திருமா நிஜமாகவே இப்படியா பேசினார்.. ஆபத்தா, அருவெறுப்பா இருக்குன்னு எச். ராஜா சொல்றாரே!
Recommended Video
சென்னை: "இந்த பேச்சும், சரக்கு மிடுக்கு பேச்சும் அருவெறுப்பாகவும் ஆபத்தாகவும் உள்ளன" என்று திருமாவளவனை எச்.ராஜா விமர்சித்து உள்ளார்.
சிதம்பரம் தொகுதியில் வெற்றி பெற்று எம்பியாக டெல்லி சென்றிருப்பவர் திருமாவளவன். அவர் வன்முறை தூண்டும் வகையில் வீடியோவில் பேசியுள்ளதாக சில நாட்களாக செய்திகள் பரவி வருகின்றன.

அந்த வீடியோவில் "டெல்லியில் இருந்து கொண்டே தென் மாவட்டங்களில் தீப்பிடிக்க வைக்க முடியும், சட்டம் ஒழுங்கை சீர் குலைக்க முடியும், வன்முறையை தூண்ட முடியும் ரயில்கள் ஓடாது, பேருந்துகள் ஓடாது விமானங்கள் ஓடாது. என்னால் இதையெல்லாம் தென் மாவட்டங்களில் நடத்திக் காட்ட முடியும்" என்று உணர்வு பூர்வமாக திருமாவளவன் பேசியுள்ளதாக சோஷியல் மீடியாவில் செய்திகளும் பரவின.
இந்த வீடியோ குறித்தும் பல்வேறு கருத்துக்கள், சர்ச்சைகள் எழுந்து வருகின்றன. பொதுமேடையில் இப்படி வன்முறையை தூண்டும் வகையில் திருமாவளவன் பேசலாமா என்று கேள்வி எழுப்பப்பட்டு வருகிறது. இதற்கு எச்.ராஜாவும் தனது கருத்தை சொல்லி உள்ளார்.
இந்த பேச்சும், சரக்கு மிடுக்கு பேச்சும் அருவெறுப்பாகவும் ஆபத்தாகவும் உள்ளன. https://t.co/C43bEk8Tar
— H Raja (@HRajaBJP) July 20, 2019
தனது "சரக்கு மிடுக்கு" ஸ்பெஷல் வார்த்தைகளை வைத்தே திருமாவளவனுக்கு கண்டனம் சொல்லி உள்ளார். அதில், "இந்த பேச்சும், சரக்கு மிடுக்கு பேச்சும் அருவெறுப்பாகவும் ஆபத்தாகவும் உள்ளன" என்று தனது ட்வீட்டில் பதிவிட்டுள்ளார்.
இந்த ட்வீட்டுக்கு கீழே "திருமாவளவன் எப்போது இதை பேசினார், அதற்கான ஆதாரத்தை பதிவிட வேண்டும், வீடியோ எங்கே" என்றெல்லாம் எச்.ராஜாவை கேள்வி கேட்டு வருகின்றனர்.
-
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி -
பசிக்கு இரண்டு சமோசா.. கல்வி கடன்.. ஐஐடி-யில் தோற்றவர் துபாயில் சரித்திரம் படைத்த இந்திய இளைஞன் -
சிவகுமார் போட்ட மாஸ்டர் ஸ்கெட்ச்.. ராகுலுக்கு நேரமில்லை? டெல்லியில் மிஸ்டர் விஜய்னு கூப்பிட்டது யாரு -
GH-ல் கடைநிலை ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுத்த ரமேஷுக்கு அர்ச்சகர்கள் மீது ஆக்ஷன் எடுக்க தாமதம் ஏன்? -
கோயம்புத்தூர்-க்கு ஓடிவரும் ராகுல் ப்ரீத் சிங்.. ரேஸ் கோர்ஸ் சாலையில் புது ஆரம்பம்! -
பூந்தமல்லி டூ வடபழனி இனி 20 நிமிடங்களில்.. ஆளில்லா மெட்ரோ ரயில் சேவைக்கு கிடைத்த பச்சை சிக்னல்












Click it and Unblock the Notifications