அதானியை மோடி அணைப்பார்..மக்கள் பசுவை அணைக்க வேண்டும்..மகிழ்ச்சி..சு.வெங்கடேசன் எம்.பி கிண்டல்
அதானியை மோடி அணைப்பார்.மக்கள் பசுவை அணைக்க வேண்டும் என்று மதுரை எம்.பி சு.வெங்கடேசன் தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ளார்.
சென்னை: மத்திய அரசின் கட்டுப்பாட்டில் செயல்பட்டு வரும் விலங்குகள் நலவாரியம் புதிய அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதில் பசுவை கட்டிப்பிடித்தால் உணர்ச்சி பெருக்கு அதிகரித்து மகிழ்ச்சி கிடைக்கும். இதனால் பிப்ரவரி 14ம் தேதியை பசு அணைப்பு தினமாக கொண்டாட அழைப்பு விடுத்துள்ளது. இந்த அறிவிப்பு பற்றி தனது ட்விட்டர் பக்கத்தில் சு.வெங்கடேசன் எம்.பி கிண்டலாக பதிவிட்டுள்ளார்.
மத்திய அரசு பசு பாதுகாப்புக்கு முக்கியத்துவம் அளித்து வருகிறது. மத்திய மீன்வளம், கால்நடை மற்றும் பால்வளத்துறை அமைச்சகத்தின் கீழ் செயல்பட்டு வரும் விலங்குகள் நலவாரியம் செயல்பட்டு வருகிறது. இந்த நலவாரியம் சார்பில் பொதுமக்களுக்கு புதிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

இந்திய கலாசாரம், கிராமப்புறங்களின் பொருளாதாரம் ஆகியவற்றின் முதுகெலும்பாக பசு உள்ளது. மேலும் நமது வாழ்க்கையை தாங்கும் வகையில் பல்லுயிர் பெருக்கத்துக்கு உதவியாக இருக்கிறது. இதனை நாம் அனைவரும் அறிந்துள்ளோம். மனிதர்களுக்கு எல்லா செல்வங்களையும் அளிப்பதோடு, தாயை போல் ஊட்டமளிக்கும் பணியை ‛கோமாதா' எனும் பசு மேற்கொண்டு வருகிறது.
மேற்கத்திய கலாசார தாக்கத்தால் வேதமரபுகள் சில அழிவின் விளிம்பில் உள்ளன. மேற்கத்திய கலாசாரத்தால் நமது கலாசாரம், பாரம்பரியம் என்பது மறக்கடிக்கப்பட்டுள்ளது. பசுவை கட்டிப்பிடித்தால் உணர்ச்சி பெருக்கு ஏற்படும். அதோடு நமக்கு மகிழ்ச்சி அதிகரிக்கும். எனவே அனைவரும் பசுக்களின் முக்கியத்துவத்தை மனதில் கொண்டு செயல்பட வேண்டும். மேலும் மகிழ்ச்சியான வாழ்க்கை மற்றும் நேர்மறையான ஆற்றல் பெற பிப்ரவரி 14ம் தேதியை பசு அணைப்பு தினமாக (Cow Hug Day) கொண்டாட வேண்டும்'' என கூறப்பட்டுள்ளது.
இந்த அறிவிப்பு பல்வேறு விவாதங்களை ஏற்படுத்தியுள்ள நிலையில் மதுரை தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் சு.வெங்கடேசன் தனது ட்விட்டர் பக்கத்தில் இந்தியாவில் "மகிழ்ச்சி பொங்க" இரண்டு வழிமுறைகளை ஒன்றிய அரசு இன்று வெளியிட்டுள்ளது. அதானியை மோடி அணைப்பார். மக்கள் பசுவை அணைக்க வேண்டும். இதுவல்லவோ அரசு என்ற குறிப்பிட்டுள்ளார்.
