பசங்களா லீவு முடிஞ்சு ஸ்கூலுக்கு போகும் போது இப்படியா நடக்கணும்.. அரையாண்டு தேர்வுக்கு படிங்க!
சென்னை: நெல்லையில் கனமழை பெய்ததன் காரணமாக அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய தேதி அறிவிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் கன்னியாகுமரி, தூத்துக்குடி, நெல்லை உள்ளிட்ட மாவட்டங்கள் இதுவரை சந்தித்திடாத கனமழையை கடந்த வாரம் எதிர்கொண்டது. இதற்கு முன்னதாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் ஆகிய மாவட்டங்களிலும் நல்ல மழை பெய்தது.

மிக்ஜாம் புயலால் வடசென்னை, புறநகர் பகுதிகள், சென்னையின் இதய பகுதிகள் என எதையும் விட்டுவைக்காதபடி வெள்ளம் சூழ்ந்தது. இந்த பாதிப்புகள் மெல்ல மெல்ல இயல்பு நிலைக்கு திரும்பிய நிலையில் தென் மாவட்டங்களில் பெய்த மழை கடும் சேதத்தை கொடுத்துள்ளது.
இன்று வரை பல பகுதிகளில் வெள்ளம் வடியாமல் மக்கள் கண்ணீருடன் இருக்கிறார்கள் என்பது நிதர்சனம். இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் பெய்த மழை, தாமிரபரணியில் வெள்ளப்பெருக்கு உள்ளிட்டவற்றால் மழை நீர் கடல் போல் ஊருக்குள் ஆர்ப்பரித்து வந்துவிட்டது. இதனால் பெரிய அளவில் பாதிப்பு ஏற்பட்டது.
இந்த நிலையில் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் அரையாண்டு தேர்வுகளை நடத்த முடியவில்லை. அரையாண்டு தேர்வு நடத்துவதற்குள் அரையாண்டு தேர்வு விடுமுறை அறிவிக்கப்பட்டுவிட்டது. இதனால் அரையாண்டு தேர்வுக்கான தேதி பின்னர் அறிவிக்கப்படும் என சொல்லப்பட்டது.
இந்த நிலையில் நெல்லை மாவட்டத்தில் ஒத்தி வைக்கப்பட்ட தேர்வுகளுக்கான தேதியை மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் அறிவித்துள்ளார். அதன்படி 6 ஆம் தேதி முதல் 10ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4ஆம் தேதி முதல் 10 ஆம் தேதி வரையிலும், 11 மற்றும் 12 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 4 ஆம் தேதி முதல் 11 ஆம் தேதி வரையும் அரையாண்டு தேர்வு நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
-
வேலூர் டூ கன்னியாகுமரி.. 19 மாவட்டங்களில் கொட்டி தீர்க்கப்போகும் மழை! அடுத்த 2 மணி நேரம் உஷார்! -
வேலூர் டூ கன்னியாகுமரி.. 9 மாவட்டங்களுக்கு ஆரஞ்சு அலர்ட்! கொட்டப்போகும் மழை.. உஷார்! -
கத்திரி வெயில் முடிஞ்சுபோச்சு.. சென்னை உட்பட 5 மாவட்டங்களில் இன்று காலையிலேயே மழைக்கு வாய்ப்பு! -
வெயிலுக்கு இன்று ‘பிரேக்’.. சென்னை உட்பட பல மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு.. வானிலை மையம் அப்டேட்! -
யூ-டர்ன் அடிக்கும் விஜய்.. டெல்லி-க்கு மீண்டும் பயணம்.. சொன்னது யார் தெரியுமா? -
பாஜகவில் இருந்து விலகி அண்ணாமலை தனிக்கட்சி தொடங்குகிறார்? ரஜினி ஆதரவுடன் திருச்சி கிழக்கில் போட்டி? -
ஆபாசம்.. ஆபாசம்.. யூடியூபர்கள் கிருஷ் ஐஷ்வர்யா மீது கோவை சைபர் க்ரைம் போலீஸில் புகார் -
சென்னையில் நாளை மாலை ‘GenZ DMK’ பிரம்மாண்ட நிகழ்ச்சி.. களமிறங்கும் திமுக உணர்வுள்ள இளைஞர்கள்! -
ஆள் மட்டுமில்லை.. கட்சியையே தவெகவில் இணைக்கும் புகழேந்தி.. புஸ்ஸி - செங்கோட்டையனுடன் சந்திப்பு -
அதிமுகவில் அடுத்த விக்கெட்? சி.வி.சண்முகத்துக்கு இப்படியொரு லட்டு சான்ஸ்? போட்டு தாக்குதே தவெக -
விசில் அடித்து முன்னேறும் கர்நாடகா, ஆந்திரா.. இனி தமிழ்நாடு வேடிக்கை பார்க்கணும்! விஜய் போட்ட பிரேக் -
ரேஷன் கார்டுதாரர்களுக்கு ஹேப்பி நியூஸ்.. ஜூன் 2, 3ல் வீடு தேடி வரும் சர்ப்ரைஸ்.. கலெக்டர் அதிரடி












Click it and Unblock the Notifications