சர்க்கரை அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி.. ரேஷன் கார்டு தொலைஞ்சிடுச்சா? ரூ.50 போதுமே.. தமிழக அரசு அதிரடி
சென்னை: புதிய ரேஷன் கார்டுகளுக்கு விண்ணப்பித்துள்ளோரின் எண்ணிக்கை அதிகமாகி வருகிறது.. குறிப்பாக, மகளிர் உரிமை திட்டத்தை பெறுவதற்காக 3 லட்சத்திற்கும் அதிகமானவர்கள் புதிய குடும்ப அட்டை கேட்டு விண்ணப்பித்துள்ளனர். கடந்த 4 ஆண்டுகளில் புதிதாக 19 லட்சம் குடும்ப அட்டைகள் வழங்கப்பட்டுள்ள நிலையில், முக்கிய தகவல்களை தமிழக அரசு தற்போது வெளியிட்டிருக்கிறது. இதுகுறித்து உணவுத்துறை அமைச்சர் பேரவையில் தெரிவித்துள்ளார்.
தமிழக சட்டப்பேரவையில் தொடர்ந்து முக்கிய அறிவிப்புகள் வெளியாகி வருகின்றன.. குறிப்பாக, ரேஷன் அட்டைதாரர்களுக்கு மகிழ்ச்சி தகவல்களும் வெளியிடப்பட்டது.. கூட்டுறவுத்துறை அமைச்சர் பெரியகருப்பன் கடந்த வாரம் பேசும்போது, "ஆந்திரா, தெலுங்கானாவில் வீடுகளுக்கே சென்று ரேஷன் பொருள்கள் வழங்கும் திட்டம் நடைமுறையில் உள்ளது. அதுபோல, அந்த திட்டங்களை தமிழகத்திலும் ஆராய்ந்து செயல்படுத்த ஆலோசிக்கப்பட்டு வருகிறது.

2 ஹேப்பி நியூஸ்
திமுக ஆட்சியமைந்த பிறகு இதுவரை 3 ஆயிரத்திற்கும் அதிகமான நியாய விலைக்கடைகள் தொடங்கப்பட்டுள்ளன..தமிழகத்தில் உள்ள 34,902 ரேசன் கடைகளில், 6,218 ரேசன் கடைகள் தனியார் மற்றும் வாடகை கட்டிடத்தில் செயல்பட்டு வருகிறது. இதில் 2,545 கடைகளுக்கு சொந்த கட்டிடம் கட்டும் பணி நடைபெற்று வருகிறது. அனைத்து கடைகளுக்கும் சொந்தக் கட்டிடம் கட்டும் பணி மேற்கொள்ளப்படும்" என்று கூறியிருந்தார்.
இந்நிலையில், தற்போது உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி 2 குட்நியூஸ் வெளியிட்டுள்ளார்.. அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், "நடப்பு பருவத்தில், 3,393 நெல் கொள்முதல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளன. இதுவரை, 3.83 லட்சம் விவசாயிகளிடம், 29.46 லட்சம் டன் நெல் கொள்முதல் செய்யப்பட்டு, 7,186 கோடி ரூபாய் வழங்கப்பட்டுள்ளது. திமுக ஆட்சி பொறுப்பேற்ற பிறகு, 19.62 லட்சம் புதிய ரேஷன் கார்டுகள் வழங்கப்பட்டுள்ளன. விரைவில், புதிய கார்டுகள் வழங்கப்படும்.
கார்டுகள் பெயர் நீக்கம்
இதுவரை, 6.11 லட்சம் கார்டுகள் ரத்து செய்யப்பட்டு, 27.75 லட்சம் பேரின் பெயர்கள் நீக்கம் செய்யப்பட்டுள்ளன. மேலும், 16.10 லட்சம் முன்னுரிமையற்ற ரேஷன் கார்டுகள், முன்னுரிமை கார்டுகளாக வகை மாற்றப்பட்டுள்ளன. ஒரே நாடு, ஒரே ரேஷன் கார்டு திட்டத்தின் கீழ், வெளி மாநிலங்களில் இருந்து, இங்கு வந்து பணிபுரியும், 15.78 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்" என்று தெரிவித்துள்ளார். அதேபோல, புதிய குடும்ப அட்டைகள் பொதுமக்களுக்கு எளிதாக கிடைக்க தமிழக அரசு தொடங்கியுள்ளது. இது தொடர்பாக உணவு பொருள் வழங்கல் துறை அமைச்சர் சக்கரபாணி மற்றொரு அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.
தொலைந்த ரேஷன் அட்டைகள்
தமிழக சட்டப்பேரவையில் மானிய கோரிக்கை விவாதத்தின் போது பேசிய அமைச்சர், "குடும்ப அட்டை தொலைந்து விட்டால் வட்டாட்சியர் அலுவலகத்திற்கும், மாநகராட்சியில் துணை ஆட்சியர் அலுவலகத்திற்கும் அலைய வேண்டிய நிலை உள்ளது. இதன் காரணமாக காலம் விரயம் ஆகும், விண்ணப்பத்திற்காக பணம் கொடுக்க வேண்டிய நிலை உள்ளது. மேலும் புதிய அட்டை வந்துவிட்டதா என்று பார்ப்பதற்கு 2 அல்லது 3 முறை வட்டாட்சியர் அலுவலகத்திற்கு அலைய வேண்டும்.
எனவே தொலைந்து போன அட்டைக்கு பதிலாக நகல் அட்டையை ஆன்லைன் மூலமாக பெறுவதற்கான திட்டம் தொடங்கி வைக்கப்பட்டிருக்கிறது. அந்தவகையில், ஆன்லைன் மூலம் 50 ரூபாய் பணம் கட்டினால் அஞ்சல் துறை மூலமாக வீடுகளுக்கே, அட்டைகள் வந்து சேர்ந்துவிடும். இந்த திட்டத்தின் மூலமாக 9 லட்சத்திற்கும் மேற்பட்டவர்கள் தொலைந்து போன அட்டைக்கு பதிலாக புதிய அட்டையை பெற்றுள்ளனர்" என்று தெரிவித்தார்.












Click it and Unblock the Notifications