கிண்டி சிறுவர் பூங்கா 6 மாதங்களுக்கு மூடல்..சர்வதேச தரத்தில் புதுப்பொலிவு பெறப்போகுதாம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: கிண்டி சிறுவர் பூங்காவை சர்வதேச தரத்திலான பொழுதுபோக்கு பூங்காவாக மேம்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்போது இந்த பூங்காவை 6 மாதங்களுக்கு மூட அரசு முடிவு செய்துள்ளது. சிறுவர்கள் விளையாடும் வகையிலான அம்யூஸ்மென்ட் பார்க்குகள், வாட்டர் கேம்ஸ் உள்ளிட்டவை அமைக்கப்பட உள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது.

தமிழகம் முழுவதும் நூற்றுக்கணக்கான சுற்றுலா தளங்கள் இருந்தாலும் சென்னையில் உள்ள கிண்டி சிறுவர் பூங்கா மிகவும் பிரபலமானது. 1600-ம் காலக்கட்டத்தில் மிகப்பெரிய வனமாக இருந்த கிண்டி காட்டின் ஒரு பகுதி ஆங்கிலேயரால் அழகிய பூங்காவாக உருவாக்கப்பட்டது. அங்குள்ள வன விலங்குகளை பிரிட்டிஷார் வேட்டையாடுவதற்கான கேம் ரிசர்வ் பார்க் (Game Reserve Park) ஆக இது மாறியது.

Guindy Childrens Park to be closed for 6 months State Forest Department set to undertake upgradation works

நாடு சுதந்திரமடைந்த பின்னர் 1958ஆம் ஆண்டு அன்றைய பிரதமர் ஜவஹர்லால் நேருவால் தேசிய சிறுவர் பூங்காவாக இது மாற்றப்பட்டது. சென்னைவாசிகளுக்கு பிடித்தமான சுற்றுலா தலமாக கிண்டி சிறுவர் பூங்கா விளங்குகிறது. இந்தபூங்காவுக்குள் மான், நரி, கழுதை புலி, முதலை, பாம்புகள், காட்டு முயல்கள், அணில்கள், எலிகள், வவ்வாள்கள் போன்ற உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. விடுமுறை நாட்களில் குழந்தைகள் முதல் அக்கம் பக்கத்தில் உள்ள கல்லூரி மாணவர்கள் வரை கிண்டி பூங்காவிற்குள் வருகை தருவார்கள்.

வர்தா புயலுக்குப் பிறகு இந்த பூங்கா சேதமடைந்தது. அதன் பிறகு பொலிவை இழந்து விட்டது என்றே சொல்ல வேண்டும். இந்நிலையில், இந்த பூங்காவை சர்வதேச தரத்திலான பொழுதுபோக்கு பூங்காவாக மேம்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்போது இந்த பூங்காவை 6 மாதங்களுக்கு மூட அரசு முடிவு செய்துள்ளது.

சிறுவர்கள் விளையாடும் வகையிலான அம்யூஸ்மென்ட் பார்க்குகள், வாட்டர் கேம்ஸ் உள்ளிட்டவை கொண்டு வரப்படும் என்றும், அதிக அளவிலான விலங்குகள், பறவைகளும் அங்கு கொண்டு வரப்படும் எனவும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அதுமட்டுமல்லாமல், பூங்காவுக்குள்ளேயே உணவகங்களும் அமைக்கப்படும் என்ற தகவல் வெளியாகியுள்ளது.

கிண்டி சிறுவர் பூங்காவில் மான், நரி, கழுதை புலி, முதலை, பாம்புகள், காட்டு முயல்கள், அணில்கள், எலிகள், வவ்வால்கள் போன்ற உயிரினங்கள் பராமரிக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில், இந்த பூங்காவை சர்வதேச தரத்திலான பொழுதுபோக்கு பூங்காவாக மேம்படுத்த தமிழக அரசு திட்டமிட்டுள்ளது. இதற்காக தற்போது இந்த பூங்காவை 6 மாதங்களுக்கு மூட அரசு முடிவு செய்துள்ளது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+