வேற லெவல் மாஸ்.. 2 பேருமே இறங்கி வந்துட்டாங்க.. அதிமுகவில் "ஆன் தி வே"யில் குஷி.. சபாஷ் எடப்பாடி
சென்னை: அதிமுக கூட்டணி பேச்சுவார்த்தைகள் வேகம் எடுத்து வருகின்றன.. அந்தவகையில் தேமுதிக, பாமக கூட்டணி தொடர்பாக நல்ல செய்தி என்று எதிர்பார்க்கப்படுகிறது.
பாமக, தேமுதிகவுடன் ஏற்கனவே மறைமுக பேச்சுவார்த்தைகளை நடத்தி முடித்துவிட்டு, நேரடி பேச்சுவார்த்தைகளையும் துவக்கியிருக்கிறதாம்.. அந்தவகையில், நேற்றைய தினம் சில தகவல்கள் கசிந்திருந்தன.
தேமுதிக: அதாவது, தேமுதிகவுக்கு ஆரம்பத்தில், 3 சீட்டுகளை மட்டுமே ஒதுக்க அதிமுக முடிவு செய்திருந்த நிலையில், 4 தொகுதிகள் வரை ஒதுக்க முன்வந்துள்ளதாம்.. குறிப்பாக, கிருஷ்ணகிரி, விருதுநகர், கடலூர், திருச்சியை ஒதுக்க முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

இதில், விருதுநகர் தொகுதியில் சுதீஷ் களமிறங்கலாம் என்று கூறப்பட்ட நிலையில், உடல்நிலை காரணமாக சுதீஷ் போட்டியிடும் வாய்ப்பு குறைவு என்கிறார்கள். இதற்கு பதிலாக எம்பி சீட்டை பிறகு கேட்டு பெற்றுக்கொள்ளலாம் என்ற தேமுதிக நினைக்கிறதாம். மேலும், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம் தொகுதிகளில் ஏதாவது இரண்டினை ஒதுக்குமாறு தேமுதிக கேட்கிறதாம்.
பாமக கோரிக்கை: ஆனால், பாமகவும் இதே தொகுதிகள் வேண்டும் என்று கேட்கிறதாம்.. இதனால், பேச்சுவார்த்தையில் இழுபறி நீடிப்பதாக சில தகவல்கள் வலம்வந்தன.
இந்நிலையில், இன்றைய தினம் பாமக, தேமுதிகவுடனான கூட்டணி முடிவாகிவிடும் என்கிறார்கள்.. பாமக, தேமுதிக கட்சிகளை பொறுத்தவரை, வடமாவட்டங்களில் வலுவான செல்வாக்கை பெற்று வருகிறது. அதனால்தான், வட மாவட்டங்களில் 2 தொகுதிகளையாவது ஒதுக்க வேண்டும் என்று அதிமுக மேலிடத்திடம் அழுத்தம் தந்து வருவதாக தெரிகிறது.
செல்வாக்கு தொகுதி: இதில், தேமுதிகவைவிட பாமகவின் வாக்கு வங்கி அதிகமானவை.. பாமகவுக்கான செல்வாக்கும் வடமாவட்டங்களில் அபாரமானவை.. திமுகவுக்கு எதிரான ஒரு கூட்டணியை உருவாக்க வேண்டுமானால், பாமக போன்ற பலம்வாய்ந்த கட்சிகளை கூட்டணிக்குள் கொண்டுவர வேண்டிய அவசியம், இன்று அதிமுகவுக்கு எழுந்துள்ளது. பாஜகவும் இதை மையப்படுத்தியே பாமகவுக்கு வலையை வீசினாலும், அதிமுக இதில் முந்திக்கொண்டுள்ளது.
கடந்த முறை போலவே, 7 + 1 சீட்களை தருவதாக சொல்லி, கூட்டணிக்குள் கொண்டுவந்துள்ளதாக தெரிகிறது. அந்தவகையில், தருமபுரி, ஆரணி, அரக்கோணம், சிதம்பரம் (தனி), விழுப்புரம் (தனி), சேலம், கள்ளக்குறிச்சி என 7 தொகுதிகளை ஒதுக்குமாறு கோரி பாமக தரப்பிலும் லிஸ்ட்டும் தரப்பட்டுள்ளதாக சொல்கிறார்கள். இப்படி ஒரு லிஸ்ட்டில்தான் குழப்பம் கிளம்பி உள்ளது.
லிஸ்ட்: பாமக தந்த லிஸ்ட்டில் உள்ள பெரும்பாலான தொகுதிகளைதான் தேமுதிகவும் கேட்டு வருகிறது. இதுகுறித்துதான் இன்றைய தினம் இரு தரப்பிலும் பேசி முடிவெடுக்கப்படும் என தெரிகிறது.. அநேகமாக, கள்ளக்குறிச்சி, கடலூர், திருச்சி, விருதுநகர் போன்ற தொகுதிகளை தேமுதிக கேட்டிருப்பதால், அந்த தொகுதிகளையும் அதிமுக ஒதுக்க வாய்ப்புள்ளதாம்.
ஆக மொத்தம், பாமக, தேமுதிக என 2 கட்சிகளுமே இறங்கிவந்துவிட்டதால், அதிமுக கூட்டணி விரைவில் முடிவாகும் என்று தெரிகிறது.. எடப்பாடி பழனிசாமிக்கும் பெருத்த நிம்மதி ஏற்பட்டுவிடும் என நம்பப்படுகிறது.. பொறுத்திருந்து பார்ப்போம்..!!!












Click it and Unblock the Notifications