Get Updates
Get notified of breaking news, exclusive insights, and must-see stories!

“எச்.ராஜாவுக்கு ஹெல்ப் பண்ணது நாங்கள்தான்.. இந்த விஷயத்துல அரசியல் செய்யாதீங்க”- தமிழிசை சௌந்தரராஜன்

Subscribe to Oneindia Tamil

சென்னை: தனியார் செய்தி ஊடக தொலைக்காட்சி நேர்காணல் போது, பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா திடீரென உடல்நலம் பாதிக்கப்பட்டார். அந்த நேரத்தில், அவருக்கு உதவியது நாங்கள்தான் என்றும், திமுகவினர் இது குறித்து அரசியல் செய்ய வேண்டாம் என்றும், பாஜக முன்னாள் மாநில தலைவர் தமிழிசை சௌந்தரராஜன் கூறியிருக்கிறார்.

எச்.ராஜா திடீரென உடல் நலம் பாதிக்கப்பட்டபோது, திமுக டாக்டர் ஹிபிசுல்லாஹ் முதலுதவி செய்து, உயிரை காப்பாற்றியதாக, திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறியிருக்கிறார். இது தொடர்பாக x தளத்தில் அவர் போட்டிருக்கும் பதிவு பரவலாக ஷேராகி வருகிறது. இந்நிலையில், இதற்கு தமிழிசை சௌந்தரராஜன் மறுப்பு தெரிவித்திருக்கிறார்.

H Raja Health Update H Raja Tamilisai Soundararajan BJP

என்ன நடந்தது?

தமிழிசை சௌந்தரராஜன், தனது x பக்கத்தில் இது குறித்து பதிவிட்டிருப்பதாவது, "எச்.ராஜா உடல் நலம் தேறிவருகிறார் என்ற மருத்துவ அறிக்கை எனக்கு ஆறுதலை தருகிறது. ஆனால், அதே நேரத்தில் சமூக வலைதளங்களில் உலா வரும் சில செய்திகள் வியப்பையும் வருத்தத்தையும் அளிக்கிறது. அவர் கலந்து கொண்ட விவாதத்தில் அடுத்த அமர்வு என்னுடையது என்ற வகையில், நான் அங்கிருந்தேன். எச்.ராஜா கலந்து கொண்ட விவாதம் முடிந்தவுடன் அவர் சற்று சோர்வாக காணப்பட்டார்.

நாலப்புறமும் உதவி

அவரை நெறியாளர் உட்பட பல சூழ்ந்து கொண்டார்கள். ஏதோ பிரச்சனை என்று தெரிந்து கொண்டு மேடையை நோக்கி உடனே ஓடினேன். பல்சை பார்த்தேன் சற்று கவலை அடிக்க கூடியதாக இருந்தது. உடனே தலைக்கு ரத்த ஓட்டத்தை அதிகரிக்க கூடிய முதலுதவியை செய்ய ஆரம்பித்து விட்டு, அவரை ஆசுவாசப்படுத்தினேன். பலர் உதவினார்கள். சில பேர் காற்று வீசினார்கள், சில பேர் சர்க்கரை எடுத்துக் கொண்டு ஓடி வந்தார்கள், சில பேர் தண்ணி கொண்டு வந்தார்கள். அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றி.

மருத்துவமனை நோக்கி

சர்க்கரை குறைந்திருக்குமோ என்று நினைத்து, சில பேர் அவருக்கு சர்க்கரை கொடுத்தார்கள். ஆனால், நிலைமை அதைவிட தீவிரம் என்பதை உணர்ந்து கொண்டேன். என் உடன் நம் செய்தி தொடர்பாளர் தம்பி பிரசாத் வந்திருந்தார். உடனே வீல் சேர் கொண்டு வரச் சொல்லி, அவரோடு அனுப்பிவிட்டு அடுத்த அமர்விற்குப் பின் அவசர அவசரமாக, அவர் அனுமதிக்கப்பட்ட பாலாஜி மருத்துவமனை நோக்கி சென்றேன்.

பாஜகவினரின் உதவி

அப்பொழுது அங்கே ஸ்கேன் எடுக்கப்பட்டுக் கொண்டிருந்த இடத்திற்கு சென்று, ஸ்கேன் பதிவை பார்த்தேன். கவலை அளிக்க கூடிய சில பிரச்சனைகள் இருந்ததனால் அங்கு உள்ள மருத்துவர்களிடம் கலந்தாலோசித்து, சில மருத்துவ சிகிச்சையை மேற்கொள்வதற்கு விவாதித்து முடிவெடுத்தோம். அப்பொழுது அவர் குடும்ப உறுப்பினரை தொடர்பு கொண்டேன். குடும்ப உறுப்பினரின் தேர்வு, அப்போலோ மருத்துவமனையாக இருந்தது. அவசரமாக, அவசர சிகிச்சைக்கு மாற்ற இருந்தவரை மருத்துவ உதவியோடு.. ஆம்புலன்ஸ் வரவழைத்து அவரை அப்பல்லோ மருத்துவமனைக்கு அனுப்பினோம். அத்தனை வசதிகளும் செய்து தம்பி எஎன்எஸ் பிரசாத்.