இதே போல மோடியின் பேச்சு குறித்தும் சு.வெங்கடேசன் விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் ஜனாதிபதி திரெளபதி முர்மு அவர்களின் உரைக்கு பிரதமர் நரேந்திர மோடி நேற்று பதிலளித்து பேசினார். அப்போது முந்தைய காங்கிரஸ் ஆட்சியை கடுமையாக விமர்சனம் செய்தார். நாட்டில் நிலவும் வேலையில்லா திண்டாட்டத்தை மத்திய அரசு கண்டுகொள்ளவில்லை என காங்கிரஸ் உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கூறி வரும் நிலையில் பிரதமர் நரேந்திர மோடி தனது உரையில் பதிலடி கொடுத்தார். புலியை வேட்டையாட சென்ற 2 பேரின் கதையை கூறி முந்தைய காங்கிரஸ் ஆட்சியை பிரதமர் மோடி கடுமையாக சாடினார்.
மோடியின் பேச்சு குறித்து தனது ட்விட்டரில் பதிவிட்டுள்ள சு.வெங்கடேசன் எம்.பி, அதானியின் மீதும் தனது மீதும் முன்வைக்கப்பட்ட எந்த குற்றச்சாட்டுக்கும் பிரதமர் பதில் சொல்லவில்லை என்பது மட்டுமல்ல. "தேசத்தின் பெருமையின் மீது தொடுக்கப்பட்ட தாக்குதல்"என அதானி சொன்னதையே திரும்பச்சொன்னார் என்று குறிப்பிட்டுள்ளார். குற்றச்சாட்டின் உண்மை தன்மைக்கு இந்த ஆதாரம் போதும் என்றும் சு.வெங்கடேசன் பதிவிட்டுள்ளார்.
-
அச்சத்தை கிளப்பிய வளைகுடா போர்! எரிபொருள் விநியோகம் குறித்து.. நாளை முதலமைச்சர்களுடன் மோடி ஆலோசனை! -
நமக்கு புடிச்சவங்க, வாழ்க்கையை விட்டு போயிடுவாங்கன்னு தெரிஞ்சும்.. உருக்கமாக திரிஷா வெளியிட்ட வீடியோ! -
வேளச்சேரி - பரங்கிமலை MTRS.. 80 நிமிடப் பயணம் வெறும் 15 நிமிடம்.. எஸ்ஜி சூர்யாவின் நிஜ அனுபவம் -
சர்க்கரை அட்டைதாரர்களுக்கு சூப்பர் வசதி… ரேஷன் கடைக்கு போறீங்களா? தமிழக அரசின் திடீர் உத்தரவு -
தமிழ் புத்தாண்டு பலன்: கன்னி ராசிக்கு 100 மார்க்.. ரேஞ்சே மாறப்போகுது.. பொற்காலம் ஆரம்பம் -
கோவை வடக்கு, மயிலாப்பூர்.. பாஜக போட்டியிடும் 27 தொகுதிகள் எவை? எடப்பாடி பழனிசாமி வெளியிட்ட அறிவிப்பு -
பிள்ளையை கிள்ளி விட்ட இஸ்ரேல்.. தொட்டிலை ஆட்டும் அமெரிக்கா! வெறி கொண்டு அடிக்கும் ஈரான்.. குண்டு மழை -
உளவுத்துறை சொன்னது என்ன? 155 சீட் பின்னணியில் அமித்ஷா தந்த கிரீன் சிக்னல்! எடப்பாடி முகம் பிரகாசம் -
3 அமைச்சர்களை எதிர்க்கும் தமாக! அதிமுக – பாஜக வழங்கிய தொகுதியை கவனிச்சீங்களா.. 5 தொகுதியும் கடினம் -
கரண்ட் பில் இலவசம்? இனி கட்ட வேண்டாமா? மத்திய அரசு ₹78,000 மானியம்! உங்க வீட்டிற்கு எப்படி வாங்குவது -
பிடுங்கப்படும் டிரம்பின் பவர்! அதிபர் பதவியிலேயே இருந்தாலும் அதிகாரம் இருக்காது.. நிலைமை மோசம்! -
நல்ல காலம் பொறக்குது.. தங்கம், வெள்ளியை முடிஞ்ச அளவு வாங்குங்க! ‘கோல்டுமேன்’ அடுக்கும் காரணங்கள்!












Click it and Unblock the Notifications