கடைசி நாளில் ஹேப்பி அறிவிப்பு? ஸ்டாலின் சர்ப்ரைஸ்? சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு
சென்னை: கடந்த மார்ச் 14-ம் தேதி தொடங்கிய தமிழ்நாடு சட்டப்பேரவை பட்ஜெட் கூட்டத்தொடர் இன்றுடன் நிறைவு பெறுகிறது. மார்ச் 14ல் நிதிநிலை அறிக்கை, அடுத்த நாளில் வேளாண் நிதி நிலை அறிக்கை பேரவையில் தாக்கலானது. இறுதி நாளான இன்று மானியக் கோரிக்கைகளுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து பேசுகிறார். இதில் புதிய அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
சட்டசபையில் மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்களும், அறிவிப்புகளும் வெளியாகி வருகின்றன.. அந்தவகையில், நேற்றைய தினம் உள்துறை, தீயணைப்பு துறை மீதான மானிய கோரிக்கைகள் தாக்கல் செய்யப்பட்டன.

அதற்கு முன்பு, கேள்வி நேரம் ரத்து செய்யப்பட்டு, தமிழக தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் சட்ட மசோதா, நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் சட்ட திருத்த மசோதா, ஜிஎஸ்டி சட்டத் திருத்த மசோதா, பதிவு சட்ட திருத்த மசோதா, கடைகள் மற்றும் நிறுவனங்கள் சட்ட திருத்த மசோதா போன்றவை தாக்கல் செய்யப்பட்டன.
ஒரே நாளில் 8 மசோதா
அதுமட்டுமல்லாமல், கும்பகோணத்தில் கலைஞர் பல்கலை அமைக்கும் மசோதாவும் தாக்கல் செய்யப்பட்டது. முதல்வர் ஸ்டாலினுக்கு பதிலாக, தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் சட்ட மசோதாவை, அமைச்சர் ரகுபதி தாக்கல் செய்தார்.. மொத்தத்தில், சட்டசபையில் நேற்று ஒரே நாளில், 8 சட்ட மசோதாக்கள் தாக்கல் செய்யப்பட்டிருந்தன.
நேற்றைய தினம் கேள்வி நேரம் முடிந்ததும் காவல், தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் துறை மீதான மானியக் கோரிக்கை விவாதம் நடைபெற்றது... இந்த விவாதத்தில் சட்டமன்ற கட்சி தலைவர்கள் பேசினார்கள்..
கொந்தளித்த எதிர்க்கட்சி
குறிப்பாக எதிர்க்கட்சித் தலைவர் பழனிசாமி பேசும்போது, "பொதுக்கூட்டம், மக்கள் பிரச்சினைகளுக்காக ஆர்ப்பாட்டம் நடத்த காவல் துறை அனுமதி மறுக்கிறது. காவல்துறைக்கு தெரியாமல் போதைப்பொருள், கஞ்சா விற்பனை நடைபெற வாய்ப்பு இல்லை. சட்டவிரோத மதுபான விற்பனையை தடுக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். மாணவர்கள் போதைக்கு அடிமையாகி சமூகவிரோத செயல்களில் ஈடுபடுகின்றனர்" என்றெல்லாம் குற்றச்சாட்டுகளை அடுக்கினார்.
பிறகு முதலமைச்சர் பேசியபோது, திமுக அரசில் தான் காவல்துறைக்கு பல்வேறு நலதிட்டங்கள் வழங்கப்பட்டதாக கூறினார்.. அத்துடன், காவலர் நலன் சார்ந்த திட்டங்கள் திமுக ஆட்சியில் செயல்படுத்தப்பட்டு வருகின்றன என்றும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் சட்டப்பேரவையில் தெரிவித்தார்.
முக்கிய அறிவிப்புகள்
இந்நிலையில், இன்று செவ்வாய்க்கிழமை ஏப்ரல் 29ம் தேதி காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவை கூடுகிறது. அவை கூடியதுமே நேரமில்லா நேரம் நடைபெறும்.. காவல், தீயணைப்பு மற்றும் மீட்புப் பணிகள் துறை மானிய கோரிக்கை விவாதத்திற்கு பதில் அளித்து முதலமைச்சர் மு க ஸ்டாலின் பேசுகிறார். தொடர்ந்து பிற்படுத்தப்பட்டோர், மிகவும் பிற்படுத்தப்பட்டோர், சிறுபான்மையினர் நலத்துறை மானிய கோரிக்கைகள் மீதான விவாதங்கள் நடைபெற உள்ளன..
இன்றுடன் சட்டப்பேரவை நிறைவு
இதற்கு அமைச்சர் சிவ.வீ.மெய்யநாதன் பதிலளித்து புதிய அறிவிப்புகளை வெளியிட உள்ளார். மேலும், இன்று பேரவையில், காவல் , தீயணைப்பு மற்றும் மீட்பு பணிகள் மானிய கோரிக்கை மீதான விவாதங்களுக்கு முதல்வர் ஸ்டாலின் பதிலளித்து அறிவிப்புகளை வெளியிடுகிறார். தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த மாதம் 14ம் தேதி முதல் தொடங்கி நடைபெற்று வரும்நிலையில், சட்டப்பேரவை கூட்டம் இன்றுடன் நிறைவு பெறுகிறது.
-
இந்தா ஆரம்பிச்சுட்டாங்கல்ல.. திருச்சி இடை தேர்தலில் திமுகவில் சீட் யாருக்கு! ரேசில் அன்பில் - இனிகோ! -
தவெகவின் முதல் ராஜ்யசபா எம்.பி யார்? 4 பேரில் ஒருவர் பெயரை 'டிக்' அடிக்க ரெடியாகும் விஜய்! -
20 நிமிடம்.. அஜித்குமார் தாயாருக்கு முதல்வர் விஜய் நேரில் அஞ்சலி.. சென்னை வீட்டுக்கு சென்று ஆறுதல் -
"விஜய்" பெயரை யாரும் சொல்லக் கூடாது.. வார்த்தையைவிட்ட துணை சபாநாயகர்.. பத்திரிகையாளர் சொன்ன பதில்! -
திமுகவை தோற்கடித்த 8 அதிர்ச்சி காரணங்கள்.. ஸ்டாலின் மேஜைக்கு போன இறுதி ரிப்போர்ட்.. உள்ளே ஷாக்! -
ஓரம் கட்டப்பட்ட சித்தராமையா.. ஆட்சி அமைக்க டி.கே.சிவகுமாருக்கு ஆளுநர் அழைப்பு! ஆட்டம் ஆரம்பம் -
விஜய் என் வீடு தேடி வந்து எனக்கு துணை முதல்வர் பதவி கொடுத்திருப்பார்! பிரேமலதா பரபரப்பு தகவல் -
என்னை தொட்டிருக்கவே கூடாது.. கோவையில் வேலுமணிக்கு தண்ணி காட்டும் எடப்பாடி.. அடித்து ஆடும் வேலுசாமி -
விஜய்-ஐ அடித்து மேலே வந்த சிவக்குமார்.. லீமா ரோஸ் கொடுத்த ஷாக்! -
கொஞ்சம் அவகாசம் கொடுங்க.. எங்களுக்கு ஓட்டு போட்டதற்கு பெருமையடைய வைப்போம்.. அமைச்சர் ரமேஷ் -
ஒரு 'நாளுக்கு' ரூ.22.63 லட்சம் சம்பளம் வாங்கும் இன்போசிஸ் ஊழியர்.. யாருப்பா அது! -
திருமணம் முதல் அஜித் தாயார் அஞ்சலி வரை! சுப, துக்க நிகழ்வுகளில் மட்டும் விஜய்யுடன் வருகிறாரா த்ரிஷா?












Click it and Unblock the Notifications