எப்பவுமே ஏடாகூடமாக கருத்துகளை சொல்லும் எச் ராஜா.. பரவாயில்லையே நல்லது கூட சொல்லி தராரே!
Recommended Video
சென்னை: கவிஞர் கண்ணதாசனின் அர்த்தமுள்ள இந்துமதத்தையும், வனவாசத்தையும் இளைஞர்கள் படித்து பயன்பெற வேண்டும் என பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா டுவிட்டரில் தெரிவித்துள்ளார்.
பாஜகவின் தேசிய செயலாளர் எச் ராஜா டுவிட்டரில் ஒரு கருத்து தெரிவித்தால் அது கடும் வாக்குவாதத்தில் முடிவு பெறும். அந்தளவுக்கு விஷமத்தனமான கருத்துகளையே கூறுவது இவரது வாடிக்கையாகும்.
இப்படித்தான் எதையாவது போட்டுவிட்டு பின்னர் நெட்டிசன்களிடம் வாங்கிக் கட்டிக் கொள்ளும் சம்பவங்களும் நடந்தேறியுள்ளன. சுருக்கமாக சொல்ல போனால் டுவிட்டர்வாசிகளுக்கு எச் ராஜா ஒரு என்டர்டெயின்மென்ட்.

அர்த்தமுள்ள இந்துமதம்
இந்த நிலையில் இன்று கவிஞர் கண்ணதாசன் பிறந்தநாள் விழா கொண்டாடப்படுகிறது. இதுகுறித்து எச் ராஜா டுவிட்டரில் கூறுகையில் கவிஞர் கண்ணதாசன் அவர்களின் பிறந்த தினம் இன்று. காங்கிரஸில் துவங்கி கழகத்தில் பயணித்து பின் அர்த்தமுள்ள இந்துமதம் தந்த மாமேதை இவர். ஈடுஇணையற்ற கவியரசர்.
|
அரசியல்
இவர் ஆன்மீகத்திற்கு தந்தது அர்த்தமுள்ள இந்து மதம். அரசியலுக்கு தந்தது வனவாசம். இவை இரண்டையும் இளைஞர்கள் படித்து பயன்பெற வேண்டும் என கூறியுள்ளார். இதை பார்த்த அனைவருக்கும் அதிர்ச்சி. என்னவென்றால் எப்பவுமே எச் ராஜா வம்பை விலை கொடுத்துதானே வாங்குவார். இதென்ன புதுப்பழக்கம் அறிவுரை எல்லாம் சொல்றாரு.
|
மனதில்
தான் வாழ்ந்த வாழ்வை தத்துவங்களாக்கி பாடல்களாக தந்தவர்
அந்த பாடல்கள் காவியங்களாக என்றும் ரசிகர்கள் மனதில் நிலைத்து நிற்க்கும் சிறுகூடல்பட்டியின் சிறந்த முத்து அவர்.
|
அருணகிரிநாதர்
உண்மையிலேயே கண்ணதாசன் அவர்கள் ஒரு ஞானி. இந்து மதத்திற்கு கிடைத்த 20ம் நூற்றாண்டு அருணகிரிநாதர், இந்நாளில் போற்றி வணங்குவோம் என தெரிவித்துள்ளார்.
|
விடாத நெட்டிசன்கள்
எச் ராஜாவே நல்லது சொல்லிக் கொடுத்தாலும் இந்த நெட்டிசன்கள் விடமாட்டார்கள் என்பதற்கேற்ப இந்த நெட்டிசன் என்ன கூறியுள்ளார் பாருங்கள். 100 கிலோ தங்கம் மோசடியில் தேடப்பட்ட காஞ்சிபுரம் கோயில் குருக்கள் மும்பையில் கைது என்ற பத்திரிகை செய்தியை காண்பித்து தலைவா வா போராட்டம் பண்ண என அழைக்கிறார் இந்த நெட்டிசன்.












Click it and Unblock the Notifications