நிஷா கண்ணை பிடுங்கி.. ஃபேனில் தொங்கவிட்டு, மொட்டை அடித்து, ஆட்டு கத்தியால்.. ஐயோ சென்னை கூடுவாஞ்சேரி
சென்னை: கூடுவாஞ்சேரி நிஷா கொலை, கள்ளக்காதல் விவகாரத்தால் நடந்துள்ளது.. ஹயத்துன்நிஷாவிடம் பணம் மற்றும் நகை பெற்றிருந்த பகபதிமாஜியுடன் சேர்ந்து, சமாதானம் பேசுவது போல் அவரது வீட்டில் தங்கி திட்டமிட்டு கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர். ஆனால் அந்த கொலையை எப்படி செய்தோம் என்று தம்பதி தெரிவித்துள்ள வாக்குமூலம், பேரதிர்ச்சியை காவல்துறை வட்டாரத்தில் ஏற்பட்டுள்ளது.
கூடுவாஞ்சேரியை சேர்ந்த ஹயத்துன்நிஷா (38) மாயமான நிலையில், கடந்த 5-ம் தேதி சென்னை சென்ட்ரலில் இருந்து டெல்லி சென்ற தமிழ்நாடு எக்ஸ்பிரஸ் ரயிலில், ஆக்ரா அருகே தலை மற்றும் கைகள் இல்லாமல் துண்டு துண்டாக வெட்டப்பட்ட அவரது உடல் பாகங்கள் சூட்கேஸில் கண்டெடுக்கப்பட்டன.

சென்னை கூடுவாஞ்சேரி நிஷா
இதுகுறித்து விசாரணை நடத்திய போலீசார், கூடுவாஞ்சேரி மசூதி அருகே அவர் தங்கியிருந்த வீட்டில் ரத்தக்கறை படிந்த டபரா மற்றும் மைதா மாவு இருந்ததையும் கண்டுபிடித்தனர். இதனிடையே, ஹயத்துன்நிஷா மாயமானதாக அவரது மகன் ஏற்கனவே போலீசில் புகார் அளித்திருந்தது விசாரணையில் தெரியவந்தது.
இந்த கொலை தொடர்பாக மணிப்பூரில் பதுங்கியிருந்த அசாம் மாநிலத்தை சேர்ந்த மானிக்உதின்லஸ்கர் (22) மற்றும் அவரது காதலி பகபதிமாஜி ஆகியோரை தனிப்படை போலீசார் கைது செய்தனர்.
விசாரணையில், ஹயத்துன்நிஷாவுடன் மானிக்உதின்லஸ்கருக்கு நெருக்கம் ஏற்பட்டு கள்ளக்காதலாக மாறியதும், அவர் கர்ப்பமான நிலையில் தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு வலியுறுத்தியதும் தெரியவந்தது. இதற்கு அவர் மறுத்ததால், ஏற்கனவே ஹயத்துன்நிஷாவிடம் பணம் மற்றும் நகை பெற்றிருந்த பகபதிமாஜியுடன் சேர்ந்து, சமாதானம் பேசுவது போல் அவரது வீட்டில் தங்கி திட்டமிட்டு கொலை செய்ததாக போலீசார் தெரிவித்துள்ளனர்.
2 வாரம் தங்கி பிளான்
இந்நிலையில், 2 வாரம் தங்குவதுபோல் தங்கிவிட்டு இந்த கொலையை அரங்கேற்றியது எப்படி என்பது குறித்து பல்வேறு அதிர்ச்சி தகவலை இந்த தம்பதியினர் போலீசாரிடம் தெரிவித்துள்ளனர்.
அதில், நிஷாவை கொலை செய்ய வேண்டும் என்பதற்காகவே, பல்லாவரம் மார்க்கெட்டிலிருந்து ஆடு வெட்டும் கத்திகளை வாங்கி வந்திருக்கிறார்கள்.. பிறகு இரவில் தூங்கும்போது ஹயத்துன்நிஷாவின் முகத்தில் மயக்க மருந்து தெளித்து, அதற்கு பிறகு அவரது கழுத்து அறுத்து கொன்றுள்ளனர்.. அந்த ரத்தத்தை பிரியாணி செய்யக்கூடிய டபராவில் பிடித்துள்ளனர்.
ஃபேனில் தலைகீழாக கட்டி தொங்கவிட்டு..
பிறகு ஃபேனில் கட்டி தலைகீழாக கட்டி தொங்கவிட்டு, ஆட்டின் தோலை உரிப்பதுபோல் உரித்து அனைத்து உடல் பாகங்களையும் துண்டு துண்டாக வெட்டியிருக்கிறார்கள்.. அதற்கு பிறகு, தலையை மொட்டை அடித்தும், தோலை உரித்தும், 2 கண்களையும் பிடுங்கி அதனை 2 கவரில் போட்டு ராலி சூட்கேசில் எடுத்துக்கொண்டு சென்ட்ரலுக்கு மின்சார ரயிலில் பயணம் செய்திருக்கிறார்கள்.
பிறகு ஆக்ரா ரயிலில் ஏற்றி அனுப்பிவிட்டு சென்னையில் உள்ள சொந்தக்காரர் ஒருவர் வீட்டில் தங்கியிருந்துள்ளனர்.. நிஷாவை காணவில்லை என்று போலீசுக்கு புகார் செல்லவும்தான், மணிப்பூருக்கு தப்பி சென்று ஒரு வீட்டில் இவர்கள் பதுங்கியிருந்துள்ளனர்.
சென்னையில் புதிய ட்விஸ்ட்
இந்த வாக்குமூலத்தை கேட்டு போலீசார் ஆடிப்போயிருக்கிறார்களாம்.. கைது செய்யப்பட்ட தம்பதியை நிஷாவின் வீட்டுக்கும், கூடுவாஞ்சேரி, சென்ட்ரல் ரயில்வே ஸ்டேஷனுக்கு அழைத்து சென்றும், கொலை செய்தது எப்படி என்று நடித்துக்காட்ட போலீசார் முடிவு செய்திருக்கிறார்களாம்.
அதுமட்டுமல்ல, இந்த கொலையில் புதிய ட்விஸ்ட் ஒன்று வெளியாகி உள்ளது.. இந்த நிஷாவை கொன்றது இந்த தம்பதி மட்டுமல்லையாம். இவர்களுடன் சேர்ந்து இன்னும் 4 பேர் சம்பந்தப்பட்டதாக புது தகவல் வெளியாகி உள்ளது.. பிடிபட்ட கணவன், மனைவி அரியானாவை சேர்ந்தவர்கள் என்றாலும், கொலையை செய்துவிட்டு காரில் தப்பியதாக கூறப்படும் 4 பேர் யார் என்று தெரியவில்லை.. மொத்தத்தில் இந்த கூடுவாஞ்சேரி நிஷா கொலை சம்பவம் திகிலை கிளப்பி கொண்டிருக்கிறது.


Click it and Unblock the Notifications
