சட்டசபைக்குள் குட்கா.. ஸ்டாலின் & திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான வழக்கில் ஐகோர்ட் அதிரடி உத்தரவு!

Subscribe to Oneindia Tamil

சென்னை: முந்தைய அதிமுக ஆட்சியில் தமிழக சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பான உரிமை மீறல் நோட்டீசுக்கு விளக்கம் அளிக்கும்படி, தற்போதைய முதல்வர் மு.க. ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்.எல்.ஏ.க்களுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

முந்தைய அஇஅதிமுக ஆட்சியில் சட்டமன்றத்துக்குள் குட்கா கொண்டு சென்ற விவகாரம் தொடர்பாக அப்போதைய எதிர்க்கட்சி தலைவரும், இப்போதைய முதல்வருமான ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்களுக்கு எதிரான உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்ததை எதிர்த்து, முந்தைய ஆட்சியில் மேல்முறையீட்டு வழக்குகள் தாக்கல் செய்யப்பட்டன.

Gutka Case Stalin Chennai HC

இந்த மேல் முறையீட்டு வழக்குகள் அனைத்துமே, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வில் 2 நாட்களுக்கு முன்பு சென்னை ஹைகோர்ட்டில் விசாரணைக்கு வந்தன.

18 எம்எல்ஏக்கள்: இதில், ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் தரப்பில், மூத்த வழக்கறிஞர் என்ஆர்.இளங்கோ ஆஜரானார்.. அப்போது, "கடந்த 2017ம் வருடம் அதிமுக-வில் ஓபிஎஸ் அணியினர் உருவானது, 18 எம்எல்ஏக்கள் அரசுக்கு எதிராக செயல்பட்டது, அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி பெரும்பான்மை வாக்கெடுப்பு நடத்தியது போன்றவற்றையெல்லாம் சுட்டிக்காட்டி, ஆட்சி கவிழ்ந்து விடக்கூடும் என்ற காரணத்தால் இந்த உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டதாக வாதிட்டார்..

மேலும் அரசியலமைப்பு சட்டத்தின்படி, பதவிக்காலம் முடிந்ததுமே சட்டமன்றம் கலைந்து விடுகிறது. அதுபோலவே, நிலுவையிலுள்ள மசோதாக்கள், உரிமை மீறல் போன்ற நடவடிக்கைகளும் காலாவதியாகி விடுகின்றன என்றெல்லாம் பல்வேறு உயர்நீதிமன்ற, உச்ச நீதிமன்ற தீர்ப்புகளை மேற்கோள்காட்டியும் இளங்கோ வாதிட்டார்.

உரிமை மீறல்: எனவே, இப்போதைய சட்டமன்றம் இந்த விவகாரத்தை விசாரிக்க முடியாது.. உள்நோக்கத்துடன் உரிமை மீறல் நோட்டீஸ் அனுப்பப்பட்டுள்ளதால், இந்த விவகாரத்தில் நீதிமன்றம் தலையிட முடியாது" என்றும் வாதாடினார்.

முந்தைய உரிமைக் குழு தலைவராக இருந்த பொள்ளாச்சி ஜெயராமன், இப்போதும் உரிமைக்குழு உறுப்பினராக நீடிப்பதாக அவர் தரப்பில் தெரிவிக்கப்பட்டது. அப்போது, பொள்ளாச்சி ஜெயராமன் தற்போதைய குழுவை பிரதிநிதித்துவப்படுத்த முடியாது என திமுக தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

பொள்ளாச்சி ஜெயராமன்: பிறகு, பொள்ளாச்சி ஜெயராமன் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் வி. ராகவாச்சாரி, "குழுவின் பதவிக்காலம் முடிவுக்கு வந்தாலும், நிலுவையில் உள்ள நடவடிக்கைகள் குறித்து அறிக்கை அளிக்க வேண்டும்" என்று கேட்டுக் கொண்டார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதிகள், "மசோதாக்கள் காலாவதியாகலாம். ஆனால், உரிமை மீறல் போன்ற நடவடிக்கைகள் எப்படி காலாவதியாகும்? என்ற கேள்வி எழுந்துள்ளது. அந்த நடவடிக்கைகள் முடிவுக்கு வர அனுமதிக்க வேண்டும்" என்றார்கள்.. நிறைவாக இரு தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதிகள், வழக்கின் தீர்ப்பை ஜூலை 31ம் தேதிக்கு அதாவது இன்றைக்கு தள்ளிவைத்து உத்தரவிட்டனர்.

தீர்ப்பு: இன்று இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம் மற்றும் குமரப்பன் அமர்வு, உரிமை மீறல் நோட்டீசை எதிர்த்து முன்கூட்டியே வழக்கு தாக்கல் செய்யப்பட்டு இருக்கிறது.. அந்த நோட்டீஸ் ஒரு முடிவை எட்ட வேண்டும் எனக் குறிப்பிட்டது.

சட்டமன்றத்தின் பதவிக்காலம் முடிந்து விட்டால் உரிமை மீறல் பிரச்சனை காலாவதியாகி விட்டதாக திமுக எம்எல்ஏக்கள் தரத்தில் முன்வைக்கப்பட்ட வாதத்தை ஏற்க முடியாது என்று கூறி, உரிமை மீறல் நோட்டீசை ரத்து செய்து கடந்த 2021 பிப்ரவரி மாதம் தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவு ரத்து செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

உரிமைக்குழுவிடம் விளக்கம் அளிக்க உத்தரவு: மேலும், உரிமை மீறல் நோட்டீசுக்கு முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட திமுக எம்எல்ஏக்கள் உரிமை குழுவிடம் விளக்கம் அளிக்க வேண்டும் எனவும், உரிமைக்குழு சட்டமன்ற விதிகளை பின்பற்றி, விசாரணை நடத்தி இறுதி முடிவு எடுக்க வேண்டும் எனவும் நீதிபதிகள் உத்தரவிட்டனர்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+