கிரேட் எஸ்கேப்.. சிறை தண்டனையிலிருந்து தப்பினார் எச்.ராஜா
எச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதன் மூலம் ஜெயில் தண்டனையில் இருந்து தப்பியுள்ளார்.
Recommended Video

சென்னை: பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் மன்னிப்பு கேட்டதன் மூலம் ஜெயில் தண்டனையில் இருந்து தப்பியுள்ளார்.
நீதிமன்றங்களை அவமதிக்கும் விதத்தில் பேசியதற்காக பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா மன்னிப்பு கேட்டுள்ளார். சென்னை உயர் நீதிமன்றத்தில் ஆஜராகி நிபந்தனையற்ற மன்னிப்பு கேட்டுள்ளார் .
கடந்த மாதம் புதுக்கோட்டை மாவட்டம் மெய்யபுரம் அருகே உள்ள பள்ளிவாசல் பகுதியில் விநாயகர் சிலை ஊர்வலத்திற்காக மேடை அமைக்க அனுமதிக்காத போலீசையும், நீதிமன்றத்தையும் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா திட்டினார். மிகவும் கொச்சையாக அவர் திட்டினார். இதற்காக அவர் மன்னிப்பு கேட்டுள்ளார்.

தயாராக வந்தார்
எச்.ராஜா இன்று நீதிமன்றம் வரும்போதே மன்னிப்பு கேட்பதற்கு தயாராகி வந்தார் என்றுதான் கூறப்படுகிறது. ஏற்கனவே தனது வழக்கறிஞர்களுடன் மன்னிப்பு கேட்பது குறித்து ஆலோசித்துவிட்டார் என்று தெரிவிக்கிறார்கள். இதற்காகத்தான் 11 மணி விசாரணைக்கு 9 மணிக்கே உச்ச நீதிமன்றத்தில் பவ்யமாக ஆஜர் ஆனார் என்றும் தெரிவிக்கிறார்கள்.

மன்னிப்பு
இவர் இன்று மன்னிப்பு கேட்கவில்லை என்றால் வழக்கு விசாரணை வேறு மாதிரி சென்று இருக்கும். இந்த வழக்கு நீதிமன்றம் தாமாக முன்வந்து விசாரித்த வழக்கு ஆகும். நீதிபதி சி.டி செல்வம் நீதித்துறையை மதிக்க கூடிய, மிகவும் கண்டிப்பான நீதிபதி என்பதால் எந்த விதமான உத்தரவு வேண்டுமானாலும் பிறப்பிக்க நேரிட்டு இருக்கும். அதனால்தான் எச்.ராஜா மன்னிப்பு கேட்டுவிட்டார் என்று கூறுகிறார்கள்.

ஜெயில்தான்
பெரும்பாலும் இன்று எச்.ராஜா மன்னிப்பு கேட்கவில்லை என்றால் அவர் காவலில் எடுக்கப்பட வாய்ப்பு இருந்தது. 15 நாள் சிறையில் அடைக்கப்படவும் வாய்ப்பு இருந்ததாக கூறப்படுகிறது. சிறை வாசத்திற்கு அஞ்சி கடைசியில் எச். ராஜா மன்னிப்பு கேட்டுவிட்டார் என்கிறார்கள் அவருக்கு நெருக்கமானவர்கள்.

அட போங்க பாஸ்
எச்.ராஜா மன்னிப்பு கேட்டது பெரிய அளவில் வைரல் ஆகியுள்ளது. எதுக்கு வாயை விட்டு இப்படி பேசனும், எதுக்கு நான் பேசலைன்னு பொய் சொல்லணும், கடைசில எதுக்கு இப்படி மன்னிப்பு கேட்கணும் என்று வைத்து கலாய்த்துக் கொண்டு இருக்கிறார்கள். தமிழக பாஜகவின் ''தாமரையில்'' எச்.ராஜா பிடுங்கிய இதழ்களில் இது கொஞ்சம் பெரிய இதழ் ஆகும்.
-
விஜய்க்கு நேரடி குடைச்சல் தரப்போகும் அண்ணாமலை.. பாஜகவில் இருந்து விலகிய கையோடு போட்ட பிளான்! பின்னணி -
அண்ணாமலை மாதிரி இனி ஒருத்தர் வர மாட்டார்.. பாஜகவிலிருந்து விலகியதால்.. கலங்கிய ஆர்எஸ்எஸ்! -
அடிச்சு ஆடுங்க ஜி.. இனி உங்க காலம்! சாமியாரைப் பார்த்து ஐடியா கேட்ட அண்ணாமலை.! இது தான் காரணமா? -
நேரம் ஒதுக்காத அமித்ஷா.. கிரீன் சிக்னல் கொடுக்காத பாஜக தலைமை! டெல்லியில் காத்திருக்கும் அண்ணாமலை -
கொங்கு மண்டல கணக்கு.. எடப்பாடி மீது குறையும் நம்பிக்கை.. அண்ணாமலை புதிய ரூட் எடுக்கும் பின்னணி -
அண்ணாமலை தொடங்கும் புது இயக்கம்.. பெரிய பிளானில் மாஜி ஐபிஎஸ்.. அப்போ கட்சி எப்போது? கசிந்த தகவல் -
அண்ணாமலையா, மோடியா.. பாஜக ஆதரவாளர்களுக்கு இப்போ டெலிகேட் பொசிஷன்! -
ஆடி மாதம் முடிந்ததும் அதிரடி! செப்டம்பரில் புதிய கட்சி தொடங்கும் அண்ணாமலை? கசியும் ரகசிய பிளான் -
ராஜ்யசபா சீட் கொடுத்த பாஜக தலைமை.. திட்டவட்டமாக மறுத்த அண்ணாமலை.. அடுத்த 6 மாதத்திற்கு மெகா பிளான் -
"வீட்டு வேலை செய்த பெண் டூ மாண்புமிகு அமைச்சர்.." மேற்கு வங்கத்தில் பாஜக செய்த சம்பவம்! -
டெல்லியில் க்ளைமாக்ஸ்! நெருங்கும் மெகா பிளான்.. பிரதமர் மோடியின் மத்திய அமைச்சரவையில் அதிரடி மாற்றம் -
மாடு பலியிட தடை.. தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம்! அமைச்சர் ஷாஜஹான் உறுதி












Click it and Unblock the Notifications