யாருன்னு சொல்லுங்க.. ஆசையாக கேள்வி கேட்ட எச்.ராஜா.. "பெரியார்".. பதிலை கேட்டதும் சட்டென மாறிய முகம்

Subscribe to Oneindia Tamil

சென்னை: நேற்று பொன்னியின் செல்வன் படம் பார்த்த பின் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். இதில் பெரியார் என்ற வார்த்தையை கேட்டதும் அவர் முகம் மாறியது பெரிய பரபரப்பை ஏற்படுத்தியது.

பொன்னியின் செல்வன் 1 படம் வெளியாகி மிகப்பெரிய அளவில் ஹிட் அடித்துள்ளது. படத்தின் வசூல் 320 கோடி ரூபாயை தாண்டி உள்ளது.

தேசிய அளவில் படம் மிகப்பெரிய அளவில் கவனம் பெற்றுள்ளது. இந்த நிலையில் நேற்று நேற்று பொன்னியின் செல்வன் படத்தை பாஜக மூத்த தலைவர் எச். ராஜா பார்த்தார்.

பொன்னியின் செல்வன்

பொன்னியின் செல்வன்

இந்த நிலையில் நேற்று பொன்னியின் செல்வன் படம் பார்த்த பின் எச். ராஜா செய்தியாளர்களை சந்தித்தார். அவர் அளித்த பேட்டியில் திட்டமிட்டு மறைக்கப்பட்ட மன்னர் ராஜராஜசோழன். இந்தியாவிலேயே மிகப்பெரிய மன்னனாக இருந்தவர் ராஜராஜசோழன். கடல் கடந்து ஆட்சி செய்த பேரரசன் ராஜராஜசோழன். ஆனால் அவனை திட்டமிட்டு ஆங்கிலேயர்கள் மறுத்தனர். அவரை பற்றிய சரித்திரங்கள் தமிழ் குழந்தைகளுக்கு பயிற்றுவிக்கப்பட்டது. இஸ்லாமியர்கள் பற்றி நாம் படித்தோம்.

ராஜராஜசோழன்

ராஜராஜசோழன்

ஆனால் ராஜராஜசோழன் பற்றி நம் குழந்தைகள் படிக்கவில்லை. திராவிட இயக்கங்கள் இதை எல்லாம் மறைத்துவிட்டனர். இப்போது படம் மூலம் அவர்களின் வரலாறு வெளியே வந்துள்ளது. பாகுபலி அளவிற்கு மிகப்பெரிய அளவில் படம் எடுத்துள்ளனர். தமிழ் மக்கள் இனி ராஜராஜசோழன் பற்றி படிக்க தொடங்குவார்கள்,. இந்த படத்தில் இல்லாத சில விஷயங்களை பற்றி சிலர் சர்ச்சையாக பேசி வருகிறார்கள். பிரகதீஸ்வரர் கோவிலை காட்டியது ராஜராஜசோழன் தானே?

எச். ராஜா

எச். ராஜா

பின்னர் அதை வைத்து இவர்கள் எப்படி சர்ச்சையை பரப்ப முடியும். இந்த படம் நன்றாக உள்ளது. வெறும் சாதிகளை வைத்துக்கொண்டு சிலர் பத்ம எடுப்பார்கள். சமூக நீதி என்றெல்லாம் சிலர் படம் எடுப்பார்கள். இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படம் டிரெண்டை மாற்றி உள்ளது. ரசிகர்கள் இனி இது போன்ற படங்களை பார்ப்பார்கள். ராஜராஜசோழன் இந்து இல்லை என்று ஒரு நான்கு ஐந்து பேர் கொண்ட கும்பல் சொல்கிறது. அவர்களின் விமர்சனங்கள் எல்லாம் எடுபடாது.

இந்துத்துவா

இந்துத்துவா

இந்த படத்தில் இந்துத்துவா திணிப்பு இல்லை. இந்த மண் இந்து மண். இந்துஸ்தான் மண் இது. சிந்துவிற்கு அப்பால் இருக்கும் மண் இந்து மண். இதை பற்றி அரைகுறை பசங்க பேசும் விஷயங்களை நாம் கவனத்தில் கொள்ள கூடாது. அப்போது ஆப்கானிஸ்தான் வரை இந்துஸ்தானம்தான் இருந்தது. இதை பற்றி தவறான விஷயங்களை சிலர் பரப்பி வருகிறார்கள். இஸ்லாமோ, கிறிஸ்துவமோ வரும் முன் இந்து மதம் மட்டுமே இருந்தது. அதுதான் பழமையான சனாதன தர்மம், என்று எச். ராஜா குறிப்பிட்டார்.

செய்தியாளர்

செய்தியாளர்

இந்த பேட்டியில் செய்தியாளர் ஒருவர் நீங்கள் ஆன்மீகத்தை வைத்து அரசியல் செய்கிறீர்கள். மக்கள் பிரச்னையை பேசுவது இல்லை என்று திமுகவினர் குற்றச்சாட்டு வைக்கிறார்களே என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த எச். ராஜா.. ஆன்மீகம் இல்லாத மனிதன் யார்? ஹான் சொல்லுங்கள்.. ஆன்மிகம் இல்லாத மனிதன் யார் என்று கேட்டார். செய்தியாளர்களை பார்த்து கேள்வி கேட்கும் விதமாக எச். ராஜா இந்த கேள்வியை முன் வைத்தார்.

பெரியார்

பெரியார்

இதையடுத்து அங்கு இருந்த செய்தியாளர் ஒருவர் கொஞ்சமும் யோசிக்காமல் பதில் அளித்தார். ஆன்மிகம் இல்லாமல் இருந்தவர் பெரியார் என்று கூறினார். இந்த பதிலை எச். ராஜா கொஞ்சமும் எதிர்பார்க்கவில்லை. பெரியார் பெயரை கேட்டதும் அவர் சட்டென முகம் மாறினார். என்ன சொல்வது என்று ஒரு நொடி யோசித்தார். பின்னர் சிரித்துக்கொண்டே.. நீங்கள் உண்மையான விஷயங்களை, வரலாற்றை புறக்கணித்து பேசுகிறீர்கள் என்று சிரித்துக்கொண்டே பதில் அளித்துவிட்டு சென்றார்.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+