எஸ்.வி.சேகர் வீட்டில் கல்லெறிந்த மானஸ்தர்கள் எங்கே.. திமுக தனித்து போட்டியா.. எச்.ராஜா ட்வீட்

Subscribe to Oneindia Tamil

சென்னை: எச்.ராஜா ட்விட்டருக்குள் நுழைந்தாலே ஆவேசம் கொப்புளிக்கிறது.. சரமாரியாக அடுத்தடுத்த ட்வீட்களை போட்டு திமுக, தமிழக போலீசார், முஸ்லீம் வன்முறையாளர்கள் போன்றோருக்கு எதிரான கருத்துக்களை பதிவிட்டு கேள்வி எழுப்பியபடியே உள்ளார்!

டெல்லியில் கலவரம் வெடித்துள்ளது.. அந்த கலவரத்தை அடக்க டெல்லி மாநில போலீசாரும் மத்திய அரசும் மிக மிக தீவிரமான முயற்சியில் ஈடுபட்டு வருகிறார்கள்.

இன்னொரு பக்கம், ஒரு சில அரசியல்வாதிகள் கலவரத்தை தூண்டும் வகையில் செயல்படுவதாக குற்றச்சாட்டு எழுந்துள்ளது.. இந்நிலையில் டெல்லி கலவரக்காரர்களால் பலியான ரத்தன்லால் என்ற தலைமை காவலர் குடும்ப போட்டோவை எடுத்து தனது டுவிட்டரில் பதிவு செய்துள்ளார் பாஜக தேசிய செயலாளர் எச்.ராஜா.

கருத்து

அத்துடன் கூடவே ஒரு சர்ச்சைக்குரிய ஒரு கருத்தையும் பதிவு செய்துள்ளார். "முஸ்லீம் வன்முறையாளர்களால் இன்று தலைமைக் காவலர் ரத்தன் லாலின் குடும்பம் அனாதையாக்கப்பட்டுள்ளது. இதை கண்டிக்காத எவரும் இந்நாட்டின் குடிமக்களாக இருக்கத் தகுதியற்றவர்கள்". இந்த கருத்தை பார்த்து ட்விட்டர்வாசிகள் கொந்தளித்து போய் உள்ளனர்.

ரத்தன் லால்

"ஆம்...கண்டிக்க வேண்டும் காவலர் ரத்தன் லாலின் உடம்பில் இருந்த குண்டுகள்டெல்லி காவல் துறைக்கு சொந்தமானது என போஸ்ட்மார்ட்டம் ரிப்போர்ட்டில் வந்துள்ளது.டெல்லி காவல் துறையும் அமித்ஷாவும் இதற்கு பதில் சொல்ல வேண்டும்" என்று திருப்பி பதிலடி தந்துள்ளார் ஒருவர். இதையடுத்து எச்.ராஜா இன்னொரு ட்வீட் போட்டுள்ளார்.. திடீரென திமுகவை இழுத்து கொண்டு வந்து வைத்து முடிச்சு போட்டுள்ளார்..

அறிவாலயம்

"நான் ரொம்ப நாளைக்கு முன்பே தமிழக ஊடகங்கள் அறிவாலயத்தின் கட்டளைப்படியே நடந்து கொள்கின்றனர் என்று கூறியதை நினைவு கூறுகிறேன். அதுமட்டுமல்ல அன்று எஸ்.வி.சேகர் வீட்டில் கல்லெறிந்து கலவரச் செயலில் ஈடுபட்டவர்கள் இன்று எங்கே. அந்த மானஸ்தர்களின் பெயர் விரைவில்" என்று ஒரு பதிவு உள்ளது.

எஸ்வி சேகர்

அதேபோல, "தென்னைமரத்தில தேள் கொட்டினா பணை மரத்தில் நெரிகட்டுதே. இங்கு R(oad) S(ide) பாரதி இவங்கள ரெட் லைட் ஏரியானு சொன்னதுக்கு எந்த எதிர்ப்பையும் காணும். ஆனால் இவர்கள் ஒரு ரீட்வீட்டுக்கு எஸ்.வீ.சேகர் வீட்டில் கல்லெறிந்து கலவரம் செய்ததை மறக்க முடியுமா?" என்று பதிவிட்டார். பெரும்பாலான நெட்டிசன்கள் இதற்கு கருத்து சொல்லவில்லை.. மாறாக, பணை மரம் ஸ்பெல்லிங் தப்பாக உள்ளது, பனை மரம் என்று வரவேண்டும் என்று திருத்தம் செய்து வருகின்றனர்.

பிரசாந்த் கிஷோர்

பிரசாந்த் கிஷோர்

இறுதியாக, முக ஸ்டாலினுக்கு ஒத்த வரியில் ஒரு ட்வீட் போட்டுள்ளார்.. "வருகிற 2012 சட்டமன்றத் தேர்தலில் திமுக கூட்டணி அமைக்காமல் தனித்து போட்டியிட வேண்டும் என பிரஷாந்த் கிஷோர் ஆலோசனை தந்துள்ளதாக வந்த செய்தியை தன்னுடைய ட்விட்டரில் டேக் செய்துள்ள எச். ராஜா, "யோசனை நல்லாதான் இருக்கு" என்று ஒரே வரியில் திமுகவின் பிளானை டேமேஜ் செய்யும்படி ட்வீட் செய்துள்ளார். ஆக மொத்தம்.. எச்.ராஜா ட்விட்டர் பக்கமே அனல் கொதித்து காணப்படுகிறது.

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+