அரசு பஸ்ஸில் "150" வருது.. யாருக்கு பாருங்க.. போக்குவரத்து துறை மாஸ்.. தமிழ்நாட்டுக்கே மகிழ்ச்சி
சென்னை, மாநகர போக்குவரத்துக்கழகத்தின் கீழ் மட்டுமே, 629 வழித்தடங்களில் 3,233 மொத்தம் பஸ்கள் இயக்கப்படுகின்றன... இவைகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிறைய மாற்றங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
சென்னையில் மாநகர பஸ்களில் மாற்றுத்திறனாளிகளுக்கான வசதிகள் குறித்து தொடர் கண்காணிப்பு செய்ய வேண்டும் என்ற கோரிக்கை சமீப காலமாகவே வலுத்து வந்தது.

சென்னை, மாநகர போக்குவரத்துக்கழகத்தின் கீழ் மட்டுமே, 629 வழித்தடங்களில் 3,233 மொத்தம் பஸ்கள் இயக்கப்படுகின்றன... இவைகளில் பொதுமக்கள் பயன்பெறும் வகையில் நிறைய மற்றங்கள் அடிக்கடி நடந்து வருகின்றன.
ஸ்பெஷல் ஏற்பாடுகள்: குறிப்பாக பெண்கள், மாற்றுத்திறனாளிகள் போன்றோரின் நலன் கருதி ஜிபிஎஸ், சிசிடிவி கேமரா, எமர்ஜென்சி பட்டன், ஊன்றுகோல் வைப்பதற்கான வளையம் போன்றவை ஸ்பெஷலாக அமைக்கப்பட்டுள்ளன... ஆனால் இவையெல்லாம் முறையாக நடைமுறையில் உள்ளதா? என்று கண்காணிப்பதில்லையாம்..
ஒருசில மாநகர பேருந்துகளில், மாற்றுத்திறனாளிகளின் ஊன்றுகோல் வைப்பதற்காக இடவசதி உள்ளது என்றாலும், இது படிக்கட்டை ஒட்டி அமைந்திருக்கிறதாம். தடுப்பு எதுவுமே இல்லாததால், பஸ் வேகமாக சென்றாலும், ஊன்றுகோல் தவறி விழுந்துவிடும்.. அல்லது படியில் ஏறுவோருக்கு இடையூறு ஏற்பட்டுவிடும். அதனால், பயணிகள் கால் வைக்கும் இடத்தில் ஏதேனும் தடுப்புகள் இருந்தால், ஊன்றுகோலால் யாருக்கும் எந்த தொந்தரவும் இருக்காது என்று தமிழக அரசுக்கு கோரிக்கைகள் விடுக்கப்பட்டு வந்தன.
மாற்றுத்திறனாளிகள்: இப்படிப்பட்ட சூழலில்தான், அமைச்சர் சிவசங்கர் ஒரு அறிவிப்பு வெளியிட்டிருந்தார். அதில், 500 மின்சார பஸ்கள் உட்பட 2,271 பேருந்துகள் விரைவில் வாங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்றும், இதில், மாற்றுத்திறனாளிகளுக்காக 420 பேருந்துகள் விரைவில் இயக்கப்படும் என்றும் அறிவித்திருந்தார்..
இதற்கு பிறகு, மாற்றுதிறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயன்படுத்துவதற்குரிய அனைத்து வசதிகளுடன் கூடிய 552 புதிய தாழ் தள பேருந்துகளை ஜெர்மன் வங்கி நிதி உதவியுடன் கொள்முதல் செய்வதற்கு ஆணை வழங்கப்பட்டுள்ளதாக போக்குவரத்துத்துறை அமைச்சர் சிவசங்கர் கூறியிருந்தார்.
