கிளாம்பாக்கத்தில் வருது பஸ் ஸ்டாண்டு.. அடேங்கப்பா இவ்வளவு வசதிகளா.. குஷியில் வண்டலூர் - செங்கல்பட்டு
சென்னை: திமுக அமைச்சர் சேகர்பாபு முக்கிய தகவல் ஒன்றினை வெளியிட்டுள்ளார்.. கிளாம்பாக்கத்தில் பஸ் ஸ்டாண்டு வேலைகள் இறுதிக்கட்டத்தை எட்டிவிட்டதாகவும் கூறியிருக்கிறார்.
தமிழக போக்குவரத்துதுறை பல்வேறு அதிரடிகளை செய்து வருகிறது.. அதிலும் மாவட்ட வாரியாக, ஆய்வுசெய்து, பொதுமக்களின் நன்மை கருதி புது புது அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறது.

அந்தவகையில், சமீபத்தில் சுற்றுலா தலமான மாமல்லபுரத்துக்கு முக்கிய அறிவிப்பு ஒன்று வெளியாகி இருந்தது.. மாமல்லபுரத்தில் போதிய வசதி இல்லாமல் பஸ் நிலையம் இருப்பதால், மாமல்லபுரம் புதுநகர் வளர்ச்சிக் குழுமம் சார்பில் 1992-ம் ஆண்டு புதிய பஸ் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டு முடங்கியது...
மாமல்லபுரம்: பிறகு, சென்னை பெருநகர வளர்ச்சி குழுமம் சார்பில் மாமல்லபுரத்தில் ரூ.60 கோடியில் புதிய பஸ் நிலையம் கட்ட திட்டமிடப்பட்டது.. இதற்கான ஆய்வும் கடந்த வருடமே நடத்தப்பட்டது.. இந்நிலையில் சமீபத்தில் நடந்த சட்டசபை கூட்டத்தில், சென்னை பெருநகர வளர்ச்சிக் குழும மானிய கோரிக்கையில், திருப்போரூர் விடுதலை சிறுத்தை கட்சி எம்எல்ஏ பாலாஜி, இந்த திட்டம் குறித்து தீர்மானம் கொண்டு வந்தார். இதற்கு பதிலளித்த, அமைச்சர் சேகர்பாபு, "மாமல்லபுரம் பஸ் நிலையம், ரூ.50 கோடியில் அமைக்கப்படும்" என்று அதிரடியாக அறிவித்தார்.
சித்தேரிமேடு: அதுபோலவே, இப்போது காஞ்சிபுரம் மாவட்டத்துக்கும் மகிழ்ச்சி செய்தி கிடைத்துள்ளது.. காஞ்சிபுரம் மாநகராட்சிக்குட்பட்ட சித்தேரிமேடு மற்றும் காரைப்பேட்டை ஆகிய பகுதியில் புதிய பஸ் நிலையம் அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது.. இதற்கான இடத்தையும் தேர்வு செய்ய வேலை நடந்து வருகிறது.. அத்துடன் அதற்கான இடத்தை அமைச்சர் தா.மோ.அன்பரசன் நேரில் பார்வையிட்டு நேற்று ஆய்வு செய்தார்.
இப்போது, அமைச்சர் சேகர்பாபு மற்றொரு மகிழ்ச்சி செய்தியை வெளியிட்டுள்ளார். அதாவது, சென்னை கோயம்பேடு பஸ் ஸ்டாண்டில் ஏற்படும் இட நெருக்கடி, போக்குவரத்து நெருக்கடியை போக்கும் வகையில் செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் அமைக்கப்பட்டு வருகிறது. இதன் இறுதிக்கட்ட பணிகளைதான், சென்னைப் பெருநகர வளர்ச்சிக் குழும அமைச்சர் (ம) தலைவரும் மற்றும் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சருமான பி.கே.சேகர்பாபு நேரில் சென்று ஆய்வு மேற்கொண்டார்.

சேகர்பாபு: பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர், "முதல்வர் ஸ்டாலினின் அவர்களின் வழிகாட்டுதலின்படி, செங்கல்பட்டு மாவட்டம், கிளாம்பாக்கத்தில் ரூ.393.74 கோடி மதிப்பீட்டில் அமைக்கப்பட்டு வரும் புதிய பேருந்து முனையம் "கலைஞர் நூற்றாண்டு பேருந்து முனையம்" எனும் பெயரில் மக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட உள்ளது. சென்னை கோயம்பேடு மற்றும் அதன் சுற்றுப்புற பகுதியில் போக்குவரத்து நெரிசலை குறைக்கும் பொருட்டு தெற்கு நோக்கிச் செல்லும் பேருந்துகளுக்காக வண்டலூர் அருகே உள்ள கிளாம்பாக்கத்தில் சுமார் 59.86 ஏக்கர் பரப்பளவில் ரூபாய் 393.74 கோடி மதிப்பீட்டில் புதிய பேருந்து முனையம் கட்டப்பட்டு வருகிறது.
பஸ் ஸ்டாண்டுகள்: இதன் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ஜுன் மாதம் பொது மக்களின் பயன்பாட்டிற்கு திறக்கப்பட தயாராக உள்ளது.. இம்முனையத்தில் புறநகர் பேருந்துகளுக்காக 28.25 ஏக்கர் பரப்பளவில் 226 புறநகர் பேருந்துகள் (அரசு பேருந்துகள்-164, ஆம்னி பஸ்கள்-62) நிறுத்துவதற்க்காக 8 நடைமேடைகள் அமைக்கப்பட்டுள்ளன... இந்த நிலையத்தில், புறநகர் பேருந்துகளுக்காக தனி பணிமனை உள்ளது. இந்த பஸ் ஸ்டாண்டில் மாநகர பேருந்துகளுக்காக 7.40 ஏக்கர் பரப்பளவில் 11 நடைமேடைகளுடன் மாநகர பஸ்கள் வந்து செல்வதற்கு வசதிகள் 60 அமைக்கப்பட்டுள்ளன.
தனி அலுவலக கட்டிடம், பாதுகாக்கப்பட்ட குடிநீர் வசதி, 2 மின் தூக்கிகள், 2 நகரும் படிக்கட்டுகள்.. கழிவறைகள், மாகர பேருந்துகளுக்காக தனி பணிமனை போன்ற வசதிகள் உள்ளது. இம்முனையத்தில் 2 அடித்தளம், தரைத்தளம் மற்றும் முதல் தளத்துடன் நவீன வசதிகளுடன் கூடிய பிரதான கட்டிடம் அமைக்கப்பட்டுள்ளது. அடித்தளத்தில் 2,769 இருசக்கர வாகனங்கள், 324 நான்கு சக்கர வாகனங்கள் நிறுத்த இட வசதி அமைக்கப்பட்டுள்ளது.
தரைத்தளம்: மேலும், தரைத்தளத்தில் 53 கடைகள், 2 உணவகங்கள், 2 துரித உணவகங்கள். அவசர சிகிச்சை மையம், மருந்தகம் பொருள் பாதுகாப்பு அறை, தாய்ப்பாலூட்டும் அறை, பயணச்சீட்டு வழங்கும் இடம், பணம் எடுக்கும் இயந்திரம், நேரக்காப்பாளர் அறை, கண்காணிப்பு கேமரா அறை, பொது கழிவறைகள் போன்ற அடிப்படை வசதிகள் செய்யப்பட்டுள்ளது. 6 பயணிகள் மின் தூக்கிகள், 2 சர்வீஸ் மின்தூக்கிகள் மற்றும் நகரும் படிக்கட்டுகள் போன்ற நவீன வசதிகள் செய்யப்பட்டுள்ளன.
