நோவ்.. தப்பா இருக்குன்னா.. "நாஜி" ஹிட்லர் ஸ்டைலில் கையை தூக்கிய விஜய்.. சைடு கேப் சர்ச்சை!
வேலூர்: ஆரவாரம், ஆர்ப்பாட்டம், கூட்டம் என்று வேலூர் அகரம்சேரியில் இன்று தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) நிர்வாகிகள் கூட்டம் தீவிரமாக நடந்து வருகிறது . 2026 தேர்தலுக்கு 'விசில்' அடித்து வேலையைத் தொடங்கிய விஜய், இன்று தன் கட்சி நிர்வாகிகளிடம் உறுதிமொழி வாங்கியபோதுதான் அந்த ஒரு சின்ன 'ட்விஸ்ட்' அரங்கேறியது.
என்ன பாஸ் அந்த சர்ச்சை?
வழக்கமாக உறுதிமொழி எடுக்கும்போது கையை நேராக நீட்டுவதுதான் மரபு. ஆனால், இன்று தலைவர் விஜய் கையை நீட்டிய ஸ்டைல், சமூக வலைதளங்களில் பெரிய விவாதத்தையே கிளப்பிவிட்டது. கையை ஒரு குறிப்பிட்ட கோணத்தில் சற்றே உயர்த்தி அவர் காட்டிய சைகை, பார்ப்பதற்கு ஹிட்லரின் 'நாஜி' சல்யூட் போல இருப்பதாக நெட்டிசன்கள் மீம்ஸ்களையும், வீடியோக்களையும் தட்டிவிட்டு வருகிறார்கள்.
"என்னங்க இது, புதுசா ஒரு பாலிடிக்ஸ் பண்ணலாம்னு வந்தா, இப்படி ஒரு சர்ச்சையில் சிக்கிட்டாரே நம்ம விஜய் அண்ணா!" என எக்ஸ் (ட்விட்டர்) தளத்தில் கமெண்ட்கள் பறக்கின்றன.

தவெக தரப்பு என்ன சொல்லுது?
இந்த விவகாரம் காட்டுத்தீயாய் பரவத் தொடங்கியதும், தவெக தம்பிகள் உடனே களத்தில் இறங்கி விளக்கம் கொடுத்து வருகின்றனர்.
"ஏங்க, ஸ்கூல்ல பிளெட்ஜ் எடுக்கும்போது கூட இப்படித்தான் கை வைப்போம். இதப்போய் ஹிட்லர், கிட்லர்னு குழப்பிக்கிட்டு இருக்கீங்க? இது வெறும் உறுதிமொழிக்கான போஸ் தான். நம்ம தளபதியின் வளர்ச்சியைப் பொறுக்காதவங்க கிளப்பி விடுற வதந்தி இது," என லோக்கல் நிர்வாகிகள் கொதிக்கிறார்கள்.
கடுமையான கட்டுப்பாடுகள் - ஆனா இந்த கண்ட்ரோல் மிஸ் ஆயிடுச்சே!
இன்றைய கூட்டத்திற்கு வேலூர் போலீஸ் போட்ட கண்டிஷன் கொஞ்ச நஞ்சமல்ல. வெறும் 4,900 பேருக்கு மட்டும்தான் அனுமதி, அதுவும் க்யூ-ஆர் கோடு இருந்தால்தான் உள்ளே வர முடியும் என செம ஸ்ட்ரிக்ட் ஆபீசராக இருந்தனர். வெயில் கொடுமையால் பந்தல், தண்ணீர் வசதி என எல்லாம் பக்காவாக செய்திருந்தாலும், இந்த 'ஹேண்ட் கெஸ்ச்சர்' (Hand Gesture) மேட்டர் மட்டும் கொஞ்சம் மிஸ் ஆகி சர்ச்சையாகிவிட்டது.
விஜய் பேச்சு
இன்று விஜய் உறுதி மொழி எடுக்கும் போது, யாரையும் நம்பி ஏமாற மாட்டோம்; எங்கள் ஓட்டு எங்கள் உரிமை என்று கூறினார்.
எங்கள் ஓட்டு எங்கள் உரிமை; எங்களை
யாரும் விலைக்கு வாங்க முடியாது;
எங்கள் ஓட்டு விசில் சின்னத்திற்கு தான்;
யாரையும் நம்பி ஏமாற மாட்டோம்;
எங்கள் வார்த்தையில் இருந்து மாற
மாட்டோம்; இது நிஜம், என்று உறுதிமொழி அவர் சொல்ல சொல்ல - அங்கிருந்த நிர்வாகிகள் அதை திருப்பி கூறினார்கள்.
இதை தொடர்ந்து பேசிய விஜய்.. நான் வீடு வீடாக வரப்போகிறேன்.. தவெக ஆட்சி அமைந்ததும் ஒவ்வொரு கிராமத்திற்கும் வந்து உங்களை சந்திக்கிறேன்.. என்னை நீங்கள் எதிர்த்தால் அது மக்களை எதிர்ப்பது போல.. என்னை அசிங்க அசிங்கமாக பேசினால் அது மக்களை அசிங்க அசிங்கமாக பேசுவது போல.. என்னையும் மக்களையும் பிரிக்க முடியாது.. உங்களால் எங்களை பிரிக்க முடியாது.. என்று வேலூர் மாவட்டம் கொல்லமங்களத்தில் நடைபெற்ற நிர்வாகிகள் சந்திப்பு கூட்டத்தில் தவெக தலைவர் விஜய் பேசி உள்ளார்.












Click it and Unblock the Notifications