ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போதே ரத்த வாந்தி எடுத்து பயிற்சியாளர் மரணம்..சென்னையில் ஷாக்.. பின்னணி
சென்னை : சென்னை ஆவடி அருகே ஜிம் பயிற்சியாளர் ரத்த வாந்தி எடுத்து உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதிகப்படியான ஸ்டீராய்டு ஊசி செலுத்திக் கொண்டதால் உயிரிழப்பா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சென்னை ஆவடி அடுத்த நெமிலிச்சேரியில் ஜிம் பயிற்சியாளராக இருந்தவர் ஆகாஷ் வயது 25. இவர் ஆணழகன் போட்டியில் வெற்றி பெறுவதற்காக ஸ்டீராய்டு ஊசி எடுத்துக் கொண்டதாக கூறப்படுகிறது.
அதிக அளவு ஸ்டீராய்டு எடுத்துக் கொண்டதால், ஜிம்மில் உடற்பயிற்சி செய்யும் போதே ரத்த வாந்தி எடுத்த நிலையில் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்ததாக கூறப்படுகிறது. இதனிடையே அதிக அளவு ஸ்டீராய்டு எடுத்துக் கொண்டதால் இரண்டு சிறுநீரகமும் ஆகாஷ்க்கு செயல் இழந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளது.

உயிரிழப்பு
ஜிம் பயிற்சியாளர் ஆகாஷ் மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற நிலையில், மாநில அளவிலான போட்டிக்கு தயாராகி வந்ததாகவும் அதற்குள் துரதிஷ்டவசமாக ஆகாஷ் இறந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது. இதனிடையே அதிகப்படியான ஸ்டீராய்டு ஊசி செலுத்திக் கொண்டதால் உயிரிழப்பா என போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

உடற்பயிற்சி
இது தொடர்பாக போலீஸ் தரப்பில் கூறப்படுவதாவது: சென்னை ஆவடி அடுத்த நெமிலிச்சேரியைச் சேர்ந்தவர் அன்பழகன். இவரது மகன் சபரிமுத்து என்கிற ஆகாஷ் (வயது 25). இவர் நடுக்குத்தகையில் உள்ள தனியார் உடற்பயிற்சி கூடத்தில் ஜிம் பயிற்சியாளராக இருந்து வந்தார். 25 வயதான ஆகாஷ் பாடிபில்டிங் போட்டியில் கலந்து கொண்டு வெற்றி பெற்றுள்ளார்.

மருத்துவமனை
தொடர்ந்து மாநில அளவிலான போட்டியில் பங்குபெற்று வெற்றி பெற வேண்டும் என தொடர்ந்து கடுமையான பயிற்சியில் ஈடுபட்டு வந்திருக்கிறார். இந்நிலையில் தீவிர உடற்பயிற்சியில் ஈடுபட்டிருந்த போது, கடந்த 22ம் தேதி ஆகாஷ் ரத்த வாந்தி எடுத்துள்ளார். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் மற்றும் பெற்றோர் அவரை தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.

உயிரிழப்பு
ஆகாஷ் தனியார் மருத்துவமனையில் தொடர்ந்து சிகிச்சையில் இருந்து வந்துள்ளார். அங்கு அவரை பரிசோதித்த மருத்துவர்கள், ஆகாஷ்க்கு இரண்டு சிறுநீரகங்களும் செயல் இழந்துவிட்டதாகவும் , நுரையீரலும் செயல் இழந்துவிட்டதாக தெரிவித்து இருக்கிறார்கள். இதையடுத்து தீவிர சிகிச்சை பிரிவில் சிகிச்சை பெற்று வந்த சபரிமுத்து என்கிற ஆகாஷ் சிகிச்சை பலன் இன்றி உயிரிழந்துள்ளார்.

ஆணழகன் போட்டி
முன்னதாக மாவட்ட அளவிலான போட்டியில் வெற்றி பெற்ற சபரிமுத்து என்கிற ஆகாஷ் கடுமையான உடற்பயிற்சி செய்து வந்ததுடன், கட்டுமஸ்தான உடலுக்காக ஸ்டீராய்டு ஊசி செலுத்தியதாகவும் கூறப்படுகிறது. இதனால் இரண்டு கிட்னி, நுரையீரல், இதயம் உள்ளிட்ட உள்ளுறுப்புகள் செயல் இழந்து சபரிமுத்து என்கிற ஆகாஷ் உயிரிழந்ததாக கூறப்படுகிறது. ஆணழகன் போட்டிக்காக அதிக அளவு ஸ்டீராய்டு எடுத்துக் கொண்டதால் இளம் ஜிம் பயிற்சியாளர் உயிரிழந்ததாக கூறப்படும் சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
-
திருவாரூர் மக்களுக்கு குட்நியூஸ்.. விஜயை டேக் செய்த மத்திய அமைச்சர்! -
Mayor Priya: சென்னை மேயர் பிரியாவுக்கு உடல்நலக் குறைவு! காலில் என்ன ஆனது? -
விஜய் எடுக்கும் ரிஸ்க்.. பரந்தூர் விமான நிலையத்தால் பல விஷயங்களை இழக்க வேண்டியிருக்கும்! -
சென்னையில் மாறிய ரூல்ஸ். அடுக்குமாடி வீடுகள், வணிக நிறுவனங்கள், ஓட்டல்களுக்கு மாநகராட்சி அதிரடி -
தமிழ்நாடே குளுகுளுவென மாறப்போகிறது.. 11 மாவட்டங்களில் இன்று கனமழை.. எந்தெந்த மாவட்டம்? -
சென்னையில் எந்த பொண்டாட்டியும் இப்படி ஏமாத்தக்கூடாது.. சினிமாவையே மிஞ்சும் சம்பவம் -
Vijay Friend: "சார் அந்த கச்சத்தீவு.." நோ கமெண்ட்ஸ்னு சொன்ன மீன்வளத் துறை அமைச்சர் ஸ்ரீநாத்! -
பிச்சு உதற போகுது கனமழை.. 7 மாவட்டங்களில் டமால் டுமீல் தான்! வங்கக்கடல் சக்கரத்தால் இனி கூலிங் தான்! -
இனிமேலாவது வீரவசனம் பேசாமல் மாற்றத்தைக் கொடுங்கள் CM விஜய் சார்! அன்பில் மகேஷ் பதிவு -
டெல்லியிலும் கொங்கு சமையல் மணக்கப்போகுது.. முதல்வர் விஜய்க்கு சமைக்கும் மாதம்பட்டி ரங்கராஜ்! -
உதயநிதி வீட்டை கேட்கும் ஆதவ் அர்ஜுனா.. இந்த வீடுதான் வேண்டும்.. கோட்டையில் நீடிக்கும் மல்லுக்கட்டு -
சீமான் வீட்டு விசேஷத்தில் தாய்மாமன் சீருடன் அனிதா ராதாகிருஷ்ணன்! வாசல் வரை வரவேற்று.. என்ன ஒரு பாசம்












Click it and Unblock the Notifications