50 ஆண்டுகளில் இந்தியாவிலேயே குஜராத்தில்தான் அதிகமான 'கள்ளச்சாராய சாவுகள்'.. லிஸ்ட்டில் தமிழ்நாடும்!
சென்னை: இந்தியாவிலேயே கள்ளச்சாராய சாவுகள் அதிகமாக நிகழ்வது , "மது விற்பனைக்கு தடை விதிக்கப்பட்ட" குஜராத் மாநிலத்தில்தான் என்கின்றன புள்ளி விவரங்கள். கடந்த 50 ஆண்டுகளில் குஜராத் மாநிலத்தில்தான் மிக அதிகமாக கள்ளச்சாராய சாவுகள் நிகழ்ந்துள்ளன. இந்தப் பட்டியலிலும் தமிழ்நாடும் இடம்பெற்றிருப்பது துயரம்தான்.
கள்ளக்குறிச்சி கள்ளச்சாவுகள் நெஞ்சை பதற வைத்துக் கொண்டிருக்கின்றன. கள்ளக்குறிச்சி சாவுகளுக்குப் பின்னர் தமிழ்நாடு அரசு போர்க்கால அடிப்படையில் சஸ்பெண்ட் தொடங்கி விசாரணை ஆணையம் வரை வேகம் காட்டுகிறது. இதை ஏன் முன்னரே அரசு செய்திருக்க முடியாதா? என்கிற கேள்விதான் எல்லோராலும் எழுப்பப்படுகிறது.

இந்தியாவின் பல மாநிலங்களிலும் மதுவிற்பனைக்கு அனுமதி இருந்தாலும் ஒடுக்கப்பட்ட சாமானிய மக்கள் குறைந்த விலைக்கு கிடைக்கும் கள்ளச்சாராயத்தை நம்பி குடித்து கொத்து கொத்தாக செத்து மடிகிற துயரம் காலந்தோறும் நிகழ்கிறது.
50 ஆண்டுகளில் இந்தியாவின் கள்ளச்சாராய சாவு சம்பவங்கள்:
1976- குஜராத்தில் கள்ளச்சாராயம் குடித்து 100 பேர் பலி
1984- ஹரியானாவில் 44 பேர் பலி
1981- கர்நாடகாவில் 308 பேர் உயிரிழப்பு
1982- கேரளாவில் 78 பேர் மரணம்
1986- குஜராத்தில் மேலும் 108 பேர் பலி
1987- குஜராத்தில் மீண்டும் 200 பேர் உயிரிழப்பு
1992- ஒடிஷாவில் 200க்கும் அதிகமானோர் மரணம்
2001- மகாராஷ்டிராவில் 27 பேர் பலி
2001 - தமிழ்நாட்டின் பண்ருட்டியில் 53 பேர் பலி
2004- மகாராஷ்டிராவின் மும்பையில் 87 பேர் மரணம்
2006- ஒடிஷாவின் கஞ்சம் மாவட்டத்தில் 22 பேர் பலி
2008- கர்நாடகா, தமிழ்நாட்டில் 148 பேர் உயிரிழப்பு
2009- மேற்கு வங்கம் கொல்கத்தாவில் 27 பேர் இறந்தனர்
2009- உ.பி.யில் 29 பேர் பலி
2009- குஜராத்தில் 136 பேர் மரணம்
2010- உ.பி.யின் 2 மாவட்டங்களில் 35 பேர் பலி
2010- கேரளாவிம் மலப்புரத்தில் 23 பேர் உயிரிழப்பு
2011- ஆந்திராவில் 17 பேர் மரணம்
2011- மேற்கு வங்கத்தில் 170 பேர் பலி
2012- ஆந்திராவில் மீண்டும் 17 பேர் உயிரிழப்பு
2012- ஒடிஷாவில் மேலும் 31 பேர் மரணம்
2012- பஞ்சாப்பில் 18 பேர் உயிரிழப்பு
2013- உ.பி.யில் 40 பேர் மரணம்
2015- மகாராஷ்டிராவின் மும்பையில் 90 பேர் இறப்பு
2019- உ.பி, உத்தரகாண்ட் மாநிலங்களில் 100க்கும் மேற்பட்டோர் மரணம்
2019- அஸ்ஸாமில் 156 பேர் பலி
2023- தமிழ்நாட்டின் மரக்காணம், செங்கல்பட்டில் 30க்கும் மேற்பட்டோர் பலி
2024- தமிழ்நாட்டின் கள்ளக்குறிச்சியில் தற்போது வரை 37 பேர் பலி
-
தமிழக சட்டசபை செயலாளர் சீனிவாசன் திடீர் ராஜினாமா.. பதவியை எட்டிப்பிடித்த சாந்தி.. பின்னணி என்ன? -
அந்த ‘4’ ஓல்டு ஸ்டூடண்ட்ஸ்.. என்னை ஒதுக்கி ஓரம் கட்டிட்டாங்க! நபினிடம் கொட்டித் தீர்த்த அண்ணாமலை! -
என்னதான் சண்டை போட்டாலும்.. மத்திய அரசுடன் முதல்வர் விஜய் போட்ட டீல்! சுளையா 2,177 கோடி கிடைக்கும்! -
"RSS பிடியில் தமிழ்நாடு.." இந்து முன்னணி தலைவரிடம் வாழ்த்து பெற்ற அமைச்சர்கள்.. திமுக கடும் தாக்கு -
23 நாளில்.. 20 பாலியல் வன்கொடுமைகள்.. சட்டம் ஒழுங்கு மோசம்! விஜய் கோட்டை விட்ட இடம் இதுதான்! -
புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கடைசி வரை மறுப்பே சொல்லல பாருங்க.. அப்போ கன்பார்ம் தானா? -
ஆளுநரின் செயலாளர் உள்பட 25 ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம்.. தமிழக அரசு உத்தரவு -
"வரும் சட்டமன்ற கூட்ட தொடரிலேயே ஆணவ கொலைக்கு எதிரான தனி சட்டம்!" அமைச்சர் வன்னியரசு முக்கிய தகவல் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications