Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

குரு பெயர்ச்சி பலன் 2023: கோடி நன்மை பெறப்போகும் ராசிக்காரர்கள்..ஜாக்பாட் நிச்சயம்!

Subscribe to Oneindia Tamil

சென்னை: குரு பகவான் மீன ராசியில் இருந்து மேஷ ராசிக்கு இடப்பெயர்ச்சி அடையப்போகிறார். குரு பகவான் 12ஆண்டுகளுக்குப்பிறகு மேஷ ராசிக்கு வரப்போகிறார். குரு பெயர்ச்சி ஏப்ரல் 21ஆம் தேதி சித்திரை மாதம் 8ஆம் தேதி நிகழப்போகிறது. குரு இருக்கும் இடத்தை விட குரு பார்க்கும் இடத்திற்கு பலன் அதிகம் என்று சொல்வார்கள். மேஷ ராசியில் அமரும் குரு பகவானின் பார்வை சிம்மம், துலாம்,தனுசு ராசிகளின் மீது விழப்போகிறது. கண்டச்சனியால் கஷ்டப்படும் சிம்ம ராசியும், ஜென்ம கேதுவினால் மன உளைச்சலுக்கு ஆளாகியுள்ள துலாம் ராசியும், ஏழரை சனியின் பிடியில் இருந்து விடுபட்டிருக்கும் தனுசு ராசிக்காரர்களும் கோடி நன்மைகளைப் பெறப்போகிறார்கள். குரு பெயர்ச்சியால் 4 ராசிக்காரர்களுக்கும் ஜாக்பாட் கிடைக்கப்போகிறது.

குரு பகவான் ஒரு ராசியில் இருந்து மற்றொரு ராசிக்கு இடப்பெயர்ச்சியாக ஓராண்டு எடுத்துக்கொள்வார். சில நேரங்களில் அதிசாரமாக வேறொரு ராசிக்கு இடப்பெயர்ச்சி அடைவார். கடந்த 9 மாத காலமாகவே குரு பகவான் மீன ராசியில் ஆட்சி பெற்ற நிலையில் பயணம் செய்கிறார். குரு பார்க்க கோடி நன்மை என்று சொல்லியிருக்கிறார்கள். சுப கிரகமான குருபகவானின் பார்வைக்கு அற்புதமான பலன்கள் உண்டு. குரு பார்வை கிடைத்தாலே திருமண யோகம் கைகூடி வரும். திருமணமான தம்பதியினருக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கும். வேலையில் இருப்பவர்களுக்கு புரமோசனுடன் சம்பள உயர்வு கிடைக்கும். வேலை இழந்து தவிப்பவர்களுக்கு புதிய வேலை கிடைக்கும். எனவேதான் குரு பெயர்ச்சியை பலரும் எதிர்பார்க்கின்றனர். குரு பார்வை கிடைத்தாலே குரு பலன் வந்து விட்டதாக கருதலாம். திடீர் பண வருமானம் வரும். இந்த குரு பெயர்ச்சியாலும் குரு பார்வையாலும் பலனடையப்போகும் ராசிக்காரர்களைப் பற்றி பார்க்கலாம்.

Guru peyarchi palan 2023: These 3 Zodiac signs gets Raja yogam for Guru Vision

சிம்மம்

ஓடிப்போனவனுக்கு ஒன்பதில் குரு என்று சொல்வார்கள். திரைகடல் ஓடி திரவியம் தேடும் காலம் வந்துவிட்டது. சிம்ம ராசிக்காரர்களுக்கு வெளிநாடு செல்லும் வாய்ப்புகள் தானாக தேடி வரும். பதவிகளும் பட்டங்களும் தேடி வரும். வேலை, தொழில் வருமானம் திருமணம் குழந்தை பாக்கியம் கிடைக்கப்போகிறது. குருபகவானின் பொன்னான பார்வையால் நல்ல பண வருமானம் வரப்போகிறது ஜாக்பாட் அடிக்கப்போகிறது. அதிர்ஷ்டம் வீடு தேடி வரப்போகிறது. பூர்வீக சொத்துக்கள் விற்பனை மூலம் வருமானம் கிடைக்கப் போகிறது. தைரியம் தன்னம்பிக்கை அதிகரிக்கும். பிள்ளைகளுக்கு நன்மைகள் நடைபெறும். சுப காரியங்கள் கைகூடி வரப்போகிறது. புதிய முயற்சிகளுக்கு வெற்றி கிடைக்கும். இளைய சகோதரர் வீட்டு சுப காரியங்களில் பங்கேற்பீர்கள். குருவினால் கிடைக்கும் பலனை திகட்ட திகட்ட அனுபவிக்க தயாராகுங்கள்

துலாம்

துலாம ராசிக்காரர்களுக்கு குரு பார்வை நேரடியாக விழுகிறது. ஏழில் குரு வந்தால் நேரடியாக ராசியை பார்ப்பார். களத்திர ஸ்தான குருவின் பார்வையால் கடன்கள் அடைபடும். கேட்கிற வரம் கிடைக்கும். குருவின் நேரடி பார்வை விழுவதால் ஆசைகள் நிறைவேறும். திருமணம் நடைபெறுவதில் இருந்த தடைகள் நீங்கும். மன அழுத்தம் நீங்கி மன திருப்தியாக இருப்பீர்கள். வேலைக்காக செய்யும் முயற்சி வெற்றி பெறும். வெளிநாடு செல்ல வேண்டும் என்ற நோக்கம் நிறைவேறும். கை நிறைய சம்பளத்தில் நல்ல வேலை கிடைக்கும். குருவின் பார்வையால் பெரியவர்களின் வாழ்த்துக்கள் ஆசிகள் கிடைக்கும். வேண்டிய வரங்களை குரு பகவான் கொடுப்பார். பணவரவும் லாபங்களும் கூடும். தன்னம்பிக்கையும் தைரியமும் அதிகரிக்கும்.

தனுசு

தனுசு ராசிக்காரர்களுக்கு பூர்வ புண்ணிய ஸ்தானமான ஐந்தாம் இடத்தில் அமரும் குருபகவான் பூர்வ புண்ணிய பலன்களை அள்ளித்தரப்போகிறார். இந்த குருப்பெயர்ச்சியினால் நினைத்தது நிறைவேறும். திருமணம், குழந்தை பாக்கியம் கிடைக்கும். வெளிநாடு யோகம் வரும். குரு பகவான் பார்வை உங்கள் ராசிக்கு கிடைப்பதால் அதிக சம்பளத்துடன் நல்ல வேலை கிடைக்கும். அற்புதமான குருப்பெயர்ச்சியாக அமைந்துள்ளது. குரு தனது ஒன்பதாம் பார்வையால் தனுசு ராசிக்காரர்களை பார்க்கிறார். ஐந்தாம் பார்வையால் பாக்ய ஸ்தானத்தையும் ஏழாம் பார்வையால் லாப ஸ்தானத்தையும், குரு பார்வையிடுவதால் உங்களுக்கு தொழிலில் லாபம் அதிகரிக்கும் வருமானம் கூடும். அப்பாவின் உடல் ஆரோக்கியத்தில் இருந்த பிரச்சினைகள் முடிவுக்கு வரப்போகிறது.

மிதுனம் ஜாக்பாட் நிச்சயம்

Guru peyarchi palan 2023: These 3 Zodiac signs gets Raja yogam for Guru Vision

குரு பகவான் பார்வையால் சிம்மம், துலாம்,தனுசு ராசிக்காரர்கள் அபரிமிதமான யோகத்தை பெறப்போகின்றனர். அதே போல குரு பகவான் மிதுன ராசிக்காரர்களுக்கு லாப ஸ்தானத்தில் பயணம் செய்யப்போகிறார். செய்யும் தொழிலில் இரட்டிப்பு லாபம் கிடைக்கப்போகிறது. அஷ்டமத்து சனியால் அவதிப்பட்டு வந்த மிதுன ராசிக்காரர்களுக்கு குரு பெயர்ச்சியால் நல்ல காலம் பிறக்கப்போகிறது. அதிர்ஷ்ட காற்று வீசுவதால் கிடைக்கப்போகும் பண மழையை அனுபவிக்கத் தயாராகுங்கள்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+