சென்னையில் ஜிம் மாஸ்டரின் லீலை.. 45 பவுன் தங்கம், 10 லட்சம் மோசடி.. சிக்க வைத்த இளம் பெண்
சென்னை: சென்னை ராயபுரம் பகுதியைச் சேர்ந்த 22 வயது இளம் பெண் ஒருவரை திருமணம் செய்வதாக ஏமாற்றியாக ஜிம் உரிமையாளர் கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் 45 பவுன் தங்க நகை மற்றும் 10 லட்சம் மோசடி செய்ததாக புகார் எழுந்துள்ளது. இது பற்றி உரிமையாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை ராயபுரம் பகுதியை சேர்ந்தவர் 22 வயது இளம் பெண். இவர், கடந்த 4 ஆண்டுகளுக்கு முன்பு தண்டையார்பேட்டையில் உள்ள தனியார் உடற்பயிற்சி மையத்தில் உடற்பயிற்சிக்காக சேர்ந்துள்ளார்.

அந்த தண்டையார்பேட்டை உடற்பயிற்சி மையத்தை புது அம ராஞ்சிபுரத்தைச் சேர்ந்த பெரியநாயகராஜ் (வயது 33) என்பவர் நடத்தி வந்தார் . உடற்பயிற்சி மையத்தில் பயிற்சி பெற வந்த இளம் பெண், ஜிம் உரிமையாளரான பெரியநாயகராஜ் உடன் ஒரு கட்டத்தில் பழக்கம் ஏற்பட்டது. இந்த பழக்கம் நாளடைவில் காதலாக மாறி இருக்கிறது . பின்னர் ஜிம் உரிமையாளரும் அந்த பெண்ணும் நெருங்கி பழகினார்களாம். கடந்த 4 ஆண்டுகளாக காதல் ஜோடிகளாக இருந்து வந்தார்களாம்.

இந்த நிலையில் பெரியநாயக ராஜ் இளம்பெண்ணிடம் உடற் பயிற்சி மையத்தை மேம்படுத்த இருப்பதாககூறி சிறுகசிறுக நகை, பணம் என மொத்தம் 45 பவுன் தங்க நகைகள், ரூ.10 லட்சம் ரொக்க பணத்தை வாங்கினாராம். அதுமட்டுமின்றி மோட்டார் சைக்கிள் மற்றும் சுமார் ரூ.10 லட்சம் மதிப்புள்ள கார் ஒன்றையும் காதலர் பெரியநாயகராஜுக்கு பரிசாக வாங்கி கொடுத்தாராம்

இந்நிலையில் பெரியநாயகராஜுக்கு பல பெண்களுடன் பழக்கம் இருப்பதாக இளம் பெண்ணுக்கு தெரிய வந்ததாம். தன்னை அவர் ஏமாற்றுகிறாரோ என இளம்பெண்ணுக்கு ஒரு கட்டத்தில் சந் தேகம் ஏற்பட்டது.எனவே உடனே தன்னை திருமணம் செய்து கொள்ளுமாறு பெரியநாயகராஜை இளம் பெண் வற்புறுத்தி இருக்கிறார். ஆனால் அவர் மறுத்துவிட்டாராம். இது தொடர்பாக அவர்களுக்கு அடிக்கடி தகராறு ஏற்பட்டதாம். இதனால் ஆத்திரமடைந்த இளம்பெண் கொடுத்த நகை பணத்தை திருப்பி கேட்டார். ஆனால் பெரியநாயகராஜ் தன்னிடம் பணத்தை கொடுக்கவே இல்லை.. நகை பணம் எதுவுமே இல்லை என்று கூறி இளம் பெண்ணை மோசடி செய்தாராம். இதை எடுத்து தான் ஏமாற்றப்பட்டதாக உணர்ந்த அந்த இளம் பெண், ஜிம் உரிமையாளர் பெரியநாயகராஜ் மீது ராயபுரம் காவல் நிலையத்தில் புகார் அளித்தார். அதன் பேரில் போலீசார் வழக்கு பதிவு செய்து பெரியநாயகராஜை கைது செய்தனர் மேலும் அவரிடம் இருந்த காரும் பறிமுதல் செய்யப்பட்டது.












Click it and Unblock the Notifications