மாறுது சரித்திரம்.. மத்திய பாஜக சாதனைகள்.. தமிழக கிராமங்களில் லிஸ்ட்டுடன் நுழையுது "சக்தி வந்தனம்"
சென்னை: கிராமங்களுக்குள் அதிரடியாக நுழைகிறது தமிழக பாஜக.. "கிராமங்கள் தோறும் இயக்கம்" என்ற திட்டத்தின் பல்வேறு அதிரடிகளையும் நாளை முதல் கையில் எடுக்க போகிறது.
எம்பி தேர்தல் நெருங்கி கொண்டிருக்கிறது.. இதையடுத்து, பாஜகவின் தேர்தல் வியூகம் அதிரடியாக ஆரம்பமாகி உள்ளது.. தமிழகத்திலும் பாஜகவின் களப்பணிகள் வேகம் எடுத்துள்ளன.
2 மாதங்களுக்கு முன்பு, தமிழக பாஜக தலைவர் அண்ணாமலையின் "என் மண் என் மக்கள்" 2வது கட்ட யாத்திரை துவங்கியபோது, ஒரு தகவல் கசிந்தது.

கிராமங்கள்தோறும் இயக்கம்: அதாவது, இந்த யாத்திரை, வெறுமனே, ஒரு நடைபயணமாக முடிந்துவிடாமல், பாதயாத்திரை சென்ற இடங்களிலெல்லாம் கிராமங்களிலேயே பாஜகவினர் தங்கி, மக்களை சந்தித்து, அவர்களின் குறைகளையும் கேட்டறிந்து, தீர்வு காண வேண்டும் என்று மேலிட தரப்பிலிருந்து உத்தரவிடப்பட்டிருந்ததாம்.
அதுமட்டுமல்ல, மத்திய அரசின் திட்டங்களையும், அந்த திட்டங்களினால் கிடைத்த பலன்களையும், கிராம மக்களிடம் சென்று பரப்ப வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டதாம். மக்களோடு மக்களாக, பாஜகவினர் கிராமங்களில் தங்கி, இத்தகைய பணிகளை மேற்கொள்ளும்போது, பாஜகவின் கிராஃப் வெகுவாக உயரும் என்றும் கணிக்கப்பட்டது. அதன்படியே, அண்ணாமலையின் யாத்திரைகளில் இந்த வியூகம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
வானதி சீனிவாசன்: அதுபோலவே, பாஜக மூத்த தலைவரும், தேசிய மகளிரணி தலைவருமான வானதி சீனிவாசனும், நாளை முதல் இதே வியூகத்தை செயல்படுத்த போவதாக தெரிகிறது. காரணம், கிராமங்கள்தோறும் மக்களை சென்று சந்திக்க வேண்டும் என்று மேலிட பாஜக உத்தரவிட்டுள்ளதாம்.
மிகப்பெரிய மக்கள் தொடர்பு சந்திப்பை ஏற்படுத்த கிராமங்களில் தங்கியும், மகளிர் குழுக்களை சந்தித்தும் பிரதமர் மோடி ஆட்சியில் செயல்படுத்தியுள்ள திட்டங்களை மக்களிடம் எடுத்து கூறுமாறும், தமிழக பாஜக நிர்வாகிகளுக்கு, தேசிய தலைமை உத்தரவிட்டுள்ளதாக தெரிகிறது. இதுகுறித்து, வானதி சீனிவாசன் செய்தியாளர்களிடம் சொன்னதாவது:
நாடு முழுவதும் 1 கோடி மகளிர் சுய உதவிக் குழுக்களை தொடர்பு கொண்டு, அவர்களிடம் கட்சியின் கொள்கைகள், அரசின் திட்டங்களை கொண்டு சேர்ப்பதற்காக மிகப்பெரிய தொடர்பு இயக்கம் பிப்ரவரி 1ம் தேதி முதல் தொடங்க இருக்கிறது.
கிராமத்துக்கு செல்வோம்: தமிழகத்திலும் மகளிர் சுய உதவிக் குழுக்களை கட்சி நிர்வாகிகள் தொடர்பு கொண்டு பிரதமரின் திட்டங்கள் குறித்து எடுத்து சொல்வார்கள். இதனைத் தொடர்ந்து, "கிராமத்துக்கு செல்வோம்" என்ற அடுத்த தொடர்பு இயக்கத்தையும் கட்சி அறிவித்திருக்கிறது. இதற்காக ஒவ்வொரு பகுதியிலும் உள்ள கிராமங்கள் கணக்கெடுக்கப்பட்டு, அங்கு மக்கள் தொடர்பு பிரச்சாரத்தை வரும் பிப்ரவரி மாதம் தொடங்குகிறோம்.
பிரதமர் மோடியின் ஆட்சி காலத்தில் பெண்கள், விவசாயிகள், இளைஞர்கள் என, அனைத்து தரப்பினரும் பயன்பெறும் வகையில் பல்வேறு திட்டங்கள் செயல்படுத்தப்பட்டுள்ளன. நாடு முழுதும், நாளை அதாவது பிப்ரவரி 1ம் தேதி முதல் 3வது வாரம் வரை, "சக்தி வந்தனம்" என்ற பெயரில், 1 கோடி மகளிர் சுய உதவி குழுக்கள் வாயிலாக, 10 கோடி பெண்களை, பாஜக மகளிரணியினர் தொடர்பு கொள்வார்கள்.
