சென்னை அப்டேட்டுகளுக்கு
நோட்டிபிகேஷனை அனுமதி  
Just In
Oneindia App Download

அப்போ அத்தனையும் நடிப்பா கோப்பால்.. நடிப்பா..? எச்.ராஜாவை பார்த்து அலறும் ஆதரவாளர்கள்

Google Oneindia Tamil News

Recommended Video

    நீதிமன்றத்தில் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டார் எச்.ராஜா- வீடியோ

    சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜாவின் பல்டிகள் தொடருகின்றன. இவரது பேச்சை யாருமே நம்ப முடியாத சூழ்நிலை இதன் மூலம் உருவாகியுள்ளது.

    புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க பாஜகவினர் அனுமதி கேட்டுள்ளனர். ஆனால் போலீஸ் இதற்கு அனுமதி அளிக்கவில்லை. அது மசூதி இருக்கும் இடம் என்பதால், உயர் நீதிமன்ற அறிவுறுத்தலின்படி பாஜகவிற்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. இந்த நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா அழைக்கப்பட்டு இருந்தார்.

    வீடியோ மேடை அமைக்க அனுமதி மறுத்ததால் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா கோபமாக போலீசுடன் வாக்குவாதம் செய்தது வைரலாகி உள்ளது. எச்.ராஜா பேசியது மொத்தமும் வீடியோவாக வெளியாகி உள்ளது. இதில் அவர் நீதிமன்றத்தை கெட்ட வார்த்தையில் பேசினார். போலீஸ் குறித்து தரக்குறைவாக பேசியுள்ளார். ஆனால் இதுதொடர்பாக கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டதும், அதிலிருந்து எஸ்கேப் ஆக முயன்றார்.

    நான் வாயை குவிக்கையில்

    நான் வாயை குவிக்கையில்

    இதுகுறித்து தனியார் தமிழ் செய்தி சேனல் ஒன்றுக்கு அளித்த பேட்டியின்போது அந்த வீடியோவில் இருப்பது எனது குரல் இல்லை யாரோ என்னை போல பேசி இருக்கிறார்கள் என்று எதிராக ஒரு இறந்த வீடியோ எடிட் செய்யப்பட்டது எனக்கு எதிராக செயல்படும் சிலர் திட்டமிட்டு இதை செய்துள்ளனர் என்றும் அவர் கூறியிருந்தார்.

    பேசியது நான்தான்

    பேசியது நான்தான்

    இந்த நிலையில்தான் இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் நேரில் ஆஜரான ராஜா உணர்ச்சிவசப்பட்டு பேசி விட்டதாகவும் நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்பதாகவும் தெரிவித்துள்ளார் இதையடுத்து அவர் மீதான அவதூறு வழக்கு முடித்து வைக்கப்பட்டுள்ளது. இதன் மூலம் தான் அவ்வாறு பேசவில்லை என்று முன்பு ஊடகத்திற்கு அளித்த பேட்டி பொய்யானது என்பது அம்பலமாகியுள்ளது.

    பல்டியடிப்பது வழக்கம்

    பல்டியடிப்பது வழக்கம்

    எச். ராஜா சர்ச்சைக்குரிய விஷயங்களை பேசிவிட்டு பல்டி அடிப்பது என்பது புதிய விஷயம் கிடையாது பெரியார் சிலையை அகற்ற வேண்டும் என்று டுவிட்டரில் கருத்து தெரிவித்து விட்டு தமிழகம் முழுக்க பெரும் கொந்தளிப்பு ஏற்படும் நிலையில் அது தனது அட்மின் பதிவேற்றம் செய்தது என்று கூறி எஸ்கேப் ஆகி இருந்தார்.

    ஆதரவாளர்களுக்கு பயம்

    ஆதரவாளர்களுக்கு பயம்

    இப்போது நீதிமன்றத்திலும் முன்பு அவர் மீடியாக்களிடம் கூறியதற்கு மாறாக ஒரு கருத்தை தெரிவித்து இந்த விஷயத்திலும் பல்டி அடித்துள்ளார் ஆனால் அவர் சார்ந்த கட்சியை இவர் ஏதோ இந்து மதத்தின் காவலர் என்பதை போல சித்தரிக்க முயற்சி செய்கிறது மக்களின் உணர்வை தூண்டிவிட்டு பிரச்சினை என்று வரும்போது தான் மட்டும் எஸ்கேப் ஆகி விடும் தந்திரத்தை பின்பற்றி வருகிறார். எனவே இவரை ஒரு கொள்கையாளர் என்ற அளவில் வலதுசாரி சிந்தனையாளர்கள் கூட ஏற்றுக் கொள்வதற்கு அச்சப்படும் சூழல் உருவாகி உள்ளது.

    கட்சி நடவடிக்கை

    கட்சி நடவடிக்கை

    ராஜாவை நம்பி ஏதேனும் செய்யப் போனால் நடுவில் அவர் எஸ்கேப் ஆகிவிடுவார். நமக்குத்தான் பிரச்சினை வரும், என்ற எச்சரிக்கை உணர்வு அவரது ஆதரவாளர்களுக்கு வந்துள்ளது. இவரது அடுத்தடுத்த பல்டிகள் காரணமாக தமிழக மக்களிடையே மட்டுமின்றி அவரது ஆதரவாளர்களிடம் கூட நம்பிக்கையை இழந்து வருகிறார். இது ஒருபக்கம் என்றால் நீதிமன்றத்தை தவறாக பேசியதை ராஜாவே ஒப்புக்கொண்ட நிலையில் அவர் மீது கட்சி நடவடிக்கை பாயுமா என்ற கேள்வி எழுந்துள்ளது.

    English summary
    H.Raja continues his poitical stunts in Tamilnadu, his latest over High court and police.
     
     
     
    உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
    Enable
    x
    Notification Settings X
    Time Settings
    Done
    Clear Notification X
    Do you want to clear all the notifications from your inbox?
    Settings X