அமைச்சர் சிவசங்கர்: இப்படிப்பட்ட சூழலில், அமைச்சர் சிவசங்கர் இன்னொரு மகிழ்ச்சி தகவலை வெளியிட்டுள்ளார்.. இது தொடர்பாக அவர் வெளியிட்டிருக்கும் அறிக்கையில் உள்ளதாவது:
தமிழ்நாடு அரசு போக்குவரத்து கழகங்களின் சார்பில் பயணிகளின் பேருந்து சேவையை பூர்த்தி செய்யவும், மாற்றுத்திறனாளிகளின் நலனுக்காக எளிதில் பயன்படுத்துவதற்க்குரிய அனைத்து வசதிகளுடன் கூடிய 150 புதிய தாழ்தள பேருந்துகளை ரூ.135.48 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு அரசு நிதி உதவியுடன் கொள்முதல் செய்வதற்கு உற்பத்தியாளர்களுக்கு ஆணை வழங்கப்பட்டுள்ளது.
அறிவிப்பு: இந்த முயற்சிகளின் வாயிலாக தமிழ்நாடு அரசு போக்குரவரத்து கழகங்களின் மூலமாக வழங்கப்படும் பொதுப் போக்குவரத்து சேவைகள் தமிழகத்தை முதன்மையான நிலைக்கு உயர்ந்திடும் என தெரிவித்துக் கொள்ளப்படுகிறது" என்று அதில் தெரிவித்திருக்கிறார்.
-
தனியார் பள்ளிகள் லஞ்சம் தரவேண்டாம்.. அதற்கு பதிலாக.. ராஜ்மோகன் உத்தரவால் வரப்போகும் மாற்றம் -
"ஜனவரி 1 முதல் ஆர்.எஸ்.பாரதி அரை மீசை பாரதி என்று அழைக்கப்படுவார்" - மாணிக்கம் தாகூர் கிண்டல்! -
அரசு ஊழியர்களுக்கு அழுத்தம் ஏற்படாது.. சேவை பெறும் உரிமைச் சட்டம் தான் பெஸ்ட்.. அன்புமணி -
ஸ்டாலின் கையில் ஆழ்வார்பேட்டை ரிப்போர்ட்! அப்பவே சொன்னோம்ல.. கழண்டு விழுகிறதா திமுக கூட்டணி கியர்? -
கூட்டுறவு வங்கி பயிர்க்கடன் தள்ளுபடி.. அரசாணையில் குளறுபடி? "அப்பவே சொன்னோமே" சீறும் கோவை விவசாயிகள் -
டிசிஎஸ் சைலெண்டாக செய்யும் விஷயம்.. 50000 ஊழியர்களுக்கு டார்கெட்.. தனி பிரிவு உருவாக்க முடிவு! -
"நீட் வேண்டாம்.. +2 மார்க் அடிப்படையில் மருத்துவ சேர்க்கை.." பிரதமர் மோடியிடம் விஜய் வைத்த கோரிக்கை! -
என் சொந்த பணத்தையே பயன்படுத்துங்க.. விஜய்யின் டெல்லி பயணம்.. தனியார் ஜெட்டுக்கு சொந்த காசில் செலவு? -
"5 லட்சம் AI ஏஜெண்டுகள்.." இனி முன்பு போல ITல் வேலை இருக்காது.. வெளிப்படையாக பேசிய டிசிஎஸ் சேர்மேன் -
2 மனைவிகளும் எனக்கு வேணும் சார்.. ஒரு நிமிஷம் போலீசுக்கே தலைசுத்திருச்சு.. திகைத்த திண்டுக்கல் -
இந்தியா கூட்டணியில் இணையுங்கள்.. அழைத்த ராகுல்.. நோ சொன்ன தவெக விஜய்.. என்ன காரணம்? -
பிராய்லர் சிக்கன் சாப்பிட்டால் சிறுமிகள் சீக்கிரம் பருவமடைகிறார்களா? 65 சாப்பிடலாமா? FSSAI விளக்கம்?












Click it and Unblock the Notifications