பெண் நிர்வாகிகள்: தமிழகத்தில் மகளிர் குழுக்களை சந்திக்க, ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், 25 நிர்வாகிகள் நியமிக்கப்பட்டுள்ளனர். அதில் பாஜக பெண் நிர்வாகிகள், சுய உதவி குழுவை சேர்ந்தவர்கள் உள்ளனர். அவர்கள், மகளிர் குழுக்களை சேர்ந்த பெண்களை சந்தித்து, பிரதமர் மோடி பெண்களுக்காக செயல்படுத்தியுள்ள திட்டங்களை பற்றி எடுத்து சொல்வார்கள். இதுதொடர்பாக எப்படி நடக்க வேண்டும் என, நிர்வாகிகளுக்கு ஏற்கனவே பயிற்சி தரப்பட்டுள்ளது.
அந்தவகையில், பிரதமர் மோடி, 2 கோடி பெண்களை லட்சாதிபதிகளாக்க இருப்பதாக அறிவித்துள்ளார். பெண்களுக்கு சுய வேலைவாய்ப்பு, முத்ரா கடன், செல்வமகள் திட்டம், போன்ற எண்ணற்ற திட்டங்களின் பயன்கள் கிடைக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
இலவச குடிநீர்: "கிராமங்கள் தோறும் இயக்கம்" திட்டத்தின் கீழ், ஒவ்வொரு நிர்வாகியும் 4 நாட்கள் தங்களுக்கு ஒதுக்கிய கிராமத்திற்கு செல்ல வேண்டும். ஒரு நாள் இரவு கிராமத்திலேயே தங்க வேண்டும். அங்குள்ள மக்களை சந்தித்து பிரதமரின் இலவச குடிநீர் இணைப்பு வழங்கும் திட்டம், 6,000 ரூபாய் விவசாய நிதியுதவி உள்ளிட்ட திட்டங்கள் வந்துள்ளனவா? என்று கேட்டறிந்து, அவைகள் கிடைக்க நடவடிக்கையும் எடுக்க வேண்டும்" என்று தெரிவித்துள்ளார்.
-
சிங்கம் களம் இறங்கிருச்சு.. சிங்காநல்லூரில் களம் காணும் அண்ணாமலை? அக்கா தமிழிசை எங்கே தெரியுமா? -
பாஜகவின் 27 வேட்பாளர்கள் இவர்கள்தானா? வெளியான உத்தேச பட்டியல்.. அண்ணாமலைக்கு சீட் இல்லை? -
நயினாரை விடவே கூடாது.. சாத்தூரில் வீழ்த்த ஸ்டாலின் ‘ஸ்கெட்ச்’.. இறங்கும் திமுகவின் ‘பெரிய தலை’ -
14 அமைச்சர்களிடம் நேருக்கு நேர் மோதல் இல்லை.. பாஜக, அமமுகவை கோர்த்துவிட்ட எடப்பாடி பழனிசாமி! -
சேப்டி கேம் ஆடுகிறாரா எடப்பாடி? தென் மண்டலத்தை பாஜகவிற்கு தாரை வார்த்ததில் உள் அர்த்தம் இருக்கிறதா? -
அண்ணாமலைக்கு சீட் கொடுக்க கூடாது.. எடப்பாடி எடுத்த முடிவு.. பாஜக தொகுதி பங்கீட்டில் என்ன நடந்தது? -
அரைக் கிணறை தாண்டாத அறிவாலயம்.. அதிவேகத்தில் அதிமுக! போட்ட ஸ்கெட்சை பக்காவாக முடித்த எடப்பாடி! -
பலே ஆளுங்க எடப்பாடி பழனிசாமி.. பாஜகவின் 27 தொகுதிகளில் இப்படி ஒரு ட்விஸ்டா! பாவம் ஜிகே வாசன்? -
குமரியில் காலியாகும் அதிமுகவின் அடித்தளம்.. 4 தொகுதிகளை கைப்பற்றிய பாஜக.. சோர்வடைந்த தொண்டர்கள்! -
பாஜகவுக்கு பல்ப் கொடுத்த எடப்பாடி.. வெயிட்டான தொகுதிகளை வச்சுகிட்டாரே! எந்தெந்த தொகுதிகளில் போட்டி? -
நடிகை கவுதமியை மீண்டும் ஏமாற்றிய அதிமுக – பாஜக.. ராஜபாளையம் ஜான் பாண்டியனுக்கு ஒதுக்கியதன் பின்னணி -
30 சிறுமிகளிடம் சில்மிஷம்.. தொக்காக சிக்கிய பாஜக கவுன்சிலர் மகன்! கோவாவில் ஷாக்












Click it and Unblock the Notifications