அறிகுறி என்ன?

ஆம்புலன்ஸிலும் நான் பின்னால் சென்று காரிலும் சென்றோம். செல்லும் பொழுது அப்பல்லோ மருத்துவமனையில் சிகிச்சைக்கு தயாராக இருக்க வேண்டிய அத்தனை ஏற்பாடும் செய்து கொண்டே தான் சென்றோம். அதனால் அங்கு அவர் சென்ற உடனே சிகிச்சை அளிக்க உதவியாக இருந்தது. மருத்துவர் என்ற முறையில் அங்கே உள்ள மருத்துவர்கள் என்னென்ன அறிகுறிகள் இருந்தது என்று கேட்டார்கள். ஆரம்ப அறிகுறிகளை நான் சொன்னது அவர்கள் சிகிச்சை அளிப்பதற்கு பேர் உதவியாக இருந்தது.

நலம் விசாரித்த தலைவர்கள்

அதற்காக நான் ஆண்டவனுக்கு நன்றி தெரிவித்துக் கொண்டேன். பின்பு அப்பல்லோவில் சிகிச்சை ஆரம்பிக்கப்பட்டது. செய்தி அறிந்த உடனே கட்சியின் மாநில தலைவர் நயினார் நாகேந்திரன், கேசவ விநாயகம், அரவிந்த் மேனன் உட்பட எல்லோரும் வந்து அக்கறையோடு விசாரித்து உடன் இருந்தார்கள். சுதாகர் ரெட்டி தொலைபேசியில் விசாரித்தார். ஆனால், அது அவர்கள் பதிவிடவில்லை.

பின்பும் சிகிச்சை அளிப்பதை தொடர்ந்து, நான் அங்கே வரவேற்புரையிலேயே அமர்ந்து காத்திருந்து, அவர் ஓரளவிற்கு தேறிவருகிறார் வருகிறார் என்று தெரிந்த பின்பு தான் வீட்டிற்க்கே வந்தேன். அவர் விரைவில் குணமடைய வேண்டும் என்று இறைவனை பிரார்த்தித்துக் கொண்டேன்.

"திமுகவின் அரசியல்"

ஸ்டோக் வந்தால் முதலில் செய்யும் முதல் உதவிதான் மிக மிக முக்கியம். அதற்கு நம்மால் பங்கெடுக்க முடிந்தது என்ற வகையில் இறைவனுக்கு எனது நன்றியை தெரிவித்தேன். இது மருத்துவ உதவி என்பதனாலும், அண்ணன் ராஜா அவர்களோடு நெடுநாள் கட்சியில் ஒரு சகோதரியாக பழகிய வகையிலும் இதை பதிவிட வேண்டாம் என்று நினைத்து இருந்தேன்.

முதல் உதவி செய்யும் பொழுது பலர் உடன் இருந்தார்கள். அவர்களுக்கு நன்றி தெரிவிக்கின்ற அதே நேரத்தில், சமூக வலைதளங்களில் சிலர் தாங்கள்தான் அவரது சிகிச்சைக்கு காரணம் என்று பதிவிடுவது மட்டுமல்லாமல், உண்மைக்கு புறம்பாக சில கருத்துக்களை, சிலர் குறிப்பாக திமுகவைச் சார்ந்தவர்கள் பதிவிடும் பொழுது மன வேதனை அடைகிறேன். அதனாலேயே இதை பதிவிடுகிறேன்.

"மதத்தை புகுத்துகிறார்கள்"

தயவு செய்து அரசியல் எப்படி வேண்டுமானாலும் இருக்கலாம், கொள்கை வேறுபாடுகள் இருக்கலாம், ஒருவரின் உடல் நிலையை வைத்து அரசியல் செய்ய வேண்டாம். என்று மிக மிக தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன். அதுவும் மனித நேயத்தோடு நடந்து கொள்ள வேண்டிய இந்த நிகழ்வில் திமுகவை சார்ந்தவர்கள், மதத்தை புகுத்தி பதிவிடுகிறார்கள் என்பது அதைவிட மிகுந்த வேதனை. அண்ணன் ராஜா அவர்கள் விரைவில் குணமடைந்து எப்பொழுதும் போல அவரது சுறுசுறுப்பான அரசியலை காண காத்திருக்கிறேன். இறைவனை பிரார்த்திக்கிறேன்" என பதிவிட்டிருக்கிறார்.

More From
Prev
Next
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+