிக்காதவர்கள்! திராவிட மொழிகள் பற்றிய நூல் போலியானது.. ஆளுநர் ரவி பரபர பேச்சு
சென்னை: திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல் போலியானது என்றும், ஜி.யு. போப்பும் கால்டுவெல்லும் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்கள் என்று தமிழக ஆளுநர் ஆர்.என் ரவி பரபரப்பாக பேசியுள்ளார்.
தமிழக அரசுக்கும் ஆளுநர் ஆர்.என். ரவிக்கும் பல்வேறு விவகாரங்களில் கருத்து மோதல் நிலவுகிறது. தமிழக அரசு சட்டமன்றத்தில் நிறைவேற்றி அனுப்பும் மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் கிடப்பில் போடுவது.. சட்டமன்றத்தில் அரசின் உரையை படிக்க மறுப்பது என தொடர்ந்து அரசுடன் மோதல் போக்கில் ஈடுபட்டு வருகிறார்.

அதேபோல், தமிழகத்தில் ஆளும் திமுகவையும் அதன் கொள்கைகளையும் நேரடியாக கடுமையாக சாடி வருகிறார். திராவிடம் என்பது காலாவதியானது என்ற விமர்சனங்கள் முதல் திமுக பற்றியும் அவ்வப்போது மிக காட்டமான கருத்துக்களை ஆளுநர் ஆர்.என். ரவி முன்வைப்பது வாடிக்கையாக உள்ளது. ஆளுநரின் இந்தக் கருத்துகளுக்கு ஆளும் திமுகவும் பதிலடி கொடுத்து வருகிறது.
கால்டுவெல், ஜியு போப் படிக்காதவர்கள்: இதனால், ஆளுநர் ரவி தமிழகத்தில் பொறுப்பேற்றது முதலே தொடர்ந்து உரசல்கள் நீடித்துக் கொண்டு இருக்கிறது. இந்த நிலையில், சென்னை கிண்டியில் உள்ள ஆளுநர் மாளிகையில், அய்யா வைகுண்டரின் 192 வது அவதார தினவிழா நிகழ்ச்சி நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் 'மகாவிஷ்ணுவின் அவதாரம் ஸ்ரீ வைகுண்ட சுவாமி அருளிய சனாதான வரலாறு' என்ற புத்தகத்தை வெளியிட்டு ஆளுநர் ரவி பேசினார்.
அப்போது பேசிய ஆளுநர் ரவி, திராவிட மொழிகள் குறித்து கால்டுவெல் எழுதிய நூல்கள் போலியானது என்றும் ஜி.யு. போப்பும் கால்டுவெல்லும் பள்ளிப்படிப்பை கூட முடிக்காதவர்கள் என்றும் பேசினார். இது தொடர்பாக ஆளுநர் ஆர் என் ரவி பேசியதாவது:- ஜியு போப், கால்டுவெல் போன்றவர்கள் பள்ளி படிப்பை கூட முடிக்காதவர்கள். மக்களை கிறிஸ்தவ மதத்திற்கு மாற்றுவதற்காகவே ஜியு போப், கால்டுவெல் இந்தியாவிற்கு வந்தனர்.
இயேசு, பைபிளை பிடிக்கும்: இயேசுவையும் பைபிளையும் எனக்கு பிடிக்கும். சனாதன தர்மத்தை காக்கவே 192 ஆண்டுகளுக்கு முன்பு அய்யா வைகுண்டர் தோன்றினார். சனாதன தர்மத்தின் கோட்பாட்டை கிழக்கிந்திய கம்பெனியினர் அழித்தனர். இந்தியாவை ஆட்சி செய்வதற்கு மதமாற்றம் என்ற கொள்கையை பிரிட்டிஷ் அரசு மேற்கொண்டது. சனாதன கோட்பாட்டின் அடிப்படையில் மக்கள் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள்.
சனாதனத்தை காக்கவே அய்யா தோன்றினார்: இந்த ஒற்றுமை இந்தியாவை அடிமைப்படுத்த சவாலாக இருந்தது. 1839 ஆம் ஆண்டு 90 ஆயிரம் மெட்ராஸ் மாகாண மக்கள் மதமாற்றத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தனர். சனாதனத்தை காக்கவே 192 ஆண்டுகளுக்கு முன்பாக அய்யா வைகுண்டர் தோன்றினார். அய்யா வைகுண்டர் தோன்றிய சமூக காலகட்டம் சனாதன தர்மத்திற்கு பாதிப்பு ஏற்பட்ட காலகட்டம். சனாதன தர்மத்தை காக்கவே அய்யா வைகுண்டர் தோன்றினார். இவ்வாறு ஆளுநர் ரவி பேசினார்.
-
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
திமுகவிற்கு விஜய் சொன்ன 'நோ'.. ஸ்விட்ச் ஆப் ஆன போன்.. மேஜைக்கு வந்த உளவுத்துறை ரிப்போர்ட்! -
SP Velumani: வேலுமணிக்கு வில்லனாக மாறிய முனுசாமி.. பதவிக்கு விழுந்த வேட்டு! -
கொ*யில் முடிந்த பார் டான்ஸ்.. கொதித்துப் போன கோயம்பேடு! யான்சிக்கு இப்படியா சாவு வரனும்! ஷாக்! -
Annamalai New Party LIVE:தனிக் கட்சி தொடங்குகிறார் அண்ணாமலை? பிறந்தநாளன்று வெளியாகும் அப்டேட்? -
விஜய்க்கு பெரிய தலைவலி.. ஒரே நாளில் வீட்டுக்கு போன 5000 ஊழியர்கள் ஓய்வு! ஆட்டம் காணும் அரசு துறைகள் -
நான் பார்த்துகிறேன் நண்பா.. உறுதியாக சொன்ன விஜய்.. அஜித் தாய் மறைந்த இரவு.. நடந்தது என்ன? -
பிளாக் அண்ட் ஒயிட் கோட் சூட் அணிவது இதற்காகத் தான்.. ரகசியத்தை போட்டு உடைத்த விஜய்! -
காலியான ராஜ்யசபா எம்பி பதவி! இன்று வேட்புமனு தாக்கல் தொடக்கம்! தவெகவின் முதல் எம்பி யார்?












Click it and Unblock the Notifications