கட்சி வித்தியாசம் பார்க்க மாட்டாரு.. உழைக்கும் வர்க்கத்தை அவருக்கு ரொம்ப பிடிக்கும்- மக்கள் கண்ணீர்
சென்னை: கட்சி வித்தியாசம் பார்க்காமல் மக்களுக்கு உழைத்தவர் வசந்தகுமார் என்றும் எந்த பந்தாவுமே இல்லாமல் எங்களிடத்தில் பழகுவார் என்றும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
Recommended Video
கன்னியாகுமரி தொகுதி எம்பியாக இருந்தவர் எச் வசந்தகுமார். கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்ட இவர் கடந்த 10-ஆம் தேதி சென்னை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு கொரோனாவால் நிமோனியா காய்ச்சல் ஏற்பட்டது.
இந்த நிலையில் அவருக்கு நேற்றைய தினம் கொரோனா இல்லை என முடிவுகள் வந்தது. எனினும் அவரது உடல்நிலை மோசமடைந்தது.

இரங்கல் செய்தி
இதையடுத்து அவர் நேற்றைய தினம் உயிரிழந்தார். குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த், பிரதமர் நரேந்திர மோடி, காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி, பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் இரங்கல் தெரிவித்தனர். இந்த நிலையில் வசந்தகுமாரின் உடல் சென்னை தி நகரில் உள்ள அவரது இல்லத்தில் வைக்கப்பட்டுள்ளது.

வசந்த் அண்ட் கோ
2 மணி நேரம் இல்லத்தில் வைக்கப்பட்ட அவரது உடலுக்கு சமூக இடைவெளியுடன் திரைப் பிரமுகர்கள், அரசியல் தலைவர்கள், பொது மக்கள் என அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். வசந்த் அண்ட கோ நிறுவன ஊழியர்கள், அவர்தம் குடும்பத்தினர் என அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.

அஞ்சலி
அவரது உடலுக்கு தி நகர் பகுதியில் வசித்து வரும் மக்கள் கண்ணீர் அஞ்சலி செலுத்தி வருகிறார்கள். இதுகுறித்து பொதுமக்கள் கூறுகையில் கட்சி வித்தியாசம் இல்லாமல் அனைவருடனும் பழகுவார். யார் உதவி கேட்டாலும் செய்வார். கடையில் பணியாற்றும் தொழிலாளர்களிடம் முதலாளி என்ற வித்தியாசம் இல்லாமல் பழகுவார்.

எளிமை
உழைக்கிற வர்க்கத்தினரை கண்டால் அவருக்கு மிகவும் பிடிக்கும். யாராக இருந்தாலும் எளிமையாக வந்து பேசும் குணம் கொண்டவர் என கண்ணீர் மல்க தெரிவித்தனர். அவரது உடலுக்கு ஏராளமானோர் வந்து அஞ்சலி செலுத்தி வருகிறார்கள்.
-
வாட்டி எடுத்த வெயில்! வேலூரில் அதிகபட்சமாக 106°F பதிவு! 15 இடங்களில் செஞ்சுரி! -
இர்ஃபானின் ரூ. 3650 பிரியாணியை வறுத்தெடுத்த யூடியூப்பர்.. ப்ளூ சட்டை மாறனுடன் ஒப்பிட்டு கலாய் -
கங்கணம் கட்டி சதி பண்ணிருக்கீங்க.. சேகர் பாபுவை போனில் வறுத்து எடுத்த ஸ்டாலின்.. ஷாக் தகவல்! -
4 தொகுதி இடைத்தேர்தலை புறக்கணிக்க திமுக முடிவு? ஸ்டாலினின் ராஜதந்திரம்! -
Indoor Plants: வீட்டின் காற்றைச் சுத்திகரித்து ஆக்ஸிஜன் அளவை அதிகரிக்கும் இன்டோர் செடிகள்! -
திருச்சி கிழக்கு இடைத்தேர்தல்.. தவெக வேட்பாளராக சிரஞ்சீவி? மேடையில் முதல்வர் விஜய் தந்த செம ஹிண்ட் -
தேசிய அளவில் பலவீனமடையும் பாஜக எதிர்ப்பு.. காங்கிரஸ் செயலால் திட்டத்தை மாற்றும் திமுக! -
“தவெகவுக்கு ஓட்டு போடாத தென்காசி மக்களும் பாதிக்கப்படுகிறோம்”.. நள்ளிரவில் எழுந்த திடீர் போராட்டம்! -
"பச்சை துரோகம்.. வாக்கு அறுவடை முடிந்ததும் ரிசர்வ் வங்கியை காரணம் காட்டுவதா?" தங்கம் தென்னரசு தாக்கு -
ஐடி ஊழியர்களை விட "இவர்கள்" காட்டில்தான் பணமழை! அடுத்த 5 ஆண்டுகளில் இந்தியாவில் ஏற்பட போகும் மாற்றம் -
நன்றி மறக்காத விஜய்.. தவெகவின் முதல் ராஜ்யசபா எம்பி யார்? ரேசில் முன்னணியில் ’லெஃப்ட் - ரைட்’ ஹேண்ட் -
விவசாயக் கடன் தள்ளுபடி.. பொய் சொல்லி ஏமாற்ற மாட்டேன்! விவசாயிகளே கவலைப்படாதீங்க.. விஜய் உத்தரவாதம்












Click it and Unblock the Notifications