முதல் தளத்தில் 46 கடைகள், 1 உணவகம், 4 பணியாளர் ஓய்வறைகள், ஆண், பெண் பயணிகளுக்காக தனி ஓய்வறைகள் மற்றும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. மேலும் 144 பணியில்லா பேருந்துகள் நிறுத்த தனி இடம் மற்றும் கழிவறைகள் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்துகள் எரிபொருள் நிரப்புவதற்கு இரண்டு எரிபொருள் நிரப்பும் நிலையம் அமைக்க இடம் ஒதுக்கப்பட்டுள்ளது.
மின் விளக்குகள்: மழைநீர் கால்வாய், மழைநீர் சேகரிப்பு தொட்டி, கழிவு நீரேற்று நிலையம், கழிவு நீர் சுத்திகரிப்பு நிலையம், குடிநீர் சுத்திகரிப்பு நிலையம், துணைமின் நிலையம், டீசல் ஜெனரேட்டர் போன்ற வசதிகள் அமைக்கப்பட்டுள்ளன. மேலும் இரவு நேர பயன்பாட்டிற்க்காக அனைத்து சாலைகளிலும் தெருவிளக்குகள் மற்றும் உயர் கோபுர மின் விளக்குகளும் பொறுத்தப்பட்டுள்ளது. புல் தரையுடன் கூடிய பசுமை பூங்கா அமைக்கப்பட்டுள்ளது. இப்பேருந்து இம்முனையம் 95% பணிகள் நிறைவு பெற்றுள்ளது" என்றார் அமைச்சர் சேகர் பாபு.
-
தமிழக சட்டமன்ற வரலாற்றில் தவறான முன்னுதாரணம்.. சபாநாயகர் முடிவுக்கு விகே சசிகலா எதிர்ப்பு -
டாஸ்மாக்கில் பாட்டிலுக்கு 10 ரூபாய் பிரச்சனைக்கு தீர்வு.. இயந்திரங்களை நிறுவ அரசு திட்டம்.. சாத்தியமா? -
இந்துக்களின் கயிறு உறுத்துகிறா? முதல்வர் விஜய் அதிகாரத்தை இழக்க நேரிடும்.. வானதி சீனிவாசன் வார்னிங் -
சட்டமன்றத்துக்கே 11 மணிக்கு தான் வருவார்.. உதயநிதி எல்லாம் பேசலாமா.. செங்கோட்டையன் காட்டம் -
பாரதிராஜாவின் இறுதி சடங்கில் மகள்- மருமகள் சண்டை? என்ன நடந்தது? கங்கை அமரன் கோபத்துக்கு இதுதான் காரணமா? -
சேலத்தில் விபச்சாரத்தில் தள்ளப்பட்ட 50 பெண்கள்? பல ஆபாச வீடியோக்கள்! தவெக மணிகண்டன் சிக்கியது எப்படி -
"காலம் எனக்கு ஆப்பு வைத்து விட்டது.." கடவுள் தான் காப்பாற்றினாரு..! பாடகி ராஜலட்சுமி உருக்கம் -
திமுக மகளிரணி கூட்டத்திற்கு வந்து! வரவேற்க யாரும் இல்லாததால் திரும்பிச் சென்ற துரைமுருகன் -
ரூ.115 லட்சம் கோடி சொத்து இருந்து என்ன பயன்.. எலான் மஸ்க் வீட்டை பார்த்தீங்களா.. ஒரு 3BHK வீட்டை விட சிறியது? -
"விஜய் ஒழிக".. தமிழக முதல்வருக்கு எதிராக கர்நாடகாவில் கொந்தளித்த கன்னட அமைப்பினர்! அதிரடி கைது -
விவாகரத்து பேப்பர்களை கிழித்தெறிந்து கணவரை கட்டி பிடித்த மனைவி! கோர்ட் வாசலில் நடந்த உருக்கமான செயல் -
காவிரியில் மேகதாது அணை கட்டுவதை தடுக்க விஜய்க்கு வேல்முருகன் தந்த யோசனை












Click it and Unblock the Notifications