Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி 2023: கங்கையில் குடியேறும் குரு பகவான்..குரு புஷ்கரம் கொண்டாடப்படும் புராண கதை

Subscribe to Oneindia Tamil

சென்னை: தேவப்ராயாக்,ரிஷிகேஷ், ஹரித்துவார்,வாரணாசி ஆகிய கங்கை நதிகரைகள் மிக விசேஷமானவைகள். குரு பெயர்ச்சி மேஷ ராசியில் நிகழ்வதால் கங்கை நதிக்கரைகளில் புஷ்கர விழா சிறப்பாக கொண்டாடப்பட உள்ளது. குருதிசை, குருபுத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள், கங்கா புஷ்கர விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் வந்து நீராடினால் வாழ்க்கை சிறப்படையும்.

திருக்கணித பஞ்சாங்கப்படி வரும் 21ஆம் தேதியன்று அன்று குரு பகவான் தன் சொந்த வீடான மீனத்திலிருந்து நட்பு வீடான மேஷ வீட்டிற்கு தனது 12 வருட மேஷ-மீன சுற்றுப்பயணத்தை முடித்துக்கொண்டு,மீண்டுமொரு புதிய பயணத்தை, அத்தியாயத்தை தொடங்குகிறார். வாக்கிய பஞ்சாங்கப்படி குருபெயர்ச்சி 22ஆம் தேதி நிகழ உள்ளது.

குருபகவானின் மேஷ ராசி பிரவேசம் கங்கா புஷ்கரமாக கொண்டாடப்படும். அதாவது அவர் மீண்டும் அடுத்த ராசியான ரிஷபத்திற்கு பயணப்படும் வரை அவர் கங்கை நதியில் குடியிருப்பார். ஆகவே மேஷ ராசியில் குரு பயணம் செய்யும் போது கங்கை நதிக்கரையில் நாம் அனைவரும் புனித நீராடுவது மிகச்சிறப்பான ஒன்றாகும்.

Guru Peyarchi 2023 Puruna Story about Ganga Pushkaram

கங்கையில் புனித நீராடல்: புஷ்கரம்' என்பது 12 ஆண்டுகளுக்கு ஒருமுறை புனித நதிகளில் நடைபெறும் கும்பமேளா. 'மகாபுஷ்கரம்' என்பது 144 பிரம்மாவின் கையில் உள்ள தீர்த்தம் புஷ்கரம் எனப்படும். குருபகவான் கடும் தவமிருந்து பிரம்மாவிடமிருந்து இதைப் பெற்றார். நம் நாட்டில் உள்ள முக்கியமான 12 நதிகள் 12 ராசிகளுக்குரியவைகளாகச் சொல்லப்பட்டுள்ளன. மேஷம் - கங்கை,ரிஷபம் - நர்மதை, மிதுனம் - சரஸ்வதி,கடகம் - யமுனை,சிம்மம் - கோதாவரி,கன்னி - கிருஷ்ணா,துலாம் - காவிரி,விருச்சிகம் - தாமிரபரணி,தனுசு - சிந்து, மகரம் - துங்கபத்ரா,கும்பம் - பிரம்மநதி, மீனம் - பிரணீதா

குரு பகவானின் பயணம்: குருபகவான் எந்த ராசியில் சஞ்சரிக்கிறாரோ, அந்த ராசிக்குரிய நதியில் பிரம்ம புஷ்கரம் தங்கியிருக்கும்.அப்போது, பிரம்மா, விஷ்ணு, சிவன் தமது தேவியருடன் அந்த நதியில் தங்கியிருப்பர். இந்திரன் முதலான முப்பத்து முக்கோடி தேவர்கள் மற்றும் நதி தேவதைகளும் அந்த நதியில் தங்கியிருப்பர் என்பது ஐதீகம். குருதிசை, குருபுத்தி நடப்பில் உள்ளவர்கள் மற்றும் குரு தோஷத்தால் பாதிக்கப்பட்டு, முன்னேற இயலாத நிலையில் இருப்பவர்கள், கங்கா புஷ்கர விழா கொண்டாடப்படும் இந்த நேரத்தில் வந்து நீராடினால் வாழ்க்கை சிறப்படையும். கங்கை தாய் ஆர்ப்பரித்து பிரவாகமாக பாய்ந்தோடும் ஹரித்வார் என்ற புண்ணிய நகரில் நீராடுவது சிறப்பானது. முடிந்தவர்கள், அலக்நந்தாவும் பாகீரதி நதியும் சங்கமாகும் தேவப்ரயாக் என்கிற தேவ பூமியில் நீராடுவது மிக மிக சிறப்பானது. இச்சங்கமத்திலிருந்துதான் அந்த புண்ணிய நதி கங்கை தாய் என்று அழைக்கப்படுகிறாள்.

தெய்வீக தன்மை நிறைந்த நதிகள்: நதிகளெல்லாம் தெய்வ தன்மை நிறைந்தவை அதனால்தான் அன்னையாக பாவித்து கொண்டாடி வருகிறோம். இயற்கையாக அமைந்த நீர் நிலைகளில் தெய்வத் தன்மை உண்டு. அதன் மகிமையையும் சிறப்பையும் உணர்ந்தவர்கள் நதிகளில் கடவுள் இருப்பதை உணர்கின்றனர். எனவேதான் ஆண்டுதோறும் சிறப்பு வாய்ந்த நாட்களில் புனித நதிகளில் நீராடி புண்ணியம் சேர்க்கின்றனர். நதிகளில் புனித நீராடும் போது என்ன செய்யலாம் என்ன செய்யக்கூடாது என்று பார்க்கலாம்.

Guru Peyarchi 2023 Puruna Story about Ganga Pushkaram

புனித நீராடும் போது என்ன செய்யலாம்: நீராடப் போகிறவர்கள் நதிக்கரையில் உள்ள மண்ணை எடுத்துத் தன் உடம்பில் பூசிக் கொண்டு, நதியை வணங்கி அதனுள் இறங்க வேண்டும். புனித குளங்களில் நீராடும் போது சூரியபகவானுக்கு எதிர் முகமாக நின்று நீராட வேண்டும் என்பது விதி. ஆனால், புனித நதிகளில் நீராடும் போது, நதியின் பிரவாகத்திற்கு எதிர் முகமாக நின்றே நீராட வேண்டும். முதுகைக் காட்டக் கூடாது. நதிகளில் மூன்று முறை மூழ்கி எழ வேண்டும். ஒவ்வொரு முறையும் ''ஹரி, ஹரி'' என்று சொல்ல வேண்டும்.

என்ன செய்யக்கூடாது: செருப்பு போட்டுக் கொண்டும், குடை பிடித்துக் கொண்டும் செல்லக் கூடாது. சிகப்பு, கருப்பு, நீலநிற வஸ்திரம், தலைப்பு இல்லாத வஸ்திரம், ஓரத்தில் நீலக்கரை, கருப்பு கரை போட்ட வஸ்திரம் இவைகளை உடுத்திக் கொள்ளக் கூடாது. ஆண்கள் அரைஞாண்கயிறு இல்லாமல் நீராடுதல் கூடாது. அரைஞாண் கயிற்றில் வேஷ்டியை கட்டிக் கொண்டும் நீராடக் கூடாது. இது வேஷ்டி இல்லாததற்குச் சமம். பெண்கள் தலைமுடியை முன்புறம் போட்டுக் கொண்டு நீராட வேண்டும். பின்புறம் போடக் கூடாது. நீராடும் போது எச்சிலைக் காறி உமிழ் வதும், சிறுநீர் கழிப்பதும் பாபச் செயலாகும். நதியினுள் ஈரத்துணிகளைப் பிழியக் கூடாது. கரைக்கு வந்தே பிழிய வேண்டும். நீரிலிருந்து வெளியே வந்து தலைமயிர்களை உதறக் கூடாது.

யார் எப்போது புனித நீராடலாம் : சூரிய உதயத்திற்கு முன்பு நான்கு நாழிகைகள் அருணோதய காலமாகும். இந்த 96 நிமிட காலத்தில் நீரா டுவது மிக மிகப் புண்ணியம் என்று சொல்லப்பட்டுள்ளது. திருமணமாகாத ஆண்களும், பெண்களும் அதிகாலை வேளையில் நீராடி னால் மட்டுமே நல்ல பலன்கள் கிடைக்கும் என்று சொல்லப்பட்டுள்ளது. திருமணமானவர்கள் அதிகாலை, மதியம் ஆகிய இரண்டு வேளைகளிலும் நீராடலாம். சந்நியாசிகள் அதிகாலை, மதியம், சூரிய அஸ்தமனம் ஆகிய மூன்று வேளைகளிலும் புனித நீராடலாம். குளித்து முடித்தவுடன், காய்ந்த வஸ்திரத்தை மேலே சுற்றிக் கொண்டு, ஈர வஸ்திரத்தைக் கீழாக விட வேண்டும். மேலாக எடுத்துப் போடக் கூடாது. நெற்றியில் கோபி சந்தனம் பூசிக் கொண்டு நதியை மீண்டும் ஒருமுறை வணங்கி முடிக்க வேண்டும்.

குரு பெயர்ச்சி யாருக்கு நன்மை: இந்த குருப்பெயர்ச்சி மிதுனம்,சிம்மம்,துலாம்,தனுசு மற்றும் மீன ராசிகளுக்கு மிக சிறப்பாக சொல்லப்பட்டுள்ளது. மற்ற ராசிகளுக்கு எந்த விதத்திலும் தீமைகள் ஏற்படாது,காரணம் குருபகவான் இயற்கை சுப கிரகமாவார். மேஷம், ரிஷபம்,கடகம், கன்னி, விருச்சிகம்,மகரம்,கும்பம் ஆகிய ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். அவரவர் தங்களின் குல தெய்வ வழிப்பாட்டை தொடர்ந்து செய்து வந்தால் எல்லாப்பிரச்னைகளையும் எதிர்க்கொண்டு கடந்து போய்விடலாம். சித்தர் கோவில்களுக்கு வியாழக்கிழமை சென்று வழிபட்டால் பாதிப்புகள் குறையும்.முடிந்தவர்கள் ஏழை எளியவர்களுக்கு,அநாதைகளுக்கு,வயோதிகர்களுக்கு உதவுங்கள்,அன்னதானம் செய்யுங்கள் குருபகவான் உங்களுக்கு பரிபூர்ணமாக அருள் செய்வார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+