தமிழகத்தில் அரையாண்டு தேர்வுகள் மீண்டும் ஒத்தி வைப்பு.. முதல்வர் பரபரப்பு உத்தரவு
சென்னை: தமிழகத்தில் அனைத்து மாவட்டங்களிலும் நாளை தொடங்கவிருந்த அரையாண்டுத் தேர்வுகளை ஒத்தி வைக்க முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார்.
தமிழகத்தில் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளுக்கு டிசம்பர் மாதம் அரையாண்டு தேர்வு நடத்தப்பட்டு கிறிஸ்துமஸ், புத்தாண்டுடன் விடுமுறை அறிவிக்கப்படுவது வழக்கம். அந்த வகையில் இந்த ஆண்டு டிசம்பர் 7, மற்றும் 8 தேதிகளில் அரையாண்டு தேர்வுகள் தொடங்கவிருந்தது.

இந்த நிலையில் மிக்ஜாம் புயல் காரணமாக சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், செங்கல்பட்டு ஆகிய மாவட்டங்களில் டிசம்பர் 2, 3, 4 ஆகிய தேதிகளில் மிக கனமழை பெய்தது. சென்னை, திருவள்ளூர் மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் விடுக்கப்பட்டது.
இந்த நிலையில் டிசம்பர் 4 ஆம் தேதி புயலானது வடதமிழகத்தை ஒட்டி ஆந்திராவுக்கு செல்லவிருந்ததால் அன்றைய தினம் மேற்கண்ட 4 மாவட்ட பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதைத் தொடர்ந்து சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் பெரும்பாலான இடங்களில் வெள்ள நீர் 5 அடிக்கு மேல் தேங்கியுள்ளது.
இதனால் இன்று வரை சென்னை உள்ளிட்ட மாவட்டங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து டிசம்பர் 7, 8 ஆகிய தேதிகளில் தொடங்கவிருந்த அரையாண்டு தேர்வுகள் ஒத்தி வைக்கப்பட்டன. அதாவது டிசம்பர் 11 ஆம் தேதி தொடங்கும் என அறிவிக்கப்பட்டது.
ஆனால் இன்னும் பல இடங்களில் வெள்ளநீர் வடியவில்லை, மாணவர்களின் புத்தகங்கள், நோட்டுகள் வெள்ள நீரில் அடித்துச் செல்லப்பட்டுவிட்டன. இதனால் நாளை மாணவர்கள் தேர்வு எழுதுவதில் சிரமம் இருப்பதாக சொல்லப்பட்டது. இந்த நிலையில் அரையாண்டு தேர்வுகள் நடத்துவது குறித்து இன்றைய தினம் முடிவு செய்யப்பட்டது.
அதில் வரும் டிசம்பர் 13 ஆம் தேதி அரையாண்டு தேர்வுகள் நடத்த முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார். இரு நாட்களில் மாணவர்களுக்கு தேவையான புத்தகங்கள், சீருடை, நோட்டு புத்தகங்களை வழங்க உத்தரவிட்டுள்ளார். மேலும் சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு ஆகிய 4 மாவட்டங்களில் அரசு பள்ளிகளை தூய்மை செய்ய ரூ 1.90 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள. அரையாண்டு தேர்வுக்கான புதிய கால அட்டவணையை பள்ளிக் கல்வித் துறை வெளியிடவும் முதல்வர் உத்தரவிட்டுள்ளார்.
-
நீ பாவம் பண்ணியிருக்க சேகர்பாபு... மேடையிலேயே நேருக்கு நேராக ஆ ராசா பேச்சு -
உள்ளே யாரு, அவனை வெளியே வர சொல்லு! வசமா பிடிபட்ட மனைவி.. தப்பிய கணவனை சுற்றி வளைத்த தஞ்சாவூர் போலீஸ் -
டாஸ்மாக் தனியார் மயம் ஆகிறதா? மிகப்பெரிய சீர்திருத்தம் வரப்போகிறது.. அமைச்சர் விக்னேஷ் தகவல் -
விஜய் அமைச்சரவை கூட்டத்தின் Exclusive Footage.. திமுக ஐடி விங் பதிவிட்ட வீடியோ! -
சென்னை பஸ் ஸ்டாண்ட் புரட்சி.. களமிறக்கப்படும் புதிய டெர்மினல்கள்.. 2000+ இ-பஸ்கள்.. அடியோடு மாறுது -
டிகே சிவக்குமாருக்கு முதல் அடி! பதவியேற்ற 2 நாளில் கர்நாடக சீனியர் அமைச்சர் ராமலிங்க ரெட்டி ராஜினாமா -
ஒரே கல்லில் 2 மாங்காய்.. விசிகவை வளைக்க திமுக போட்ட மாஸ்டர் பிளான்.. தமிழக அரசியலில் பெரும் பரபரப்பு -
இன்போசிஸ், ஹெச்சிஎல் செய்த வேலையை பாத்தீங்களா.. இந்திய ஐடி ஊழியர்கள் தான் கிங்மேக்கர்! -
இனி திமுக- அதிமுக போல் தான் பாஜகவையும் பார்ப்பேன்.. புதிய இயக்கத்தை தொடங்கியதுமே அண்ணாமலை அதிரடி -
கே.என்.நேரு மீது லஞ்ச ஒழிப்புத்துறை வழக்கு.. விஜய் அரசின் முதல் ஆக்சன்.. அடித்து ஆடும் அருண் ஐபிஎஸ் -
இர்ஃபானின் பிரியாணி பக்கெட்டை பிரித்ததுமே ஆடிப்போன கஸ்டமர்ஸ்.. 4 கிலோவுக்கு இவ்வளவுதானா ஆட்டுக்கறி? -
பாஜகவுக்கு ஷாக்.. முக்கிய நிர்வாகிகள் அடுத்தடுத்து விலகல்.. அண்ணாமலையுடன் பயணிக்கப்போவதாக அறிவிப்பு!












Click it and Unblock the Notifications