"சரக்கு மிடுக்கு".. சாதாரண நபரா.. தீ பிடிக்க வைப்பேன்னு சொன்னவராச்சே.. திருமாவை சாடும் எச். ராஜா

திருமாவளவனை விமர்சித்து எச்.ராஜா ட்வீட் பதிவிட்டுள்ளார்

Subscribe to Oneindia Tamil

சென்னை: "இவர் என்ன சாதாரண நபரா? சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர். டில்லியில் இருந்து கொண்டு தென் மாவட்டங்களை தீ பிடிக்க வைப்பேன் என்று பேசிய மாவீரர். எல்லாம் தமிழகத்தின் தலைவிதி" என்று பாஜக மூத்த தலைவர் எச்.ராஜா, திருமாவளவனை மறைமுகமாக சாடி ட்விட்டரில் பதிவு போட்டுள்ளார்!

குடியுரிமை திருத்தச் சட்டத்தைத் திரும்பப் பெற வலியுறுத்தி விசிக சார்பில் நேற்றுமுன்தினம் "தேசம் காப்போம்" பேரணி நடந்தது.. திருமாவளவன் இந்த மாநாட்டில் பேசினார்.

அப்போது நடிகர் ரஜினிகாந்த்தை நேரடியாகவே சீறினார்.. அவரது அரசியல் வருகையை மறைமுகமாக விமர்சித்திருந்தாலும், விசிகவின் தனித்துவத்தை பகிரங்கமாகவே வெளிப்படுத்தினார்.

திருமாவளவன்

திருமாவளவன்

"கூலிக்கு மாரடிக்கும் கும்பலாகவும், கோஷம் போடும் கும்பலாகவும் விசிகவினர் இருப்பார்கள் என்று கனவு காண வேண்டாம். ஒருநாள் கோட்டையில் கொடியேற்றுவோம், முதல்வரைத் தீர்மானிக்கும் சக்தியும், இந்திய அரசியலைத் தீர்மானிக்கும் சக்தியும் விசிகவுக்கு இருக்கிறது.. 70 வயது வரை அரிதாரம் பூசி, எல்லாத்தையும் அனுபவித்து அதிகாரத்தில் அமர நினைப்பவர்கள் இருக்கும்போது, 30 ஆண்டுக்காலம் மக்களுக்காக உழைத்த விசிக ஏன் ஆட்சிக்கு வரக்கூடாது" என்று திருமாவளவன் இப்படி பேசிய 2 நாள் ஆகியும் இன்னும் அதன் அதிர்வலை குறையவே இல்லை.

எச்.ராஜா

எச்.ராஜா

திருமாவளவன் என்றாலே உடனடியாக தன் பக்க கருத்தினை, எதிர்ப்பினை பதிவு செய்பவர் எச்.ராஜா.. இந்த முறை ரஜினியை திருமா விமர்சித்தே விட்டார்.. அதனால் உடனடியாக வந்து இதற்கு ஒரு ட்வீட் போட்டு கருத்து சொல்லி உள்ளார் எச்.ராஜா.. தன்னுடைய ட்வீட்டில், "இவர் என்ன சாதாரண நபரா? சரக்கு மிடுக்கு பேச்சுக்கு சொந்தக்காரர். டில்லியில் இருந்து கொண்டு தென் மாவட்டங்களை தீ பிடிக்க வைப்பேன் என்று பேசிய மாவீரர். எல்லாம் தமிழகத்தின் தலைவிதி" என்று பதிவிட்டுள்ளார்.

ரஜினிகாந்த்

ரஜினிகாந்த்

ஆர்எஸ்எஸ்க்கு எதிர்ப்பான விஷயம் முதல், ஆர்எஸ் பாரதிக்கு கண்டனம் வரை எத்தனையோ விஷயங்களை திருமா அன்றைய மாநாட்டில் பேசியிருந்தாலும், எச்.ராஜா இந்த 70 வயது விவகாரத்தை மட்டும் கொண்டு வந்து ட்வீட் போட்டுள்ளார். இந்த சமயத்தில் இன்னொரு ட்வீட்டையும் போட்டுள்ளார் எச்.ராஜா.

வெட்கக்கேடு

"சிறுபான்மையினர் என்றால், நாட்டிற்கு எதிராக செயல்பட்டால் வண்ணாரப்பேட்டை உள்பட தமிழகம் முழுவதும் அனுமதி இல்லாமல் போராட்டம் நடத்தலாம். ஆனால் ‌சிஏஏ விற்கு ஆதரவாக போராட்டம் என்றால் காவல்துறை கைது செய்து FIR போடும். தமிழகத்தில் இந்துக்கள் இரண்டாம் தர குடிமக்களா? வெட்கக்கேடு" என்று பதிவிட்டுள்ளார்.

கமெண்ட்கள்

தமிழகத்தின் தலைவிதி என்று திருமாவுக்கு ஒரு ட்வீட்.. இந்துக்கள் இரண்டாம் குடிமக்களா, வெட்கக்கேடு என்று இன்னொரு ட்வீட்களை போட்டு தெறிக்க விட்டுள்ளார் எச்.ராஜா.. இந்த இரு ட்வீட்களுக்கும் வழக்கம்போல் ஆதரவும், எதிர்ப்பும் என கமெண்ட்கள் குவிந்து எச்.ராஜா ட்விட்டர் பக்கமே ரொம்ப பிஸியாக காணப்படுகிறது!

Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+